சவுதியில் சிறையில் இருக்கும் 850 இந்தியர்கள் விடுதலை செய்யப் படுவதாக, பிப்.20ம் தேதி சவுதி அரசு ஆணை பிறப்பித்தது! இது மோடியின் கட்டிப்புடி வைத்தியத்துக்குக் கிடைத்த பரிசு என்கிறார்கள் மோடி ஆதரவாளர்கள்.

அண்மையில் சௌதி இளவரசர் இந்தியா வந்திருந்தார். அப்போது, பாரதப் பிரதமர் விமான நிலையம் வரை சென்று காத்திருந்து சவுதி இளவரசரை வரவேற்றது குறித்து இரண்டு நாட்களாக அலசி ஆராய்ந்து குற்றம் கண்டு பிடிக்க முயற்சி செய்யும் எதிர்கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான் செய்தியாக, இந்தச் செய்தி அமைந்திருக்கிறது என்று கருத்துகள் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் இந்தியா வந்த போது, மரபுகளைக் கடந்து, பிரதமர் மோடி விமான நிலையத்துக்குச் சென்று, காத்திருந்து, சவுதி இளவரசரைக் கட்டிப் பிடித்து வரவேற்றார். ஆனால், இதனை பெரிதாக விமர்சித்தனர் எதிர்க்கட்சியினர். குறிப்பாக, காங்கிரஸார்.

இந்நிலையில் மோடியின் கட்டிப்புடி வைத்தியத்தால் விளைந்த நன்மை என்று பாஜக.,வினர் இந்த 850 பேர் விடுதலையைக் குறித்து பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் தங்கள் சமூகத் தளப் பக்கங்களில் செய்துள்ள பதிவுகளில்… இதோ ஒரு தலைவன்… அவன் கால்கடுக்க காத்து நின்றது நமக்காக சிறையில் வாடிக்கொண்டிருந்த இந்தியர்களுக்காக!

போகிற போக்கில் கிடைத்ததை சுருட்டி குடும்பத்தை வளமாக்க பதவிக்கு வர ஆசைப்படும் சுயநலவாதிகள் மத்தியில், நமக்காக எல்லா விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு, பழிச்சொல்லையும் பெரிது படுத்தாது கடமையை மட்டும் முன்னிறுத்தி செயல் படும் நரேந்திர மோடி… இவரல்லா கர்மவீரர். தனிப்பெரும் தலைவன்.!

850 இந்தியர்கள் விடுதலை குறித்து இப்போது விவாதம் நடத்துங்கள். விமர்சனம் செய்யுங்கள். அரசியல் நேர்மை இருந்தால்… – என்று சவால் விடுக்கின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...