என் தந்தை கொலையில் தொடர்புடைய 7 பேரையும் மன்னித்துவிட்டோம்; யார் மீதும் வெறுப்பு இல்லை: ராகுல் காந்தி.

குற்றவாளிகள் 7 பேரையும் நாங்கள் முழுமையாக மன்னித்துவிட்டோம். எந்தவிதமான வெறுப்பும், விரோதமும் யார் மீதும் இல்லை. அவர்கள் விடுதலை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யட்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவது அவசியம். அதுதான் சிறந்தது” எனத் தெரிவித்தார்

  1. நிரபராதிகள் ஏழுபேரையும் விடுதலை செய்யுங்கள் என்று அற்புதம்மாளிருந்து, ஓசிசோறு போராளி வரைக்கும் கூவிகிட்டு இருக்காங்களே; இந்த ரெண்டுல எத உண்மைன்னு எடுத்துகிறது?

  2. உங்க அப்பன் மட்டும் சாகலே, கூடவே பதினேழுபேரு செத்தாங்க, அவங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு யாரு பதில் சொல்லறது? அவங்க சார்பா மன்னிக்கறதுக்கு, நீ யாரு, வெண்ணை.

  3. ஏழுபேர், ஏழுபேர்ன்னு கூவிட்டிருக்கீங்களே, அதுல நாலுபேர் நம்ம நாட்டை சேர்ந்தவங்க, அது தெரிஞ்சே கூவிட்டு இருந்தா, லோக்கல் கவுன்சிலருக்கு போட்டியிடக்கூட தகுதி இல்லாதவனை ஆயிடுவே; தெரியாம கூவிட்டு இருந்தா, இப்படி ஒரு கூமுட்டையை எப்படி, தலைவனா ஏத்துக்கறது?

  4. இவர்களுக்கெல்லாம் மரணதண்டனை விதிக்கப்பட்டு, கருணை அடைப்படையில் ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு, இன்னொருவழக்கில் ஆயுள்தண்டனையென்றால், 14 வருசமா, 20 வருசமா இல்லே, “ஆயுள்” வரை என்று உச்சநீதிமன்றமே தெளிவாக சொல்லிவிட்டபிறகு, யாரை ஏமாத்த இப்படி கூவிட்டிருக்குது இந்த பப்பு?

  5. ரத்தப்பணம் என்று உங்க பாட்டியின் செத்துப்போன கணவரின் மதநம்பிக்கைகளில் ஒன்று உண்டு; அதாவது, பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைத்தவர் இழப்பீடு பணமாக கொடுத்து தண்டனையிலிருந்து விலக்கு பெறுவது. நான் தத்தாத்ரேயா கோத்ரா, கவுல் பிராமணன்னு சொல்லிக்கிட்டிருக்க மனுஷனுக்கு இப்படி ஒரு குறுக்குவழி தோணி இருக்கவேகூடாதே? எல்லாத்துக்கும் மேல, இந்திய பிரஜைன்னு சொல்லிட்டிருக்குற உனக்கு, இந்திய சட்டம் என்று ஒன்று இருக்கிறதே, அதுல இந்த ரத்தப்பணம் என்ற வழி கிடையாது என்று தெரியாதா? இல்லே, தாத்தாவின் டிஎன்ஏ இப்படி பேச வைக்குதா?

  6. பப்பு பேசுறது சரின்னா, இப்ப பொள்ளாச்சி விசயத்துல, பாலியல் கொடுமை செய்த மிருகங்களை, பாதிக்கப்பட்ட பெண்களோட பேச விடலாமா? பேச விட்டா, என்ன நடக்கும்? அந்த பொண்ணு மன்னிச்சிட்டேன்னு சொன்னா, இந்த மிருகங்களை தண்டனையின்றி வெளியில் உலவ விடலாமா? இதேபோல், எத்தனையோ கொலைகள், கற்பழிப்புகள், அத்தனைக்கும் இந்த லாஜிக் பொருந்துமல்லவா? என்ன பேசறோம்ன்னு தெரிஞ்சி தான் பேசுதா பப்பு?

  7. மோடிமீதான வெறுப்பு என்பது, தனது சொந்த தந்தையின் தியாகத்துக்கும், சிந்திய ரத்தத்துக்கும் விலைபேசுவது என்ற அளவுக்கு போய்விட்டதே? ராஜிவ், தமிழரை, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு நம்பினார் என்பது, அடிக்கடி பொதுமக்களோடு மிக இயல்பாக கலந்துவிடும் அளவுக்கு இருந்தது என்பது தெரியுமா பப்பு? அந்த நம்பிக்கையை பயன்படுத்தி, துரோகத்தால், வஞ்சினத்தாலும் வீழ்த்தப்பட்டார் உமது தந்தை என்பதை ஒரு நொடி யோசித்தாலே இப்படியெல்லாம் பேச வாய் வராதே பப்பு.

எச்சரிக்கை: எனக்கு ராஜீவை, அவரது செயல்பாடுகளை, அறவே பிடிக்காது. ஆனால் எனது தேசத்தின் பிரதமராக இருந்திருக்கிறார்; அவரை, என்நாட்டின் பிரதமரை, எனது சொந்த மண்ணில் வெளிநாட்டு கூலிகளுடன் உள்ளூர் கருங்காலிகளும் இணைந்து கொன்றது மன்னிக்கமுடியாத குற்றம் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறேன்.

~ மு.ராம்குமார்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...