spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கோவைஇந்து தமிழர் கட்சி.. இன்று இனிய உதயம்!

இந்து தமிழர் கட்சி.. இன்று இனிய உதயம்!

- Advertisement -

இந்து தமிழர் கட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இது குறித்து இக்கட்சியின் நிறுவனர் ராம.ரவிக்குமார் நம்மிடம் தெரிவித்தவை!

இந்து தமிழர் கட்சி என்ற ஆன்மீக அரசியல் கட்சி ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் 12 3 2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை நாள் சஷ்டி திதியில் எம்பெருமான் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகளின் பேரருளால் போற்றுதலுக்குரிய புலிப்பாணி சுவாமிகள் அருளாசியுடன் ஆசிரமத்தில் தொடங்கப்பட்டது

கட்சியின் நோக்கம் கொள்கை:

  1. தெய்வீக தமிழகத்தில் இந்து தமிழர்களில் பல்வேறு வழிபாட்டு முறைகள் இருந்து கொண்டிருந்தாலும் இந்து தமிழர்களின் பெரும்பாலோர் வழிபடும் தெய்வமாக முருகப்பெருமான் இருக்கிறார் இந்த முருகப்பெருமான் வழிபாட்டை வேல் வழிபாட்டை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு சென்று முருக பக்தியை மேம்படுத்துவது

2 . ஆறுபடைவீடுகளில் 1008 வேல் வழிபாடு செய்து முருக பக்தியை தேசபக்தியை இந்துசக்தியை திரட்டி தர்ம சக்தியை நிலைநாட்டுவது.

  1. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கண்ணன் போல குழந்தைகள் அலங்காரம் செய்து விழா எடுப்பது போல முருகப்பெருமானின் அவதார தினத்தை “திருமுருகன் திருவிழா ” என்ற பெயரில் குழந்தைகளை முருகன் அலங்காரத்தில் அலங்கரித்து “முருகபக்தி பெரு விழா ” எடுப்பது

  2. தமிழகத்திலுள்ள அறப்பணிகள் செய்துவரும் ஆன்மீக இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து இந்து தமிழர் சமய காப்புப் பணியில் ஈடுபடச் செய்வது

  3. இந்து தமிழர் சமயத்திலிருந்து பிற சமயத்தை ஏற்றுக்கொள்ளாது இருக்க – மோசடிமதம் மாற்றம் தடுத்திட இந்து தமிழர் சமயத்தை காக்க  “மத மாற்ற தடுப்பு குழு” ” மதகு ” உருவாக்குவது

6 .பழங்கால கோவில்களை சீரமைத்து வழிபாட்டிற்கு கொண்டு வரவும்,
அந்த திருக்கோவில்களுக்கு சொந்தமான இடங்கள் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவைகளை மீட்டு திருக்கோயில்களுக்கு ஒப்படைக்க செய்ய பக்தர்கள் பொதுமக்கள் சமுதாய பெரியோர்கள் மற்றும் திருக்கோயில் நலன்விரும்பிகள் அனைவரையும் ஒன்றிணைத்து நீதிமன்றத்தில் வீதிமன்றத்தில் ஜனநாயக ரீதியில் வழிமுறைகளைப் பயன்படுத்தி மீட்டெடுப்பது

7 . பாதை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அன்னதானம் மற்றும் நற்பணிகளை செய்வது

  1. தமிழர்களின் குடும்பங்களில் ஒரு உயிராக இருக்கக்கூடிய பசு இனத்தை அழியாது பாதுகாக்க பசு பாதுகாப்பு குழுக்கள் பசு பாதுகாப்பு பசு மடங்கள் உருவாக்குவது
  2. அரசியல்வாதிகளின் நினைவு நாள் பிறந்த நாள் அன்று பக்தர்களின் காணிக்கை வருமானத்தில் உண்டியல் பணத்தில் நடைபெறக்கூடிய சட்டவிரோத அன்னதானத்தை மாற்றி ஆழ்வார்கள் நாயன்மார்கள் பிறந்த நட்சத்திரத்தில் அன்னதானம் செய்விக்க அரசாங்கத்தை வலியுறுத்துவது இல்லையெனில் பக்தர்கள் மூலமாக அன்னதானம் செய்வது

  3. இந்துத் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணங்கி வரும் குலதெய்வ வழிபாட்டை குலதெய்வ திருவிழாவை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கோவிலிலும் சிறப்பாக கொண்டாடினர் தேவையான வழிகாட்டுதலை உதவிகளை செய்வது குலதெய்வ வழிபாடு பெருமை குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்வது

  4. இறைவன் திருமேனி தீண்ட கூடிய சிவாச்சாரிய பெருமக்கள் மற்றும் இந்து தமிழர்களின் சாஸ்திர முறைகளை இன்றளவும் பாதுகாத்து வரும் மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வரும் வேத புரோகிதர்கள் ஆகியோர்களின் நலனுக்காக நலவாரியம் ஏற்படுத்திட தமிழக அரசை வலியுறுத்துவது

இயற்கை வளம் பாதுகாத்திட இயற்கை விவசாயம் பாதுகாத்திட விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடம் ஏற்படுத்துவது

தீர்மானங்கள்
1. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு எவ்விதமான தங்குதடையுமின்றி நடைபெற்ற 1008 வேல் வழிபாட்டை பழனியில் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

  1. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலையையும் அருள்மிகு இடும்பன் சுவாமி மலை திருக்கோயிலையும் இணைத்து மெட்ரோ ரயில் மேம்பாலம் போல (அ) மேம்பாலம் போல அமைத்து , போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இரண்டு மலைகளுக்கு இடையே பாலம் அமைத்து வசதி ஏற்படுத்தி தந்திட தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

3 . நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மதுரை தொகுதிக்கு ஏப்ரல் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அன்றைய தினம் தென் தமிழக மக்களுக்கு பல லட்சம் பேர் கூட கூடிய சித்திரை திருவிழா வருகிறது அன்றைய தினத்தில் தேர்தல் தவிர்த்து மற்றொரு தேதியில் தேர்தல் நடத்திட தேவையான நடவடிக்கையே தேர்தல் ஆணையம் செய்திட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

  1. பாரத தேசத்தை பாதுகாத்திட தங்களுடைய இன்னுயிரை தந்திட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பாரத ராணுவ வீரர்கள் நினைவை போற்றி வீரத்தை பறைசாற்றும் வகையில் “மாவீரர்கள் கோட்டம்” உருவாக்கிட தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.

  1. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தேச நலன் கருதியும் தெய்வ நலன் கருதியும் பாரதப் பிரதமராக மீண்டும் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் வரவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை தமிழகம் மற்றும் புதுவையில் வெற்றி பெறச் செய்திட பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய சட்டவிரோத கனிம கொள்கைகளை தடுத்திட பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்வது சட்டரீதியாக ஜனநாயக ரீதியில் நீதிமன்றத்தை நாடுவது குறித்து தீர்மானம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம்

தாதங் கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும், அரசு நிலத்தில் சட்டவிரோத கனிமக்கொள்ளை நடத்தி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய கல் குவாரிகளை ஆய்வு செய்து மூடிட தேவையான நடவடிக்கையை தமிழக அரசு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டுகிறோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe