2 நாள் இடைவெளி… மதுரையில் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார் கமல்ஹாசன்!

இந்நிலையில் இன்று அவர் பிரசாரம் செய்ய வருகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தகவல் வெளியிட்டுள்ளது! கமல் பிரசாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்...

அரவக்குறிச்சியில் தான் பேசியதற்கு 13ஆம் தேதி காலை முதலே சமூக வலைதளங்களில் எதிர்ப்புகளும் கட்சித் தலைவர்களின் கண்டனங்களும் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார் கமல்!

இந்நிலையில் இந்து அமைப்பினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் கமல் மிகவே நொந்துபோனார்! இந்த நிலையில் பிரச்சாரம் செய்யச் சென்றால் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்ற அச்சத்தில் 13-ஆம் தேதி மாலை அரவக்குறிச்சியில் நடக்க இருந்த தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார்!

மேலும் நேற்றைய ஓட்டப்பிடாரம் பிரச்சாரத்தையும் ரத்து செய்து கமல் ஓடி ஒளிந்து கொண்டதாக தகவல் வெளியானது!

இந்நிலையில் இன்று அவர் பிரசாரம் செய்ய வருகிறார் என்று மக்கள் நீதி மய்யம் தகவல் வெளியிட்டுள்ளது! கமல் பிரசாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்…

கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தை ரத்து செய்த கமல், இன்று பிரசாரம் செய்கிறார்! கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட கமல், திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்!  திருப்பரங்குன்றம் – தோப்பூர், பெரியார் நகர், சமநாதம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் கமல் பிரசாரம் செய்கிறார் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்து தீவிரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக கடந்த 2 நாட்களாக தனது பிரசாரத்தை ரத்து செய்திருந்த கமல், இன்று மீண்டும் பிரசாரக் களத்தில் இறங்கியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும் அரவக்குறிச்சியில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே அவர் ஏந்நேரமும் கைதாகலாம் என்ற சூழல் ஏற்பட்டது. கமல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கமல் இன்று மீண்டும் பிரசாரக் களத்துக்கு வருகிறார்.

 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...