இறுதிக் கட்டமக… பாமக., மீதமுள்ள 2 வேட்பாளர்களையும் அறிவித்தது!

gkmani

பாமக இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி, திருப்பெரும்புதூர்- வைத்திலிங்கம் மற்றும், திண்டுக்குல்- ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக, நேற்று 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீதமுள்ள 2 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக.,!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த 7 கட்டத் தேர்தலில், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக – 5, பாமக – 7, தேமுதிக – 4, தமாகா – 1, புதிய நீதிக்கட்சி – 1, புதிய தமிழகம் – 1, என்.ஆர்.காங்கிரஸ் – 1 என தொகுதிகளில் போட்டியிடும் இந்தக் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.

உடனே வேட்பாளர்களை அறிவித்து, களத்தில் இறங்கியுள்ளன. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பிரசாரத்துக்கு ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே இருப்பதால், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியும் விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த பாமக., தலைமை, இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

முதல் பட்டியலில்,

  • தருமபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ்
  • விழுப்புரம் – வடிவேல் இராவணன்
  • அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி
  • மத்திய சென்னை – சாம் பால்
  • கடலூர் – டாக்டர். கோவிந்தசாமி
  • ஆகிய 5 பேர் பெயர்கள் இருந்தன.

இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிக் கட்டமாக,

  • திண்டுக்கல் – ஜோதிமுத்து
  • ஸ்ரீபெரும்புதூர் – அ.வைத்திலிங்கம்
  • ஆகிய இருவர் பெயர்களையும் அறிவித்தது பாமக., தலைமை.
Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.