October 26, 2021, 5:06 am
More

  ARTICLE - SECTIONS

  ஓட்டைப் பானையில் போடுங்கள்… சொன்னாலும் சொல்வார்- பழமொழி நாயகர் துண்டுச்சீட்டு தலைவன், உளறல் மாமணி!

  IMG 20190330 WA0008 - 1

  ஓட்டைப் பானையில் போடுங்கள் _ பழமொழி நாயகர் துண்டுச்சீட்டு தலைவன் உளறல் மாமணி சொன்னாலும் சொல்வார்..!

  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் சென்று வழிபாடு செய்து இருக்கிறார்.

  அங்கே இருக்கக்கூடிய தீட்சிதர்கள் பெருமக்களிடம் வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்து வருகிறார். அவர்களும் திருக்கோயில் வந்து வாக்கு சேகரித்த திருமாவளவன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நெற்றியில் விபூதி இட்டு சால்வை அணிவித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

  இவருடன் விடுதலைச் சிறுத்தை கட்சியை சார்ந்த வன்னியரசு உள்ளிட்ட நிர்வாகி களும் சென்றிருக்கிறார்கள். கிமு, கிபி என்பதுபோல  தே.மு ( தேர்தலுக்கு முன்பு ) தே.பி (தேர்தலுக்கு பின்பு) என்பதுபோல நடந்த நிகழ்வுகளை தங்களுக்கு நினைவூட்டவே இதை குறிப்பிடுகிறேன்.

  நேற்று மதுரையில் வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களை இஸ்லாமியர்கள் மசூதிகள் வரக்கூடாது.

  இங்கு வந்து மோடி அவர்கள் பிரதமர் ஆவதற்கு வாக்கு சேகரிக்க கூடாது என்று திருப்பி அனுப்பி அவமானப்படுத்தினார்கள் உண்மைதான்.

  thirumavalavan potsymbol - 2

  *மசூதி_ இஸ்லாமியர்கள் மதவெறி தன்மை புரிந்துகொள்ள நேற்றைய சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

  *ஆனால் தொடர்ந்து இந்து சமயத்தை சனாதன சமயம் என்றும் சனாதன வாதிகளிடம் இருந்து விடுதலை வேண்டும் என்றெல்லாம் மீசையை முறுக்கி, கை சட்டையை முறுக்கி ஆவேச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து விட்ட  அருமை திருமாவளவன் அவர்கள் சனாதன , பார்ப்பண தில்லைவாழ் அந்தணர்களிடம் ஓட்டு வேண்டும் என்று வேண்டி நிற்பதைப் பார்த்தால் இவர் சொன்ன சனாதனம் என்ன என்பதே எனக்குப் புரியவில்லை.!

  *ஒரு பட்டியல் இனத்தை சார்ந்தவன் என்பதற்காக இழி சாதி மக்களை பார்ப்பனர்கள் தொட்டால் தீட்டு என்று எத்தனை மேடைகளில் தொலைக்காட்சி விவாதங்களில் முழங்கியிருப்பார்கள்.

  *ஆனால் இன்று அந்தப் பூணூல் அணிந்த தீட்சிதர் தான் திருமாவளவன் நெற்றியில் விபூதி அணிவிக்கிறார். இனியாவது பார்ப்பணர்கள் தொட்டால் தீட்டு என்று எந்த மேடையிலும் இவர்கள் பேச மாட்டார்கள் என்று நம்புவோம்.

  *இந்து ஆலயங்களை திருவரங்கம் கோயிலை, காஞ்சிபுரம் காமாட்சி கோயிலை மீண்டும் புத்த விகாரம் ஆக மாற்ற வேண்டும் என்று முழங்கிய திருமா, இன்று ஓட்டிற்காக இப்படி விபூதி அணிவதும் ஆலயம் வருவதும் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் சொல்வதுபோல இந்துக்களை ஏமாற்றுவதற்காகவாஇல்லை
  வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கபட அரசியல் நாடகத்திற்காகவா?

  *இந்து ஆலயங்களுக்கு சென்று வாக்கு வேண்டும் என்று கேட்கக் கூடிய நிலைமை வந்ததற்கு காரணமான சூழல் இந்து ஓட்டு வங்கி உருவாகிறது என்கின்ற அச்சத்தின் காரணமாகவே….

  *திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கக் கூடிய திக தலைவர் வீரமணியிடம் அண்ணன் திருமாவளவன் அவர்களே… சொல்லுங்கள் பார்ப்பனர்கள் என்று மேடை எல்லாம் முழங்கிய நீங்கள் தீட்சிதர்கள் என்னை தொட்டு விபூதி அணிவித்து வாழ்த்து கூறினார்கள். *நீங்கள் எப்பொழுது சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரப்போகிறீர்கள்? என்று…. * தீட்சிதர்கள் திரும்பிப்போ என்று சொல்ல மாட்டார்கள். இஸ்லாமியர்களைப் போல வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்.

