திமுக.,வில் கருணாநிதி குடும்பத்துக்கும் ‘முன்னாள்’களின் வாரிசுகளுக்கும் தான் போட்டியிட சீட்டு என்றால் நாங்கள் எல்லாம் என்ன நாக்குவழிக்கவா இருக்கிறோம் என்று கொதித்துப் போய்க் கேட்கிறார்கள் உடன்பிறப்புகள்!

இது குறித்து இன்று வாட்ஸ் அப்பில் பரவி வரும் தகவலில், திமுகவில் முன்னாள் அமைச்சர் வாரிசுகளுக்கு சீட்….. கொதிக்கும் உடன்பிறப்புகள்!! தி.மு.க.20 தொகுதிகளில் போட்டி இடுகிறது
அதில்:
1.வடசென்னை:கலாநிதி வீராசாமி – ஆர்காடு வீராசாமி மகன்
2.மத்திய சென்னை:  தயாநிதி மாறன்  – முரசொலி மாறன் மகன்
3.தென் சென்னை:  தமிழச்சி தங்கப்பாண்டியன் – தங்கம் தென்னரசு சகோதரி
4.வேலூர்: கதிர் ஆனந்த் – துரைமுருகன் மகன்
5.திருவண்ணாமலை: கம்பன் – எ.வ.வேலு மகன்
6.தூத்துக்குடி: கனிமொழி கலைஞர் மகள்  –
7.கோவை: பாரிமைந்தன்  – பொங்கலூர் பழனிசாமி மகன்
8.கள்ளகுறிச்சி: பொன் கவுதம சிகாமணி  – பொன்முடி மகன் ஆகியோருக்கு சீட் கொடுத்து மீதம் உள்ள பல சீட்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே கொடுக்கஉள்ளதாக தகவல்!

தஞ்சை:பழனி மாணிக்கம்
அரக்கோணம்: ஜெகத்ரட்சகன்
தர்மபுரி: தாமரை செல்வன்
நீலகிரி: ஆ.ராசா
திருப்பெரும்புதூர்: T.R.பாலு
ராஜ்யசபா கூட ஒன்று வைகோவுக்கு போக ஒன்று தான் உள்ளது அதுவும் ஸ்டாலின் மருமகன் “சபரீசனுக்கு” கொடுத்து விட்டால் காலங்காலமாக கட்சிக்கு உழைத்து என்ன பயன்? என்று முனங்கத் தொடங்கி விட்டனர் உடன்பிறப்புகள்!

அதிமுக போல அடிமட்ட தொண்டர்கள் சிலருக்கு கொடுத்து செலவு செய்து வெற்றி பெற வைக்கலாமே என்று பரவலாக பேசத் தொடங்கி விட்டனர்!! ஜெயலலிதா இருந்த காலத்திலும், அதிமுக.,வில் போடியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் கூட வெளியில் தெரியாது! சாதாரண தொண்டராகத்தான் இருப்பார்கள் ஆனால் எம்.பி.யாகி விடுவார்கள். இல்லை என்றால் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் முதலமைச்சர்கள் ஆகியிருக்க முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்!

இப்படி காலம் காலமாக வெறுமனே அடிமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் மட்டுமே கட்சியில் நாங்கள் இருக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பும் தொண்டர்கள், இதைச் சொல்லியே மற்ற கட்சிக்காரர்கள் தங்களைக் கழுவிக் கழுவி ஊத்துவதைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறார்கள்! அவர்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதானே! என்றும் சமாதானம் சொல்கின்றனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து சீட்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு அணிகளிலும் முடிவாகி விட்ட நிலையில், சீட்டுக்காக அடித்துக் கொள்ளும் போட்டி, திமுகவில்  அதிகமாகவே காணப்படுகிறது. சீட்டுக்காக வாரிசுகள் போட்டியிடுவது திமுகவுக்கு தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை தரும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

திமுக கூட்டணியில் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்கள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஐ,ஜே,கே., கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிற்கு தலா ஒரு இடம் என இருபது இடங்கள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது போக மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிட உள்ளது

இந்த இருபது இடங்களில் பெரும்பாலான இடங்களை மூத்த தலைவர்கள், மாவட்ட
செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோரின் வாரிசுகள் கேட்டு
வருகின்றனர். கருணாநிதி குடும்பத்தில் கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இவர்கள் போட்டியிடுவதும் உறுதியாகி விட்டது.

இந்நிலையில், தலைமை என்ன செய்வது என்று தத்தளித்து வருகிறது.  காலம் காலமாக நாங்கள் இந்தக் கட்சிக்கு உழைத்து வருகிறோம். கட்சியின் சின்ன சின்ன கூட்டங்கள் முதல் பெரிய கூட்டங்கள் வரை எங்கள் கை காசையே போட்டு நடத்தி வந்திருக்கிறோம். நம் திறமையைக் கண்டு, கூட்டம் சேர்க்கும் திறனைக் கண்டு, என்றாவது ஒருநாள் நமக்கும் ஒரு வாய்ப்பு வரும்; என்றாவது ஒருநாள் நாமும் மக்கள் பிரதிநிதி ஆவோம் என்ற எண்ணத்தில்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறோம்.
ஆனால் தேர்தல் என்று வரும்போது கட்சியின் மாவட்ட செயலாளர்களும் அமைச்சர்களின் வாரிசுகளுமே போட்டியிட்டுக் கொண்டிருந்தால், எங்களுக்கு என்றுதான் விடிவு காலம் வரும்? என்று குமுறுகின்றனர்.  இந்த வெறுப்பு கடைமட்ட தொண்டர்கள் வரை அனைவரிடமும் உள்ளது.

ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுக்கு 20 தொகுதிகளை வழங்கிவிட்ட திமுக மீதமுள்ள 20 தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளை தலைவர்களின் வாரிசுகளுக்கு வாரி வழங்கினால் தொண்டர்கள் எப்படி உற்சாகத்துடன் வேலை செய்வார்கள் என்று
கேள்வி எழுப்புகின்றனர் அடிமட்ட தொண்டர்கள்.

போட்டியிடுவது தலைவர்களின் வாரிசுகள்தான்… ஆனால் வாக்குச்சாவடி அளவில் வேலை செய்யது என்னவோ அடிமட்டத் தொண்டர்கள்தான்! ஆனால் இத்தகைய பாகுபாடுகளால், தொண்டர்கள் மத்தியில் இப்போதே பெரும் அதிருப்தி நிலவுகிறது.

இதனால், வாரிசுகளுக்கும் குடும்பத்துக்கும் அல்லாமல், சாதாரண தொண்டர்கள், அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, தொண்டர்களை திருப்திப் படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது திமுக. காரணம், திமுக., என்றாலே அதற்கு ஒரு தொண்டர் பலம் உண்டு என்ற நம்பிக்கைதான்! ஆனால், அந்த தொண்டர் பலம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இல்லாமல் போனது.  அன்று 2ஜி ஊழல் குறித்த தீர்ப்பு வெளியானபோது, தொண்டர்கள் பட்டாசு வெடிக்கச் சென்றுவிட்டார்கள். வாக்குச்சாவடிகளை கவனிக்க ஆள் இல்லாத நிலையில் டிடிவி தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...