October 19, 2021, 7:09 am
More

  ARTICLE - SECTIONS

  திமுக.,வின் உண்மையான வாக்கு பலம் என்ன?!

  stalin gopal - 1

  2014-ல் நடந்த RK நகர் இடைத் தேர்தலில் -ஜெயலலிதா நின்றார் – அவரை
  எதிர்த்து தி.மு.க வேட்பாளரை இறக்கவில்லை -கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரன் நின்றார் ! அந்தத் தேர்தலில் -ஜெயலலிதா பெற்ற வாக்குகள் -1,60,432 – அதாவது 88.43 சதவீதம்!

  இப்பொழுது எனது சந்தேகம் எல்லாம் -அ.தி.மு.க-வின் நேர் எதிரியான தி.மு.க தொண்டர்கள்,தி.மு.க களம் காணாத நிலையில் -ஒன்று – வாக்களிக்காமல் இருந்திருக்க வேண்டும் -அல்லது எதிர்த்து கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு வாக்களித்திருக்க வேண்டும் !

  ஆனால், ஏன் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தனர்?-அடுத்து அதே ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் -ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க வின் சார்பில் சிம்லா முத்துச்சோழன் நின்றார் -இதில் அவர் பெற்ற வாக்குகள் 57673 -இதிலும் ஜெயலலிதா 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!

  ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடந்த இடைத் தேர்தலில் -TTV தினகரன் சுயேச்சையாக நின்று நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!

  இந்தத் தேர்தலில் தி.மு.க வின் மருதுகணேஷ் வெறும் 24,000 வாக்குகள் மட்டுமே பெற்று டிபாஸிட்டைப் பறி கொடுத்தார். அதாவது, ஜெயலலிதா இருக்கும் பொழுது சிம்லாமுத்துச் சோழன் பெற்ற வாக்குகள் கூட -தி.மு.கவினால் பெற முடியவில்லை –

  இது தான், தமிழகம் முழுவதும் தி.மு.க வின் உண்மையான பலம்!  பணம் கிடைத்தால் தனது சொந்தக் கட்சிக்குக் கூட வாக்களிக்காமல் ஏமாற்றும் கயவர்களைக் கொண்ட கட்சி தி.மு.க! இந்த லட்சணத்தில் இவர் தமிழக முதல்வராக ஆசைப்படுகிறார்!

  அது மட்டுமல்லாமல்-ஏழு வருடங்களுக்கு மேல் ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் -நாள் தோறும் தி.மு.க நிர்வாகிகள் தொண்டர்களின் அத்துமீறல்கள், அராஜகங்கள் வேறு வைரலாகி வருகின்றன!

  சொந்தக் கட்சி நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டை அடக்கி ஆள வேண்டும் என்று வேறு பேராசை !

  கருணாநிதி இருக்கும் பொழுதே மெஜாரிட்டியாக ஆட்சி அமைக்க முடியாத தி.மு.க
  இன்று அழிவின் விளிம்பில் தான் இருக்கிறது!

  சாதாரண தெருமுனைக் கூட்டங்களுக்குக் கூட பணம் கொடுத்துக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை ஒரு பக்கம் என்றால், ஸ்டாலின் அவர்களின் கோமாளித் தனமான பேச்சுக்களும், நாடகங்களும் வேறு மக்களிடம் கேலிக்கூத்தாகத் தோன்றுகிறது!

  போதாக்குறைக்கு ராகுல் ஸ்டாலின் கூட்டணி என்பதை _மக்கள், மிகப் பெரிய நகைச்சுவையாகத்தான் பார்த்து வருகிறார்கள்!

  கடந்த கால நிகழ்வுகளிலிருந்தும் -நிகழ்கால நடப்பிலிருந்தும் -நாம் தெரிந்து கொள்ள வேண்டியது -தி.மு.க ஒன்றும் மிகப் பெரிய வாக்கு வங்கி கொண்ட கட்சி அல்ல –
  அதன் தொண்டர்களே கூட சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வாக்களிக்கக் கூடியவர்கள் என்பதே!

  ஆனால், இவர்கள் இங்கே – நாளொரு மேனியும், பொழுதொறு வண்ணமும் தாமரை மலராது, தாமரை மலராது என்று கூறுவது – அவர்களது பயத்தைக் காட்டுகிறது !

  இன்றைய தேதியில் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் கட்சியாக பா.ஜ.க உள்ளது – கடந்த வருடம் தந்தி TV எட்டாயிரம் பேரிடம் எடுத்த ஒரு கருத்துக் கணிப்பில் கூட 25% மக்கள் மோடியை விரும்புவதாக வாக்களித்திருந்தனர் !

  அதே சதவீதத்தை மொத்த வாக்காளர்களுக்கும் பொருத்திப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் மோடி ஆதரவு மனநிலையில் இருப்பது தெளிவு!

  போதுமான வலுவான கூட்டணி அமைந்து விட்ட நிலையில் – – ஊழல், தி.மு.க. தமிழர் விரோத காங்கிரஸ் நக்சல் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க கூட்டணியை எளிதாகத் தோற்கடிக்கலாம்!

  • ந. முத்துராமலிங்கம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,140FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,565FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-