23/10/2019 8:58 PM
அரசியல் ‘அந்த’ கூடாநட்பு நினைவஞ்சலி காரணம்?! சாதிக் பாட்சா மனைவி கார் மீது...

‘அந்த’ கூடாநட்பு நினைவஞ்சலி காரணம்?! சாதிக் பாட்சா மனைவி கார் மீது குண்டர்கள் தாக்குதல்!

-

- Advertisment -
- Advertisement -

சென்னை: மு.க.ஸ்டாலினின் நண்பரும், 8 வருடங்கள் முன் மர்ம மரணம் அடைந்தவருமான சாதிக் பாட்ஷாவின்  மனைவி ரெஹ்னா பானு கார் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர்  அலுவலகத்தில் ரெஹ்னா பானு புகார் அளித்துள்ளார்.

2ஜி ஊழல் வழக்கில் சிக்கிய ஆ.ராசா  சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்த விசாரணையை மேற்கொள்ள  சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. கடந்த 2011 மார்ச் மாதத்தில் ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்ஷாவிடம் விசாரணை நடத்த சிபிஐ முயன்றது.

ஆனால் இந்த விவரம் வெளியில் தெரியும் முன்னர், சென்னை தேனாம் பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்ஷா பிணமாகக் கிடந்தார்.

விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப் பட்டது. ஆனால் அது மர்ம மரணமாகவே கூறப்பட்டது. திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் நண்பராக இருந்த சாதிக் பாட்சாவுக்கு திமுக.,வினர் நெருக்கடி கொடுத்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்ட தாகவும் கூறப் பட்டது.

ஆனால் சாதிக் பாட்சா மரணத்துக்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்றும், ஸ்டாலின் ஒரு கொலை காரர் என்றும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்ப தாகவும் வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

சாதிக் பாட்சா மரணம் குறித்த விவகாரத்தில் மர்மம் விலகாத நிலையில், எவருமே எதிர்பாராத ஒரு விசயமாக, சாதிக் பாட்சாவின் 8வது ஆண்டு நினைவு நாளில் சாதிக் பாட்சா குடும்பத்தினர் என்று பெயர் போட்டு, கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு உதாரணமாய் இருந்த தாக நாளிதழ்களில் நினைவஞ்சலி விளம்பரங்கள் வெளியிடப் பட்டன.

இந்த விளம்பரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த அஞ்சலி போஸ்டர்கள் சென்னை நகரின் பல இடங்களிலும் ஒட்டப் பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே வைகோ வேறு ஸ்டாலின் பெயரில் குற்றம் சாட்டி, சாதிக் பாட்சாவின் கொலையாளி என்ற அளவுக்கு உறுதியாகக் கூறியிருந்த நிலையில், சாதிக் பாட்சா உறவினர்களே கூடா நட்பு கேடாய் முடியும் என்று விளம்பரம் வெளியிட்டதால், மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கடி முற்றியது.

நாடாளுமன்றத் தேர்தல்கள் வேறு நடைபெற்று வரும் நிலையில், இந்த விளம்பரம் மு.க.ஸ்டாலினுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்று கட்சியினர் கருதினர். இந்த நிலை யில், சாதிக் பாட்ஷா மனைவி ரெஹ்னா பயணித்த கார் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகம் வந்த ரெஹ்னா பானு, ஆணையரிடம் மனு அளித்துவிட்டு, பின்னர் செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் நேற்று இரவு, அசோக் நகரிலிருந்து துரைப்பாக்கம் சென்றபோது, இரவு 10 மணி அளவில், துரைப்பாக்கம் சிக்னலுக்கு சற்று முன் எங்கள் கார் மீது திடீரென
கற்கள் வீசப்பட்டன. கணவரின் நினைவஞ்சலி விளம்பரத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ள தால் எனக்கு பயமாக உள்ளது.

கண்ணாடி உடைந்ததும் காரை நிறுத்தாமல் நாங்கள் சென்று விட்டோம். இதன் பின்னணியில் யார் இருப்பார்கள் என நான் இப்போது சொல்ல பயமாக உள்ளது.
எனவே சொல்ல விரும்பவில்லை. தாக்குதல் நடத்தியவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியாது என்று கூறினார்.

அப்போது உடன் இருந்த ரெஹ்னா பானுவின் வழக்கறிஞர், சாரநாத் கூறுகையில், கடந்த 5 ஆண்டு களாகவே இவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. வழக்கறிஞர்கள் என்ற பெயரில் சிலர் அவரை பயமுறுத்தி வந்தனர்.

இதனால் அவர்கள் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பின்னர் பிரச்னை இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் பிரச்னை வந்துள்ளது.

சாதிக் பாட்சாவின் நினைவு நாளில் விளம்பரம் கொடுத்த 3வது நாள் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதால் இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆணையர் உறுதி கூறியுள்ளார்.. என்று கூறினார்.

Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.

1 கருத்து

-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: