பிரேமலதா விவகாரத்தில் வாய் கிழியப் பேசிய வைகோ.,வுக்கு தனது யோக்கியதை என்ன தெரியுமா அல்லது தெரியாமல் இருக்கிறாரா அல்லது செலக்டிவ் அம்னீஷியாவா என்று கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்>

திருச்சி மாவட்ட ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது தவறானது. அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

கருணாநிதியை சந்திக்க விஜயகாந்த் நேரம் கேட்டபோது ஸ்டாலின் நிச்சயம் மறுத்திருக்க மாட்டார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை தே.மு.தி.க வினர் முற்றுகையிட்டது கண்டனத்துக்குரியது.

விபரீதத்தை விலைக்கு வாங்க வேண்டாம். உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டோம்’ என்று கூறினார்

அரசியலுக்காக இந்த அளக்கு தரம் தாழ்ந்து பேசும் வைகோ, அவரே சில இடங்களில் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.

அது தொடர்பான வீடியோக்கள் இணையதளம் எங்கும் சர்வ சாதாரணமாகக் கொட்டிக்கிடக்கின்றன.

குறிப்பாக, ஒரு தனியார் டிவியின் பேட்டியில் பாதியிலேயே எழுந்து சென்றது, ஒரு குறிப்பிட்ட டிவி சேனலின் நிருபர்களைக் கண்டால் ஏக வசனத்தில் ஏசுவது, திகட்டத் திகட்டத் திட்டுவது என்று அநாகரீகத்தின் உச்சங்களை வெளிப்படுத்துபவர் வைகோ.

ஊடகத்தினரை தனிப்பட்ட வகையில் இனம் கண்டு, அவர்கள் குறித்து அந்த அந்த ஊடகத்தின் முதலாளிகளிடம் அல்லது ஆசிரியரிடம் வத்தி வைத்து, அவர்களது வேலைக்கு உலை வைக்கும் வகையில் செயல்படுபவர் வைகோ என்று குற்றம் சாட்டுகின்றனர் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பிரேமலதா குறித்து கண்டிக்க சிறிதும் அருகதை அற்றவர் வைகோ என்கின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...