சிலர் ஒரே கட்சியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருவார்கள். சிலர் பதவிக்காக கட்சி மாறுவார்கள். சிலர் கொள்கைக்காக கட்சி மாறுவார்கள்.
இந்த நபரோ… தன் வாழ்நாளில் 5 கட்சி, 7 சின்னத்தில் போட்டியிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் நபர் யார் தெரியுமா?
கட்சி தாவலுக்கு தமிழகத்திலேயே முன்னுதாரணமாக இருப்பவர் இவர்தான். அவர் பெயர், திருநாவுக்கரசர். காங்கிரஸில் தலைவராக இருந்தார். இப்போது ஒரு வேட்பாளர் ஆகியிருக்கிறார்.
திருநாவுக்கரசர் போட்டியிட்ட தேர்தல்களும் சின்னமும….
1977 – அறந்தாங்கி – இரட்டை இலை
1980- அறந்தாங்கி – இரட்டை இலை
1984- எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்து – சேவல்
1989 – அறந்தாங்கியில் சுயேச்சையாக – குடை
1991 – அறந்தாங்கியில் சுயேச்சையாக – மாம்பழம் (திமுகவுடன் கூட்டணி)
1996 – அதிமுகவில் இணைந்து அறந்தாங்கியில் போட்டி – இரட்டை இலை
1999 – லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக புதுக்கோட்டையில் வெற்றி – மோதிரம் (திமுகவுடன் கூட்டணி வைத்து)
2009 – பாஜக வேட்பாளராக ராமநாதபுரத்தில் – தாமரை
தற்போது 2019 – கை சின்னத்தில் திருச்சியில் போட்டி.