23/09/2019 2:49 PM

கன்னியாகுமரி வரும் மோடி! பாஜக., தொண்டர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!
இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார் பிரதமர் மோடி. அவர் வருகைக்கு மதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ள நிலையில், அங்கே பாஜக., தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீஸாருக்கும் பாஜக.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கன்னியாகுமரிக்குச் செல்லும் முதல்கட்ட நுழைவான ஆரல்வாய்மொழியில் பாஜக.,வினர் ஏராளமானோர் திரண்டதால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மீண்டும் டிவிட்டரில் கோபேக் மோடி ஹேஷ்டாக்கை திமுக.,வினர் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

மோடியின் வருகைக்கு எதிராக திமுக.,வின் ஐ.டி.பிரிவினர் முழு நேரத் தொழிலாக இதனைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். மதிமுக.,வினர் முழூ நேரத் தொழிலாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்ப்புகளைக் கடந்து ரூ.40,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் மோடி, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திற்கு செல்கிறார்.

இந்த விழாவில் மதுரை – சென்னை எழும்பூர் இடையிலான தேஜஸ் ரயில் சேவையை காணொளிக் காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த அதி நவீன ரயில் மதுரையில் இருந்து ஆறரை மணி நேரத்தில் எழும்பூரைச் சென்றடையும். ஜிபிஎஸ், தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, பயோ கழிவறைகள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் இந்த ரயிலில் இடம் பெற்றுள்ளன.

மேலும், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரூ.208 கோடி செலவில் புதிய ரயில்பாதை மற்றும் பாம்பனில் ரூ.250 கோடி செலவில் ரயில் சேவைக்காக புதிய பாலம் கட்டுவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

மதுரை – செட்டிகுளம், செட்டிகுளம் – நத்தம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அடிக்கல், மதுரை – ராமநாதபுரம் நான்குவழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தல் உள்ளிட்ட ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.Recent Articles

அரபிக்கடலில் உருவாகும் ஹிகா புயல்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரப் பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதி, மேற்கு மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், கிழக்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

உயிர் காக்க பறந்து வரும் இரத்தம்; மருந்து பொருட்கள்.!

அந்த பாக்கெட் 4-6 மணி நேரத்திற்கு பதிலாக 30 நிமிடங்களில் தேவையில் இருக்கும் நோயாளியை சென்று அடையும்" என தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

#தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.#

டிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..?

ஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!

பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

Related Stories