அப்பாடா ? ஒரே ஒரு மாதத்தில் திமுக தேர்தல் நிதி ரூ.2 கோடி : கருணாநிதி மட்டற்ற மகிழ்ச்சி

04-04-15 Dmk Karunathi Leter photo 01நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையடுத்து தி.மு.க கட்சி நிதி சேகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திமுக சார்பில் ஒரே மாதத்தில் ரூ.2 கோடிக்கு மேலாக தேர்தல் நிதி திரட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக சார்பில் ஒரே மாதத்தில் ரூ.2 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 12 ஆம் தேதி, கொள்கை காத்திடக் குவியட்டும் தேர்தல் நிதி என்று தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சேர்ந்திருக்கின்ற தேர்தல் நிதி ரூ.2 கோடியே 24 இலட்சத்து 80 ஆயிரத்து 275 என அறிவித்தார். தி.மு.க. பெறவிருக்கின்ற மகத்தான வெற்றிக்கு, நிதி வழித் துணையாய் அமையும் என்று துள்ளிக் குதிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.