‘கழக’க் கலகங்கள்..! குழாயடி அல்ல… இவை பேனா முனைச் சண்டைகள்!

கழகங்கள் கோலோச்சும் தமிழகத்தில், அரசியல் வளர்க்கும் இவற்றின் கலகங்கள் குறித்த ஒரு பார்வை...! அவற்றின் அதிகார பூர்வ நாளேட்டில் இருந்து!

murasoli namadu mgr amma

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று கழகங்கள் கோலோச்சும் தமிழகத்தில், அரசியல் வளர்க்கும் இவற்றின் கலகங்கள் குறித்த ஒரு பார்வை…! அவற்றின் அதிகார பூர்வ நாளேட்டில் இருந்து!


குளவி கூட்டுப்புழுவை ”கொட்டி, கொட்டி” குளவியாக ஆக்குவதைபோல அதிமுக – பாஜக ஆகி வருகிறது!

அதிமுக இயக்கமாக அல்ல ; கட்சியாக இருப்பதற்கு கூட தகுதியில்லாதது!

டூப்ளிகேட் திராவிட கட்சிதான் ”அதிமுக”

  • முரசொலி (திமுக.,வின் அதிகாரப்பூர்வ நாளேடு)

தங்கதமிழ்செல்வனை அதிமுகவிற்குள் இழுத்து, எடப்பாடியின் அரசியலை வளர்க்க அமித் ஷா முடிவு.

பன்னீர்செல்வத்தை ஒடுக்க அமித்ஷா, குருமூர்த்தி, எடப்பாடி முடிவு.

தங்கதமிழ்செல்வனை பயன்படுத்தி பன்னீர்செல்வத்திற்கு சொந்த மாவட்டத்திலேயே ஆப்பு வைக்க எடப்பாடி தயார் ஆகிவிட்டார்

– நமது எம்.ஜி.ஆர் (டிடிவி தினகரனின் அமமுக.,)


தினகரனை பற்றிய அத்துனை விவரங்களும் தெரிந்த தங்க தமிழ்செல்வன், இப்போதுதான் அது புரிந்தவர்போல் இருப்பதும்; தீவிரவாத தலைவர்போல் டிடிவி செயல்படுகிறார் என்று ”காலம் கடந்து பெற்ற ஞானம் போல பேசுவதும் வியப்பாகவும், வேடிக்கையாகவும் உள்ளது”

– நமது அம்மா (அதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடு)

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.