காவி துண்டு போட்டுக் கொண்டு ஓட்டு போட போக கூடாது என தடுக்கிறார்கள் காவலர்கள்… என்று இந்து மத சிந்தனைகளில் ஊறிய சிலர் தங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அயன் திருவாலீஸ்வரம் திருக்கோவில் அருகே தாங்கள் காவித் துண்டுடன் சென்ற போது, காவலர்கள் இவ்வாறு சென்று வாக்களிக்கக் கூடாது என்று தடுத்தார்கள் என்று கூறுகின்றனர் சில இளைஞர்கள். இதனைத் தங்கள் டிவிட்டர் பதிவுகளிலும் ஏற்றியுள்ளனர்.
காவித் துண்டு எந்தக் கட்சியின் கொடி ஆனது என்று கேள்வி எழுப்பும் அவர்கள், அது எந்தக் கட்சியின் அடையாளச் சின்னமும் அல்ல என்று கூறி மல்லுக்கு நின்று பின்னர் தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர்.
கடைசியாக காவி துண்டு போட்டுக் கொண்டு தான் போய் வாக்களித்தோம்…. என்ன சிறுது நேரம் கால தாமதம் ஆனது…. #JaiSriRam #Vote4Modi #VoteForIndia #Modioncemore #இந்துவிரோதிதிமுக
Finally they allowed us with our religious identification….
கடைசியாக காவி துண்டு போட்டுக் கொண்டு தான் போய் வாக்களித்தோம்….
என்ன சிறுது நேரம் கால தாமதம் ஆனது….#JaiSriRam#Vote4Modi #VoteForIndia #Modioncemore #இந்துவிரோதிதிமுக pic.twitter.com/aJmajKeaoy
— பூலித்தேவன் (@Manikandaraman7) April 18, 2019