ஓர் இந்தியக் குடிமகனாக இருந்து கொண்டு ராணுவத்தைக் குறைசொல்வது கண்டனத்துக்கு உரியது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீது
பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, பயங்கரவாதிகளின் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்திய குடிமகன் என்ற முறையில் அரசை தான் நம்புவதாகவும் ஆனால் உலகம் நம்பவேண்டுமே என்றும் கேட்டிருந்தார்.

பிரதமர் மோடி, விமானப்படை தாக்குதல் தொடர்பாக ஆதாரம் கேட்பதா என நேற்று பீகார் மற்றும் உபி.,யில் நடைபெற்ற பேரணிகளில் கேள்வி எழுப்பியிருந்தார். இதைக் குறிப்பிட்டு பேசிய ப.சிதம்பரம் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

பயங்கரவாதிகளின் முகாம்கள்  மீதான தாக்குதலில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை குறித்து விமானப்படையின் துணை தளபதி கருத்து கூற  மறுத்து விட்டார் என்று கூறிய ப.சிதம்பரம்,  பாலாகோட் தாக்குதலில் 300 முதல் 350  வரை உயிரிழந்தார்கள் என்ற செய்தியை  பரப்பியது யார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் இந்திய விமானப்படையின் வீர நடவடிக்கையை பாராட்டிய முதல் மனிதர்
ராகுல் காந்தி என்பதை பிரதமர் நரேந்திர மோடி மறந்துவிட்டார் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் ப.சிதம்பரம் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியக் குடிமகனாக இருந்து  கொண்டு ராணுவத்தை குறை சொல்வது
கண்டனத்துக்குரியது என்றார்.

இன்று, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் அரசுக்கும் ஆதரவாக பேசும் ப.சிதம்பரத்துக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்தார்.

நம் நாடு குறித்து சிதம்பரம் போன்றோர் இவ்வாறு கேள்வி எழுப்புவது வெட்கக் கேடானது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன என்று கூறிய பியூஷ்
கோயல், சரியான முடிவு எடுத்து மக்கள் இக்கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று
நம்பிக்கை தெரிவித்தார்.

பயங்கரவாதத்தால் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது! இந்த நேரத்தில், நாட்டைப் பாதுகாக்கும் தலைவராக மோடி செயல்படுகிறார் என்று கூறினார் பியூஷ் கோயல்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...