இன்று திமுக., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று வராமல் ஆப்செண்ட் ஆன திருமா, நாளை பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தாம் கௌரவத்திற்காக என்றில்லாமல் கொள்கை அடிப்படையில் கூட்டணி குறித்த முடிவை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார் திருமாவளவன்..

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக., தரப்பு கூட்டணிப் பேச்சில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. முதலில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்தது. தொடர்ந்து முஸ்லிம் லீக்குக்கு ஒரு தொகுதி கொடுத்தது. அடுத்து கொமதேக., ஈஸ்வரனுக்கு ஒரு தொகுதி கொடுத்துள்ளது. அடுத்து, தோழமைக் கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகள் கேட்கும் நிலையில், இவர்களுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக., தரப்பு கறார் காட்டி வருகிறது.

இந்நிலையில், நேற்று மதிமுக., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணிப் பேச்சு தொடரும் என்று கூறப் பட்ட நிலையில், அவர்களுக்கான அழைப்பு திடீரென ரத்து செய்யப் பட்டு, ஐஜேகே பாரிவேந்தர் அண்ணா அறிவாலயம் வந்தார். அவர் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக வந்திருப்பதாக ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்குச் சொந்தமான புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அதற்கு ஏற்றார்ப் போல், பார்வேந்தர், கட்சியினர் சிலருடனும், தன் மகனுடனும் வந்திருந்தார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வெளியில் வந்த பாரிவேந்தர், திமுக.,வுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கவே வந்ததாகக் கூறினார்.இந்நிலையில், நேற்று நடைபெறாது போன விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக.,வினர் உடனான பேச்சுவார்த்தையை இன்று காலை பத்தரைக்கு வைத்துக் கொள்வதாகக் கூறி, திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது.

இதனால் திருமா., இன்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார்ப்போல், அண்ணா அறிவாலயம் வந்தார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்! அவர், துரைமுருகன், எ..வவேலு. ஆராசா பொன்முடி ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்க முடியும்? திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.

எனவே, இன்று திமுக-விடுதலை சிறுத்தைகள் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப் படும் என்றும் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட இருப்பதாகவும் கூறப் பட்டது. எனவே திருமாவளவன் இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதனால் ஏமாற்றமே நிலவியது.

இது குறித்து தகவல் தெரிவித்த தொல்.திருமாவளவன், தனக்கு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருந்தால் இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியவில்லை!, நாளை கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும், இன்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசும் முன்னதாக, தமது கட்சியின் சமூக வலைத்தள குழுவினரிடம் உரையாற்றிய திருமாவளன், கெரளவத்திற்காக என்றில்லாமல், கொள்கை அடிப்படையில் கூட்டணி குறித்து சில முடிவுகளை எடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், தமது முடிவினை பின்னடைவாகக் கருதக்கூடாது என்றும் தனது கட்சித் தொண்டர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

காரணம், தமது கட்சிக்கு இரு தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் திமுக, தரப்பு வலியுறுத்தியதை திருமா தரப்பு ஏற்கவில்லை! ஆனால் திமுக., விடாப்பிடியாக இருப்பதால், இதுவரை மல்லுக்கட்டி, முரண்டு பிடித்து வந்த தொல்.திருமாவளவன் வேறு வழியிலாமல் திமுக.,வில் சரண்டர் ஆகிறார் என்று அவரது நடவடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...