மார்க்சிஸ்ட் பொதுச் செயலரானார் சீதாராம் யெச்சூரி

விசாகப்பட்டினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி (62) ஞாயிற்றுக்கிழமை நேற்று தேர்வு செய்யப்பட்டார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தேசிய மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், மூத்த தலைவர் ராமச்சந்திரன் பிள்ளையும் முன்மொழிந்தனர். மேலும், மத்திய குழுவுக்கு 91 உறுப்பினர்களும், அரசியல் தலைமைக் குழுவுக்கு (பொலீட் பீரோ) 16 உறுப்பினர்களும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.