மக்களவை தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

திமுக., தேமுதிக., இடையே பிரச்னைகள் வெடித்துள்ள நிலையில், துரைமுருகன், ஸ்டாலினுக்கு பதில் தரும் விதத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் தேமுதிக., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்களை நீ, வா, போ, என்று அவர் ஒருமையில் பேசியதும், எந்த டீவி., நீ எந்த பத்திரிகை என்று செய்தியாளர்களை அடையாளம் கேட்டுப் பேசியதும், பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

இருப்பினும் கோபாவேசத்தில் பிரேமலதா குமுறித் தள்ளினார். திமுக., குறித்து அதிகம் பேசினார். அவரது பதில்கள் இவை…

கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை

அரசியல் ரீதியாக தேமுதிகவை திமுக பழிவாங்குகிறது

சாதாரணமான விவகாரத்தை சூழ்ச்சி மூலம் திமுக பூதாகரமாக்கி உள்ளது.

தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்படுகிறது.

எது நாகரீகம் ? எது அநாகரீகம் ? என்பதை முதலில் செய்தியாளர்களும், எதிர் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும்.

விஜயகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல் பேசவில்லை என்று முதலில் ஸ்டாலின் சொல்லட்டும்.

யாரென்றே தெரியாத நபர்களை துரைமுருகன் தன்னுடைய வீட்டில் கூட்டணி விசயம் பேச அனுமதிப்பாரா ?.

வயது மூப்பின் காரணமாக துரைமுருகன் தவறாக ஏதாவது உளறினாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நேற்றே ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை ? என்று செய்தியாளர்கள் கேள்விக்கு.

ஊடகம் 24 மணி நேரமும் எங்கள் வீட்டு முன்பும், கட்சி அலுவலகத்தின் முன்பும் அமர்ந்து இருக்கிறீர்கள் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் வந்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது என பிரேமலதா விஜயகாந்த் பதில்.

கட்சி என்றால் கூட்டணி பேசத்தான் செய்வார்கள்.

துரைமுருகன் நம்பிக்கையை காப்பாற்றவில்லை.

தேமுதிக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்

அதிமுக எம்.பி-க்கள் தமிழக்திற்கு என்ன செய்து விட்டார்கள்

செய்தியாளர் சத்திப்பில் திமுக தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியதால் சிறிது நேரம் சலசலப்பு.

கட்சி மீது விமர்சனம் வைப்பதால், கூட்டணி வைக்கமாட்டோம் என்று அர்த்தமில்லை.

தேமுதிக கொள்கையில் உறுதியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் என்பதால் ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டியுள்ளது.

இன்று வரை அதிமுக ஆட்சியில் இருப்பதற்கு தேமுதிகவும் ஒரு காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்

மக்கள் நல ஆட்சிக்கு தேமுதிக ஆதரவு தரும்.

ஜெயலலிதாவை சட்டசபையிலேயே வேஷ்டியை மடித்துக்கட்டி எதிர்த்தவர் விஜயகாந்த்

தேமுதிகவின் நிலை என்ன ? யாருடன் கூட்டணி வைத்திருக்கிறோம் ? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்.

விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வாரா என்பதை தேர்தல் தேதி அறிவித்த உடன் பாருங்கள்

முதலில் பாமகவை அழைத்து பேசியதுதான் கூட்டணியில் பிரச்சினைக்கு காரணம்.

கூட்டணியில் குழப்பம் இல்லை. தெளிவாக இருக்கிறோம்.

மக்களவை தேர்தலில் மட்டுமா, இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் இடங்களா என்பது இரு தினங்களில் தெரியும்

மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட தேமுதிகவிற்கு எந்த பயமும் இல்லை

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...