‘தலைவன் இருக்கிறான்’ மூலம் கமல் ‘அரசியல் பிரசாரம்’?! உதயநிதி தவிர்த்தது அதனால்தானாம்!

ஏஆர் ரஹ்மானின் பதிவை பகிர்ந்த கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' படத்தை தொடங்கவிருப்பபதாக அறிவித்தார். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

அரசியல் களத்தில் குதித்து தலைவன் ஆகி, சற்று நீந்திக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், இப்போது ‘தலைவன் இருக்கிறான்’ மூலம் அரசியல் கலந்த சினிமாவுக்கு அடித்தளம் போட்டிருக்கிறார் கமல்! தமிழ், ஹிந்தி இரு மொழிகளில் படம் உருவாகிறது. பொருளாதாரம், நிழல் உலகம், அரசியல் கொள்கைகளை மையப்படுத்திய படம் என்று கமல்ஹாசன் ஏற்கெனவே இப்படம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’ படங்களைத் தொடர்ந்து ‘தலைவன் இருக்கிறான்’ என்ற தலைப்பில் புதிய படத்தில் நடிக்கிறார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியவில்லை. பல்வேறு பிரச்னைகளால் அதன் படப்பிடிப்பு பாதியிலே நிற்கிறது. இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் கட்சி என கமல் பிஸியாக சபாஷ் நாயுடு படம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது, 2017இல் அறிவிக்கப் பட்ட ‘தலைவன் இருக்கிறான்’ படம் குறித்து மீண்டும் செய்தி வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த டிவிட்டினைக் குறிப்பிட்டு, உங்கள் பங்களிப்புடன் எனது அணியை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும் போது நன்றாகவும், சரியானதாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகைய ஒன்றாகும். இதற்காக உங்கள் உற்சாகத்தின் நிலை மிகவும் அளப்பரியது. அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஏஆர் ரஹ்மானின் பதிவை பகிர்ந்த கமல்ஹாசன் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை தொடங்கவிருப்பபதாக அறிவித்தார். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது.

இது அரசியல் கதை என்பதால், கமல் சார்ந்துள்ள அரசியல் இயக்கத்துடன் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் டைட்டிலும் தலைவன் இருக்கிறான் என்று இருப்பதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.

முன்னர் ஒரு வெப் டிவிக்கு அளித்த பேட்டியில், திமுக.,வின் தற்போதைய இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி, ”தலைவன் இருக்கிறான்” படக்கதையை என்னிடம் சொன்னார். அது அரசியல் கதையாக இருந்ததால் நான் செய்தால் நன்றாக இருக்காது. எனக்கு ‘பஞ்சதந்திரம்’ மாதிரியான கதைகள் இருந்தால் சொல்லுங்கள்” என்றேன்.. என்று தெரிவித்திருந்தார். எனவே, இந்த அரசியல் கதை, தற்போதைய தமிழக அரசியல் சூழல் களத்தில் எப்படி எதிர்கொள்ளும் என்ற விவாதம் இப்போதே கிளம்பிவிட்டது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...