பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சி மீண்டும் அமையும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மற்றும் விஎம்ஆர் இணைந்து நடத்திய ‘எக்ஸிட் போல்’, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 306 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல் மற்ற நிறுவனங்களும் தங்கள் எக்சிட் போல் முடிவுகளை தெரிவித்து வருகின்றன.

நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற 7 கட்டத் தேர்தலில், கடைசிக் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இதை அடுத்து, எக்ஸிட் போல் – தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23இல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.

இந்நிலையில், எக்ஸிட் போல் – கருத்துக் கணிப்பு முடிவுகளை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு: மாநில வாரியாக…

மாநிலம் : இடங்கள் |  பாஜக., | பாஜக + | காங். | காங்.+ | மற்றவை
அந்தமான் நிகோபார்:  1 1 0 0 0 0
தெலங்கானா : 17 1 0 2 0 14
ஆந்திரம்:  25 0 0 0 0 25
அருணாசல் :   2 2 0 0 0 0
அஸாம் : 14 6 0 5 2 1
பிகார் :  40 16 14 3 7 0
சண்டிகர் :  1 1 0 0 0 0
சடீஸ்கர் :  11 7 0 4 0 0
தத்ரா நாகர்ஹவேலி : 1 0 0 1 0 0
டாமன் & டையு:  1 1 0 0 0 0
தில்லி :  7 6 0 1 0 0
கோவா : 2 1 0 1 0 0
குஜராத் : 26 23 0 3 0 0
ஹரியானா : 10 8 0 2 0 0
ஹிமாசல் பிரதேஷ் : 4 3 0 1 0 0
ஜம்மு, காஷ்மீர் : 6 2 0 0 4 0
ஜார்கண்ட் :  14 8 0 3 3 0
கர்நாடகா : 28 20 1 6 1 0
கேரளம் :  20 1 0 11 4 4
லட்சத்தீவுகள் :  1 0 0 0 1 0
மத்திய பிரதேஷ் :  29 24 0 5 0 0
மகாராஷ்டிரம் :  48 22 16 2 8 0
மணிப்பூர் : 2 1 0 1 0 0
மேகலயம்:  2 0 0 1 0 1
மிசோராம் :  1 0 0 0 0 1
நாகாலாந்து : 1 0 0 0 1 0
ஒடிஷா :  21 12 0 1 0 8
புதுச்சேரி :  1 0 1 0 0 0
பஞ்சாப் :  13 1 2 10 0 0
ராஜஸ்தான் :  25 20 1 4 0 0
சிக்கிம் :  1 0 0 0 0 1
தமிழ்நாடு :  38 2 7 6 23 0
திரிபுரா :  2 2 0 0 0 0
உத்தர பிரதேசம்: 80 56 2 2 0 20
உத்தராகண்ட் :  5 4 0 1 0 0
மேற்கு வங்கம் :  42 11 0 2 0 29
மொத்தம் :  542 262 44 78 54 104
தேஜகூ –  306 ஐமுகூ –  132

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...