‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!

திமுகவினர் ரவுடியை அழைத்து வந்த செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்திவரதரில் ஆர்வம் காட்டும் திமுக.,வினர் குறித்து பொதுமக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்கின்றனர்.

சற்றுமுன்...

ராமர் நேபாளியா? நேபாள பிரதமர் பேச்சு.. அந்நாட்டு தூதரகம் ‘மறு’ விளக்கம்!

இந்தியாவின் அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனகபுரிக்கு இரு வருடங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் பஸ் போக்குவரத்து திறந்து

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

நான் பாஜக.,வில் இணைய மாட்டேன்: சச்சின் பைலட்!

தற்போது அந்த எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதால் மற்றவர்கள் இதனால் தயங்குவார்கள் என்று கூறப் படுகிறது.

மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த ‘இருட்டுக் கடை’ : தாத்தா இடத்தில் பேரன்!

மாலை 5.30 மணியில் இருந்து வெறும் 2 மணி நேரம்தான் கடை திறந்திருக்கும். நேற்று கடை திறந்து சில நிமிடங்களில் மொத்தமாக அல்வா விற்றுத் தீர்ந்துவிட்டது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

athivarathar durga stalin ‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!

காஞ்சிபுரத்தில், அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அடையும் துயரங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து விட்டது #அத்திவரதர்_வைபவம். வெள்ளிக்கிழமை இன்று காலையே கூட்டம்தான். அடுத்த மூன்று நாட்களும் கூட்டம் அதிக இருக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. ஆகவே வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் காஞ்சி உள்ளூர் நிலவரத்தைத் தெரிந்து கொண்டு பிறகு வாருங்கள் என்று கூறுகின்றார்கள் உள்ளூர் அன்பர்கள்.

தாம்பரம் – படப்பை காஞ்சிபுரம் வழி பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலால் திண்டாடுகிறது. விஐபி பாஸ் கிடைக்கும் என்ற நம்பிகையில் இங்கு உள்ளூர்வாசிகளை நம்பி வரவேண்டாம் என்று கூறுகின்றார்கள் உள்ளூர்க்கார்கள். போலீஸார் கெடுபிடி அதிகம் என்பதால் உள்ளூர்க்காரர்களே திண்டாடுகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், கட்சிக்காரர்களும், குறிப்பாக திமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் செல்வாக்கைக் காட்டவும், பயன்படுத்தியும், மாவட்ட ஆட்சியரகத்தை துவம்சம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களிலும் காஞ்சிபுரம் அதிகம் எதிரொலிக்கிறது.

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத் திணறால் நான்கு பக்தர்கள் உயிரிழப்பு..! – செய்தி
கலெக்டரே… திமுக ரவுடிகளின் குடும்பங்களுக்கு VVVVIP பாஸ் கொடுத்து புடுங்குறதெல்லாம் இருக்கட்டும், கொஞ்சம் சாதாரண மக்களையும் கவனத்தில் கொள்ளுங்கோ.. -சத்யா
– என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் 4 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ளது அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் திட்டமிடல் இல்லாததே காரணம். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நி உதவி தரவேண்டும் -ஹெச்.ராஜா இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே, அத்திவரதருடன் பக்தரை அர்ச்சகரும்… ரவுடிகளை திமுக.,வினரும் சேர்த்து வைக்கிறார்கள் என்று கூறுகின்றார்கள் பக்தர்கள். அத்தி வரதருக்கும் ரவுடிகள், திமுக.,வினருக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பும் அவர்கள், ரவுடி வரிச்சூர் செல்வத்தை அழைத்து வந்தது திமுகவினர் என்று ஆட்சியர் பரபரப்பு தகவல் வெளியிட்டதைக் குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரவுடி வரிச்சூர் செல்வம், அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி.க்கான வழியில் அழைத்து வந்தது திமுகவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எவருமே டோனர் பாஸ் இல்லாமல் வந்ததாகக் கூறப் படுகிறது.

அத்திவரதரை முக்கிய நபர்கள் தரிசிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்திட்ட ‘டோனர் பாஸ்’ வழங்கப்பட்டு வருகிறது! ஆனால், டோனர் பாஸ் கூட் ஐல்லாமல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு இந்து அறநிலை துறை சார்பாக எவ்வாறு மரியாதை வழங்கப்பட்டதோ அதே அளவிலான மரியாதையை ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வழங்கப் பட்டது கண்டு உள்ளம் குமுறுகின்றார்கள், வரிசையில் கால்கடுக்க நின்றவர்கள்.

varichiyur selvam1 ‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்வது போன்ற வீடியோக்கள் எனது கவனத்திற்கும் வந்தது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன. அப்போது, வரிச்சூர் செல்வத்தை திமுக பிரமுகர்கள் அழைத்து வருவது தெரிய வந்துள்ளது. அவர்கள், உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் விவிஐபி நுழைவு வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

rasathiammal ‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!திமுகவினர் ரவுடியை அழைத்து வந்த செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்திவரதரில் ஆர்வம் காட்டும் திமுக.,வினர் குறித்து பொதுமக்கள் பரபரப்புடன் பேசிக் கொள்கின்றனர்.

அத்திவரதரை தரிசிக்க திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா, கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள் என குடும்பத்தினரே ஆவலுடன் வந்ததும், ரவுடி ஒருவரை திமுக பிரமுகர்கள் எந்தவித அனுமதி சீட்டும் இன்றி அழைத்து வந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad ‘பாஸ்’ கொடுத்து ‘ஃபெயில்’ ஆன காஞ்சிபுரம் ஆட்சியர்! அவப்பெயர் சுமந்தது போதாதா?!

பின் தொடர்க

17,861FansLike
78FollowersFollow
71FollowersFollow
911FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

இன்று… கிங் மேக்கர் காமராஜர் பிறந்த தினம்!

கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் தன் இரு கண்கள் எனக் கொண்டு நல்லாட்சி செய்த காமராஜரின் காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம்.

சமையல் புதிது.. :

சினிமா...

கிருஷ்ண பரமாத்மா அருளால் நான் நலமுடன் உள்ளேன்: ஹேமாமாலினி வெளியிட்ட வீடியோ!

இந்த பரபரப்பிற்கிடையே ஹேமமாலினி குறித்த செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சினிமா நிருபர் மேஜர்தாஸன் காலமானார்!

சினிமா நிருபரும் பத்திரிகையாளரும் செய்தித் தொடர்பாளராக செயல்பட்டவருமான மேஜர்தாஸன் இன்று சென்னையில் காலமானார்.

அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது

சுய இன்பம் குறித்து ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...