நீங்க தேசபக்தி உள்ள இந்தியக் கட்சிதான்னு உலகம் நம்பணுமே! என்ன செய்யலாம் என்று காங்கிரஸ் சிதம்பரத்துக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக.,வின் ஹெச்.ராஜா.
இன்று காஷ்மீரின் 40% பகுதி பாக் வசம் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். 40000 ச கிமீ இந்தியப் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ். நீங்கள் தேசபக்தி உள்ள இந்திய கட்சி என்று உலகம் நம்ப வேண்டுமே? என்ன செய்யலாம்.. என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா
காரணம், புல்வாமோ தாக்குதல், தொடர்ந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஆகியவை குறித்து பிரதமர் மோடி தெரிவித்த தேசப் பற்றுக் கருத்துகளை அரசியல் ஆக்கி, மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக எண்ணிக் கொண்டு, ராணுவத்தையும் நாட்டையும் விமர்சித்து வருகின்றனர் காங்கிரஸார். இதன் மூலம், தேசப்பற்று என்றால் அது பாஜக., மட்டுமே என்ற எண்ணத்தை தாமாகவே ஒப்புக் கொண்டு வருகின்றனர் காங்கிரஸார்.
முன்னதாக, இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம். நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கேள்விக்கான பதில் கேள்வியாக ஹெச்.ராஜா இதனைக் கூறியுள்ளார்.
இன்று காஷ்மீரின் 40% பகுதி பாக் வசம் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். 40000 ச கிமீ இந்தியப் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதற்கு காங்கிரஸ் காரணம். கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸ். நீங்கள் தேசபக்தி உள்ள இந்திய கட்சி என்று உலகம் நம்ப வேண்டுமே? என்ன செய்யலாம் https://t.co/kBCsHB5chO
— H Raja (@HRajaBJP) March 5, 2019