பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ரிட்டயர்டு நடிகைகள் பட்டாளத்தை களமிறக்கும் கமல்?!

பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ஸ்பெஷல் கவனிப்பாக, ரிட்டயர்ட் ஆன நடிகைகள் கொண்ட தங்களது நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கப் போகிறாராம் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்!

இன்று காலை மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுவதாக அறிவித்துக் கொண்ட சி.கே.குமரவேல் என்பவர் திடீரென ராஜினாமா செய்தார். இது குறித்து தகவல் வெளியிட்ட கமல்ஹாசன் நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்.

! ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, கமல்ஹாசன் தானே ராமநாதபுரம் அல்லது தென்சென்னையில் போட்டியிடுவார் என்றும், ராமநாதபுரமா, தென்சென்னையா என்று ஒத்தை ரூபாயை சுண்டிவிட்டு டாஸ் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. பாஜக., போட்டியிடும் ராமநாதபுரத்தில் தாமே நேரடியாகக் களம் இறங்குவது என்று அவர் முடிவு செய்திருந்ததாகவும் கூறப் படுகிறது. சொந்த ஊர் உள்ள தொகுதியா, வாழ வந்த ஊர் உள்ள தொகுதியா என்று ஒத்தையா ரெட்டையா போட்டுப் பார்த்து ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ரிட்டயர்ட் ஆன நடிகையர் பட்டாளத்தை பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் களமிறக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப் படுகிறது.

மத்திய சென்னை பகுதிகளில் கமீலா நாசருக்கு ஓட்டுக் கேட்டு முன்கூட்டியே போஸ்டர்கள் ஒட்டப்பட… கமல்ஹாசனுக்காக ராமநாதபுரம் பகுதியில் கட்சி சார்பில் குடிநீர் பிரச்னைகளை தீர்ப்பதாக உறுதிகள் கூற… இன்னும் கோவை சரளா, ஸ்ரீப்ரியா என்று இருவர் பாஜக., தொகுதிகளில் கண் வைத்திருக்க… மக்கள் நீதி மய்யம் அடுத்த கட்ட ஷூட்டிங் செல்லும் கேரவன் போலாகியிருக்கிறது.

கட்சியில் சேர்ந்த மூன்றாம் நாளே, வேட்பாளர் நேர்காணலில் வந்து அமர்ந்தார் கோவை சரளா. வேட்பாளர் நேர்காணலில் வந்து அமரும் அளவுக்கு உடனடி செல்வாக்கு அவருக்கு!


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]


இதனிடையே வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அதன்படி, பாஜக., போட்டியிடும் தொகுதிகளில் கடுமையான போட்டி கொடுத்து அவர்களை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பது அவருக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையாம்!

அதனால்தான், டார்ச் லைட் சின்னம் கிடைத்ததும், நோட்டாவுக்குள் இருக்கும் பாஜக.,வை தேடிப் பார்க்க, இந்தச் சின்னம் உதவும் என்று ஒரு பிட்டுப் போட்டார் கமல்.

இதற்காக பாஜக., போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் ரிட்டயர்ட் ஆன நடிகைகளை களம் இறக்க திட்டமிட்டுள்ளார். எனவே, கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் இனி ப்ரேக் டான்ஸ் கச்சேரிகளை அடிக்கடி பார்க்கலாம்!


பிரதமர் மோடியின் சௌகிதார் - காவல்காரன் என்ற இயக்கம்!

View Results

Loading ... Loading ...

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...