இன்று ஆ.ராசா.. நாளை கனிமொழி..! அண்ணன் அழகிரி இடத்தைப் பிடிக்க அதிரடி!

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி முடிவு செய்திருக்கிறார். இதற்காக நாளை அவர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தென் மாவட்டங்களில் செல்வாக்கு உடையவராகத் திகழ்ந்த மு க அழகிரியை ஓரங்கட்டிவிட்டு அழகிரியின் செல்வாக்கை திமுக தட்டிப் பறிக்க முயற்சி செய்து வருகிறது!

தென் மாவட்டங்களில் அழகிரிக்கு என்று செல்வாக்கு இருந்தது! அதற்கு காரணம் சில சாதி சமுதாய வாக்குகள் என்று கூறப்படுவதுண்டு! இந்நிலையில் திமுகவில் இருந்து அழகிரி ஓரங்கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகி விட்டதால், தீவிர அரசியலில் இருந்து அழகிரி ஒதுங்கி இருக்கிறார்.

அழகிரி இல்லாத நிலையில் அவருக்காக இருந்த வாக்குவங்கியை செல்வாக்கை திமுக தக்க வைப்பதற்காக சகோதரியான கனிமொழியை களத்தில் இறக்கியிருக்கிறது

இதில் கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்! மதுரை மற்றும் தென் தமிழகத்தில் தேவர் சமுதாய வாக்கு வங்கியும் நாடார் சமுதாய வாக்கு வங்கியும் பெரிதாகக் கருதப்படுகிறது! இந்நிலையில் அழகிரியால் கிடைக்கவேண்டிய வாக்குகளைக் குறிவைத்து தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு படை இறங்கி இருக்கிறது

அதற்காக தென் தமிழகத்தில் அதிகம் தலைகாட்டுகிறார் கனிமொழி! இப்போது  அவரை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பெரிதும் முயன்று வருகிறார்கள் திமுகவினர்

கனிமொழி அண்மையில் வந்திருந்தபோது அனிதா ராதாகிருஷ்ணன் ஆரத்தி எடுத்தவர்களுக்கு அசால்டாக 2000 ரூபாய் 500 ரூபாய் தாளை ஆளுக்கு ஏற்ற மாதிரி இரண்டு மூன்று என்று கணக்காக எண்ணி கையில் திணிக்கிறார்! இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது!

இந்நிலையில், கனிமொழி நாளை நாடார் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுக்க உள்ளார்.

திமுக.,வில் இப்போது கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுக.,வில் பெரிய தலைவர்கள் எவரும் இதுவரை விருப்ப மனு அளிக்க வில்லை. ஆனால், முதல் நபராக இன்று ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட விருப்ப மனு  அளித்துள்ளார்.  இந்நிலையில் கனிமொழியும் நாளை தூத்துக்குடிக்காக விருப்ப மனு அளிக்க உள்ளதாகக் கூறப் படுகிறது.

கனிமொழிக்காக அள்ளிவிடும் அனிதா …

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...