முகநூலை வெச்சு பொழச்சது எனக்குத் தெரிந்து #ஜோதிமணி தான் என நினைக்கிறேன்! முகநூல் லைக்க வச்சு ஒரு MP சீட்டே வாங்கியிருச்சே! இதுக்கெல்லாம் எவன் ஓட்டு போடுவான்?! எல்லா புகழும் ஆளூர் ஷா நவாஸ்க்கே என்று ஒருவர் கருத்திட,

இல்லை டிவிட்டர் மேலிட பொறுப்பாளர் டிவிட் எல்லாம் ரிடிவிட் பண்ணியே….சீட் வாங்கியிருக்காங்க என்று ஒருவர் பதிலளிக்க…

கரூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் சீட் பெற்ற செல்வி ஜோதிமணி குறித்து சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கின்றன.

ஓர் தகவலுக்காக….. கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணியை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது….
தேர்தலை சந்தித்த போது அவர் சொந்த கிராமமான அரவக்குறிச்சி தாலுகா நெடுங்கூரில் அவர் வாங்கிய ஓட்டுக்கள் 7 (ஏழு) மட்டுமே….. மொத்தம் ஜோதிமணி வாங்கிய ஓட்டுக்கள் 29,000 மட்டுமே.. என்று கடந்த தேர்தலை அசை போடுகிறார் ஒருவர்.

இருப்பினும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு தன் தொகுதிக்கு மட்டும் ஒரு தேர்தல் அறிக்கையை கொடுத்த மிகப்பெரிய ’புத்திசாலி’ ஜோதிமணி !

முன்னதாக இந்தத் தொகுதியில் அதிமுகவின் கே தம்பிதுரை போட்டியிட்டு வென்று துணை சபாநாயகராகவும் இருந்தவர்! இந்தத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறை வெற்றி பெற்றுள்ளது 1957 1962 1971 1977 1980 1984 ஆகிய வருடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது!

அதேபோல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6 முறை வெற்றி பெற்றுள்ளது! 1989 91 98 99 2009 2014 என ஆறு முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது! சுதந்திரா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், திமுக ஆகியவை 67 96 2006 ஆகிய வருடங்களில் வென்றுள்ளது!

தற்போது 44 வயதாகும் ஜோதிமணி கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டவர். கடந்த முறை போல், இந்த முறையும், தன் தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...