spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைதிமுக ஐடி விங் நடத்திய கருத்துக்கணிப்பை 'லயோலா கல்லூரி' பெயரில் வெளியிட்ட ஊடகங்கள்: தேர்தல் ஆணையம்...

திமுக ஐடி விங் நடத்திய கருத்துக்கணிப்பை ‘லயோலா கல்லூரி’ பெயரில் வெளியிட்ட ஊடகங்கள்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

- Advertisement -

திமுகவின் IT விங் ஊத்தங்கரை பொறுப்பாளர் லயோலா ராஜசேகர் என்பவர் போலியாக உருவாக்கிய டுபாக்கூர் கருத்துக்கணிப்பை, தமிழ்நாட்டின் முதன்மை ஊடகங்கள் – புகழ்பெற்ற லயோலா கல்லூரியின் பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ளன.

மருமகன் கொடுக்கும் பணத்திற்காக கூலிக்கு வேலை செய்யும் நபர்கள் நடத்தும் Fake News கருத்துக்கணிப்பை, தமிழ்நாட்டின் முன்னணி ஊடகங்கள் முறையாக ஆய்வு செய்யாமல் வெளியிட்டது எப்படி? இது என்ன விதமான ஊடக தர்மம்?

இந்திய தேர்தல் ஆணையம் 2019 தேர்தலுக்காக அளித்துள்ள ஊடக வழிகாட்டு நெறிகளில் (Election Commission of India – Handbook for Media 2019) கூறப்பட்டுள்ள விதிகள்:

  1. கருத்துக்கணிப்பை நடத்தியவர் யார், அதற்காக பணம் செலவிட்டவர் யார் என்பது குறித்து துல்லியமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
  2. கருத்துக்கணிப்பை நடத்திய நிறுவனம் எது, அதன் பின்னணி என்ன என்பதை முறையாக ஆராய வேண்டும்.
  3. கருத்துக்கணிப்புக்காக திரட்டப்பட்ட உண்மை புள்ளி விவரங்ளை (raw data) செய்தி நிறுவனங்கள் அதனை நடத்தியோரிடம் கேட்டுப் பெற வேண்டும்.
  4. மேற்படி நிறுவனம் அளித்த உண்மை புள்ளி விவரங்களை (raw data) கொண்டு – ஊடக நிறுவனங்களும் சோதனை முறையில் கருத்துக்கணிப்பு (random or sample checks on the raw data) நடத்தி அந்த விவரம் உண்மை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இவ்வாறு முழு விவரங்களை பெற்று, அதனை ஆய்வு செய்து, பின்னர் தாமும் மாதிரி கருத்துக்கணிப்பு நடத்தி – உண்மையை உறுதி செய்து செய்தி வெளியிட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறி ஆகும்.

படுகொலையானது ஊடக தர்மம்!

திமுக IT விங் நடத்திய போலி கருத்துக்கணிப்பை – லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பு என செய்தி வெளியிட்ட நிறுவனங்கள் ஒன்றாவது – தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றினவா?

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளை சிறிதளவும் மதிக்காத தமிழ்நாட்டு ஊடகங்கள் – யாருக்காக, எதற்காக பொய்யான Fake News செய்திகளை வெளியிடுகின்றன? இவையெல்லாம் சட்டவிரோத Paid News பட்டியலில் சேராதா? இந்த அக்கிரமத்துக்கு முடிவு என்ன?

இணைப்பு – கருத்துக்கணிப்புகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிகள்:

Election Commission of India – Handbook for Media 2019: Advisory Regarding Programmes relating to Opinion Polls or other surveys relating to elections

Special care must be taken to report opinion polls accurately and fairly, by disclosing to viewers as to who commissioned, conducted and paid for the conduct of the opinion polls and the broadcast.

News broadcasters must conduct a proper due-diligence check in regard to the organizations/ agencies engaged or commissioned for conducting any opinion poll or other survey relating to elections;

News broadcasters must obtain and retain raw data pertaining to any opinion poll or other survey relating to elections from the organizations/ agencies engaged or commissioned for conducting such polls;

News broadcasters must conduct random or sample checks on the raw data pertaining to any opinion poll or other survey relating to elections in order to verify the authenticity of poll/ survey so conducted.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe