சென்னையில் மோடி! இந்தத் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலானது என்கிறார் ஓபிஎஸ்!

சென்னையில் நடைபெறும் அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஈரோடு-கரூர்-திருச்சி மற்றும் சேலம்-கரூர்-திண்டுக்கல் மின்மயமாக்கல் ரயில் பாதையை நாட்டுக்கு, சென்னை கிளாம்பாக்கத்தில் அரசு விழாவில் அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்!

சென்னை அடையாறு எம்.ஜி.ஆர் – ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

சென்னை கிளாம்பாக்கம் பிரசார பொதுக்கூட்ட மேடையில் மோடி வருகை. கூட்டணி தலைவர்களுடன் கைகளை உயர்த்தி உற்சாகம்.

விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செய்தார்.

பிரதமர் மோடிக்கு நினைவு பரிசை வழங்கிய தலைவர்கள், செங்கோலையும் பரிசாக அளித்தனர். பிரதமர் மோடிக்கு நடராஜர் சிலையை நினைவு பரிசாக அளித்தனர்.

விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், என்.ஆர் காங். தலைவர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாமக.,வின் 10 கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று பிரசார கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

தமிழ் உள்ளிட்ட 22 தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று ராமதாஸ் பேசினார்.

தீய சக்திகளை அழிக்கவே அதிமுக வெற்றி கூட்டணியை அமைத்துள்ளது என்று பிரசார கூட்டத்தில் ஒபிஎஸ் பேசினார்.

யார் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க தைரியம் இல்லாத ஸ்டாலின், அதிமுக கூட்டணியை விமர்சிக்கிறார்! பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் ! பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது சுத்த பொய் !

இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலானது என்று கூறினார் ஓபிஎஸ்.

பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்திய நாட்டை ஆளும் தகுதியுள்ள ஒரே பிரதமர் மோடிக்கு மட்டும் தான். பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி! புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டவர் பிரதமர் மோடி !

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்!  திமுக ஆட்சியில் இருந்து போது நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...