இலங்கையில் ரூ. 26 ஆயிரம் கோடி முதலீடா?! அப்போ… திமுக., தலைகளிடம் எவ்ளோ கோடி இருக்கும்..?!

இலங்கையில் ஹம்பந்தோட்டா துறைமுகத்துடன் அமைந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்ய சிங்கப்பூரில் பதிவு பெற்ற திமுக., தலைவர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு கேள்வி இது…

அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்ஷகனிடம் பொது மக்களின் கேள்வி என்ன வென்றால் இந்த திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்ய உங்களிடத்தில்
ரூ.26000 கோடி முதலீடு உள்ளதென்றால் , வேறு என்னென்ன திட்டங்களில் உங்கள் ஒரு குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளீர்கள்.

உங்கள் அடிப்படை தொழில் என்ன? ஒரு போணியாகாத ஓட்டலையும், தரமற்ற கல்வி நிறுவனத்தையும் வைத்துக் கொண்டு ஒரு மாநில அரசாங்க வருமானத்தின் பாதியை உங்களால் எப்படி சம்பாதிக்க முடிந்தது. ஒரு 2 ம் கட்ட தலைவரான உங்களிடமே இலட்சக்கணக்கான கோடி சொத்துக்கள் என்றால் முதல் கட்ட தலைவர்களிடம் எவ்வளவு இருக்கும் ?.

திமுகவினர் 30 இலட்சம் கோடிக்கும் மேலாக மக்களிடம் கடந்த 20 ஆண்டுகளில் கொள்ளை அடித்து பல்வேறு நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக சமீபத்தில் பல்வேறு சமூக ஊடங்களில் கசிந்து வரும் தகவல்களை இது உண்மையாக்குகிறது.

2 ஜி ஊழல் அதல பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது என்று கூறுவதன் உண்மை பின்னணி இதுதானா? நீங்களெல்லாம் பொது சேவை செய்ய முன்வரலாமா ? இந்தியாவில் நீங்கள் கொள்ளை அடித்த இலட்சக்கணக்கான கோடிகளை இலங்கையில் முதலீடு செய்ய வசதியாகத்தான் விடுதலை புலிகளையும், ஈழ மக்களையும் கொல்ல வழி ஏற்படுத்தினீர்களா ?

ராஜபக்ஷேவிடம் டி.ஆர்.பாலு, கனி மொழி உட்பட மற்ற உங்கள் எம்பிக்கள் ஆகியோர் அதிகம் கொஞ்சி மகிழ்ந்து பேசியது இதற்காகத்தானா ? மக்களை பகல் வேடம் போட்டுக் கொண்டு இவ்வாறு ஏமாற்றலாமா???

– ஜெயமுருகன் கார்மேகம்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...