திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் இன்று திமுக.,வின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். இதை அடுத்து, திமுக., என்ற குடும்பக் கட்சி குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக்ம எதிரொலித்தன.
குறிப்பாக, #உதயநிதிக்குமண்டியிட்டதிமுக என்ற ஹேஷ்டாக்கில் திமுக., குறித்த விமர்சனங்களை டிவிட்டர் வாசிகள் முன்வைத்தனர்.
அதில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, அவரது மகன் என பரம்பரை வாரிசுகளின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
பரம்பரை சித்த வைத்தியம் பார்ப்பவர்களின் போட்டோக்கள் இடம்பெற்றிருப்பது போல் திமுக.,தலைவர்கள் என ஒரு படம் கிண்டலுக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது.
பாரம்பரிய மிக்க மூன்றாம் தலைமுறை சித்த வைத்தியம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்று கூறி படம் பகிரப் பட்டிருந்தது.
இன்னும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி இருக்கும் படமும், ஸ்டாலின், உதயநிதி, அவரது மகன் இருக்கும் படமும் பகிரப் பட்டிருந்தது.