கரூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா

14-04-15 Karur Dr Ambatkar News photoகரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக கரூர் நகர் மண்டலம் சார்பாக தலைவர் மு.தமிழ்வாணன் தலைமையில்,மாவட்ட தலைவர் கே.சிவசாமி முன்னிலையிலும் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கரூர்  பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த விழாவில் டாக்டர் அம்பேத்கரின் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பா.ஜ.க வினர் கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரி, ஐ.டி பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி,அமைப்பு செயலாளர் நகுலன்,மாவட்ட செயலாளர் சுப்பிரமணி,நகர துணை தலைவர் செல்வம்,வடிவேல்,கண்ணன்,கோபி,பிரகாஷ்,சிவம் சக்திவேல், சி.கே.சரவணன், வசந்த், விஷ்ணுபாலாஜி, ராயனூர்  வடிவேல்  மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.