சினிமா பாணியில் தரமான சம்பவம்! மன்னர் பரம்பரை ஜோதிராதித்யா சிந்தியாவை வீழ்த்திய ‘நண்பேன்டா’…!

From Friends to Foes: The BJP Candidate Who Defeated Jyotiraditya Scindia in His Family Bastion மிகப்பெரிய யானை போல நின்ற ஜோதிராதித்ய சிந்திய வின்முன் கே பி யாதவ் என்ற கிருஷ்ண பிரசாத் யாதவ் ஒரு சிறு எறும்பாக தெரிந்தார்

செல்பி எடுக்க அனுமதிக்காத மன்னர் குடும்பத்தைத் தேர்தலில் வீழ்த்திய… கொடிகட்டிய  அடிமட்டத் தொண்டன் சினிமா பாணியில் தரமான சம்பவம்.

சிறிது நாட்கள் முன்புவரை தனக்காக கொடிகட்டியவன் , இன்று தன்னையே தோற்கடித்தான் இதுபோல தமிழகத்தில் நடக்குமா , சினிமாவில் மட்டுமே நாம் பார்த்தது உண்மையில் நடந்துள்ளது

வழக்கமாக நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம் கதாநாயகன் மிகவும் ஏழையாக இருப்பான் ஒரு கட்டத்தில் அவனை ஒருவர் அவமானப்படுத்தியதும் ஒரே பாடலில் கோடிஸ்வரன் ஆகி தன்னை கேவலப்படுத்தியனுக்கு பதிலடி கொடுப்பார்!

அதேபோல தான் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது , மத்திய பிரதேச மாநிலம் குணா தொகுதியில் காலம் காலமாக வெற்றிபெறுபவர் மன்னர் பரம்பரையை சேர்ந்த ஜோதிராதித்ய சிந்திய இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் உள்ளார்!

இதற்கு முன்னர் இவர் அந்த தொகுதியில் பலமுறை வெற்றிபெற்றுள்ளார் , இவருக்கு முன்னர் இவரது தாத்தா , இவரது பாட்டி அனைவரும் இதே தொகுதியில் வெற்றி பெற்றவர்கள்!

இந்த முறை அவரை எதிர்த்து பாஜக சார்பில் கே பி சிங் யாதவ் என்ற ஒரு இளைஞர் களமிறங்கினார் இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட தொண்டனாக , கட்சிக்காக மாடாய் உழைத்தவர்!

அவர் 11 மாதங்களுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டு அவரை சந்தித்தார் , கே.பி யாதவ் அமித் ஷாவிடன் சொன்ன முதல் வார்த்தை நான் பாஜகவில் இணைகிறேன் எனக்கு குணா தொகுதியில் ஜோதிராதித்ய சிந்தியாவை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தாருங்கள் என்றார்

அதை கேட்ட அமித் ஷா அதிர்ந்து போனார் , ஜோதிராதித்ய சிந்திய மாநிலம் முழுவதும் செல்வாக்கு பெற்றவர் , காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்

அவரை எதிர்த்து நிற்க பலரும் தயங்கும் நிலையில் ஒரு சாதாரண இளைஞர் இவ்வளவு தைரியமாக கூறுகிறாரே என்று அமித் ஷா ஏன் என்று காரணம் கேட்டார்

அப்போது தனது மொபைல் போனை எடுத்த கே பி யாதவ் ஒரு செல்பி ஒன்றை காட்டினார் நான் காங்கிரஸ் கட்சிக்காக மாடுபோல கடந்த 8 ஆண்டுகளாக உழைத்தேன் ஆனால் நான் ஒரு செல்பி எடுக்கவேண்டும் என்று ஜோதிராத்திய சிந்தியாவிடம் கேட்டபோது அவரின் காவலர்கள் என்னை விரட்டினர்

அவர் காரில் வரும்போது செல்பி எடுத்தேன் அதை பார்த்த அவர் காரை நிறுத்தக்கூட இல்லை அப்படியே வேகமாக சென்றார் , அப்போது முடிவு செய்தேன் அவரின் கர்வத்தை அடக்கவேண்டு மென்று எனக்கு குணா தொகுதி முழுக்க நன்றாக தெரியும் அதனால் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றார்

அந்த இளைஞரிடம் ஒரு தீ பொறி இருப்பதை உணர்ந்த அமித் ஷா அவருக்கு வாய்ப்பளித்தார் அதை தொடர்ந்து குணா தொகுதியில் களமிறங்கினார் கே பி யாதவ்

அங்கு மிகப்பெரிய யானை போல நின்ற ஜோதிராதித்ய சிந்திய வின்முன் கே பி யாதவ் என்ற கிருஷ்ண பிரசாத் யாதவ் ஒரு சிறு எறும்பாக தெரிந்தார்

.ஆனால் மக்கள் எண்ணம் வேறுமாரியாக இருந்தது அவர்கள் தங்களோடு தங்களுக்காக உழைக்கும் கே பி யதாவுக்கு வாக்களித்தனர் தேர்தல் முடிவில் பாஜகவின் கே பி யாதவ் 6.14 லட்சம் வாக்குகளை பெற்றார் மறுமுனையில் தனது பரம்பரை தொகுதியில் ஜோதிராதித்ய சிந்திய 4.88 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று முதல் முறையாக சிந்திய குடும்பம் தோல்வி அடைந்துள்ளனர்

இதுபோல தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்புள்ளதா ? ஒரு வேலை தமிழகத்தில் இப்பொது இதுபோல நடந்தாலும் அவருக்கு நாம் வாக்களித்து வெற்றிபெற வைப்போமா ? மத்திய பிரதேச மக்கள் வெற்றிபெறவைத்துள்ளனர்

As the Bharatiya Janata Party (BJP) handed a surprising loss to the Congress party in Madhya Pradesh on Thursday, the biggest blow perhaps came in the form of Jyotiraditya Scindia’s defeat in his den –Guna, which his family has been winning since the independence.

– சந்திரன் முனி (Chandran Muni)

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...