  *நடராஜா திருக்கோயிலில் வழிபாடு செய்து வெற்றி பெற பிரார்த்தனை செய்து வரக்கூடிய அனைவருக்கும் விபூதி அணிவிப்பார்கள். என்று வீரமணியிடம் சொல்லுங்கள். கூடவே  திமுகவின் தொங்கு சதை சு.ப.வீரபாண்டியன் அவரிடமும் சொல்லுங்கள்.

  *தில்லைவாழ் அந்தணர்கள் நல்லவர்கள் *என்று… சகோதரர் திருமாவளவன் அவர்களை பாராட்டி தான் ஆக வேண்டும்.

  *இவர் திமுக தலைவர் ஸ்டாலினைப் போல நெற்றியில் வைத்த விபூதியை அளிக்கவில்லை… *கனிமொழியை போல நான் கண்ணன் சிலைக்கு மாலை அணிவிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை….

  திமுக தலைமையிடம் இருந்து நீங்கள் எப்படி சிதம்பரம் கோயிலுக்கு செல்லலாம் ?
  விபூதி எப்படி பூசிக்கொள்ளலாம் என்று விளக்கம் கேட்டு நோட்டிஸ் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

  இனிமேல் உறுதியாகச் சொல்லலாம் சனாதன மதம் இஸ்லாமியர்களைப் போல,
  மதவெறி கொண்டது அல்ல.
  பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்பதுபோல தன்னை எதிர்ப்பவர்கள் மரியாதை செய் என்ற வாழ்வியல் தத்துவம் கொடுக்கக்கூடிய சகிப்புத் தன்மை மிக்க ஒரு மதம் என்று திருமாவளவனுக்கு இன்று புரிந்திருக்கும்.#

  இனிமேல் “சனாதனத்தை வேரறுப்போம். மற்றதையெல்லாம் மண்ணிலிருந்து பிடுங்குவோம்” என்று இவரும், இவர் கட்சியினரும் முழங்க மாட்டார்கள்.

  ஐயா சுப்பிரமணியசாமி  சொல்லுவார் இந்துக்கள் ஒன்றாக ஓட்டு போடுவார்கள் என்று நிலைமை வந்தால் கருணாநிதிகூட பஜனை பாடி வாக்கு சேகரிக்க வருவார் என்று… அதுதான் இன்று திருமாவளவன் அவர்கள் சிதம்பரம் கோயில் வருகைக்கு காரணமாக இருக்குமோ என்று ஒப்பிடத் தோன்றுகிறது.

  தாங்கள் விபூதி அணிந்து கொண்டது உண்மையிலேயே பக்தியின் பொருட்டா இல்லை ஓட்டு அரசியலுக்காக வா? இல்லை கேகேஎஸ்எஸ்ஆர் சொன்னதுபோல தீக்ஷிதர்களையும், இந்துக்களையும் ஏமாற்றுவதற்காகவா? என்பதை திருமாவளவன் அவர்கள் விளக்க வேண்டும்.

  *இந்துக்கள் வணங்கும் கண்ணபிரானை இழிவுபடுத்தி பேசி இந்துக்களுடைய மத நம்பிக்கையை கொச்சைப்படுத்திய தீர்க்க வீரமணியை கண்டித்து திருமாவளவன் அவர்கள் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவாரா?

  *நாங்கள் இந்துக்களே அல்ல .. இந்துக்களாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறோம்…
  நான் இந்து என்று சொல்ல மாட்டேன்… *அது ஒரு அவமான சொல் என்று வீராவேசமாக முழங்கிய  அண்ணன் வன்னிஅரசு அவர்கள் இனிமேல் என்ன சொல்லுவார்? என்று எனக்கு தெரியவில்லை .

  *இந்து என்று சொல்லுவாரா இல்லை வேறு ஏதாவது சொல்லுவாரா?

  *தேர்தல் ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். தயவுசெய்து பழமொழி நாயகரை தாங்கள் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்… அவரை பிரச்சாரத்திற்கு அழைத்தால் உங்களுக்கு விழவேண்டிய ஓட்டுக்களும் விழாமல் போய்விடும்.!

  காரணம் உங்கள் பொன்னான வாக்குகளை உங்கள் பானை சின்னத்திற்கு போடுங்கள் என்று அவர் கேட்க மாட்டார். அதை விட்டுவிட்டு “பானையில்
  ஓட்டை போடுங்கள்” இல்லையெனில் “ஓட்டைப் பானையில்” போடுங்கள் என்று கேட்டு விட்டு சென்று விடுவார் எச்சரிக்கையாக இருங்கள்……

  இல்லையெனில் *”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ” என்பதை மாற்றி ” ஒரு சோற்றுக்கு ஒரு பானை பதம் என்று சொல்லுவார்” என்னதான் பேசினாலும் “வாய் புளித்ததோ- மாங்காய் புளித்ததோ என்று மட்டும் அங்கு பேசமாட்டார். காரணம் உங்களை எதிர்த்துப் போட்டியிடுவது மாம்பழம்.”

  *தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

  – ராம ரவிக்குமார் (நிறுவனத் தலைவர் இந்து தமிழர் கட்சி)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,586FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-