இந்து என்று சொல்லிக் கொள்வதே நமது அறியாமை தான் என்று கூறி, அடுத்த சர்ச்சையை தொடங்கியுள்ளார் கமல்ஹாசன்.

ஆங்கிலேயர், மொஹலாயர் வருகைக்கு முன் இந்து என்ற சொல் இல்லை என்பதால், நாம் அடுத்தவர் நமக்கு சூட்டிய சொல்லை வைத்து நமது மதத்துக்கு சூட்டிக்கொள்வது அறியாமை என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.

இந்து தீவிரவாதி என்ற வாசகத்தை வேண்டுமென்றே கூறி, ஒரு அரசியல் புயலைக் கிளப்பிய கமல்ஹாசன், அந்தத் தவறால் ஏற்பட்டதை மறைக்க மேலும் மேலும் தனது வாதத்துக்கு வலு சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் தவறு செய்துவருகிறார்.

இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதிய கருத்து…

சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய மாநில அரசுகள்

மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது

12 ஆழ்வார்களும் 63 நாயன்மார்களும் இந்து என்கின்ற மத குறிப்பு சொல்லப்படவில்லை

முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவரால் இந்து என ஒரு நாமகரணம் செய்யப்பட்டும் ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக மதமாக கொள்வது எத்தகைய அறியாமை?

நாம் இந்தியர் என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது

நாம் நமது அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்

புரியலன்ற சோமாரிகளுக்கு

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்

கோடின்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல… அரசியல்வாதி அல்ல வெறும் வியாதி. தமிழா நீ தலைவன் ஆக வேண்டும் இதுவே என் வேண்டுகோள் – என்று கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை செய்துள்ளார்

 

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...