கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த இந்து முன்னணி கோரிக்கை

இந்து முன்னணி மாநில அமைப்பாளர்  பக்தவத்ஸலன் வெளியிட்ட அறிக்கை:
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் அளவிற்கு மீறிய அடாவடித்தனம்..
எந்த நாட்டிலும் இல்லாத அதிசயம் இந்த நாட்டில் தான் நடக்கிறது. அதாவது, பெரும்பான்மையினருக்கு இல்லாத சலுகைகள் எல்லாம் சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. ஓட்டு வங்கி அரசியலுக்கு வித்திடும் வேடிக்கை சட்டங்கள் உலகின் எந்த நாட்டிலும் கிடையாது. இது எப்படியிருக்கிறது என்றால், நாய் வாலை ஆட்டுவதற்கு பதிலாக, வால் நாயை ஆட்டுவிக்கிற மாதிரி.
மத்திய அரசு கடந்த பல மாதங்களாக கல்வி சீர்த்திருத்தம் குறித்த கருத்துக்களை பலதரப்பட்ட மக்களிடமிருந்தும், கல்வி நிறுவனங்கள், கல்வி நிபுணர்கள், சமூக அக்கரை கொண்டோர் முதலானவர்கள் முதல் பொது மக்கள் வரை எல்லோரிடமும் கருத்து கேட்டது. அதன் அடிப்படையில் ஒரு முன்வரைவு வடிவத்தை வெளியீட்டுள்ளது. இது குறித்தும் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
ஆனால், சிறுபான்மையினர் எனப்படும், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அரசிற்கு எதிராக வீதியில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியலாக்கவதும், அதற்கு திமுக, அதிமுக கட்சிகள் துணைபோவதும் வெட்கக்கேடானது.
இவர்களது கருத்தை மத்திய அரசிற்கு அனுப்புவதை விட்டு, மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி பிரச்னையை திசைத்திருப்ப இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு அவரது பெற்றோரை மிரட்டி மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதும் கண்டிக்கத்தக்கது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் படிப்போர் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்து மாணவர்களே. ஆனால், அதில் கிடைக்கும் சலுகைகளை கிறிஸ்தவ, முஸ்லீம் நிறுவனங்கள் திருடி பிழைப்பு நடத்துகின்றன என்று இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.
சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பெத்தசெமினார் பள்ளி, ஆறாம் படிக்கும் மாணவனிடம் மத்திய அரசிற்கு எதிரான மனுவில் அவனது தந்தையிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறது. மாணவனின் தந்தை மகேந்திரபிரசாத் கையெழுதிடாமல் அதனை ஆசிரியரிடம் திருப்பி கொடுத்துவிட சொல்லி இருக்கிறார். அந்த மாணவனை மிரட்டி, அப்பாவை போனில் அழைக்க வைத்திருக்கிறது. பள்ளிக்கு வந்து விசாரித்த மகேந்திரபிரசாத்திடம் தகாத முறையில் நிர்வாகத்தினர் நடந்துகொண்டுள்ளனர். மகேந்திர பிரசாத், பதில் கூறியதுடன், பள்ளி நிர்வாகத்தின் அநாகரிக செயலை கண்டித்துள்ளார். இது விபரீதமாக போவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், அந்த பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அதுபோல ஆரப்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றிய சங்கரலிங்கம் முதல்வராக நியமித்ததை அங்கீகரிக்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. அதற்குக்கூறியுள்ள காரணம் ஒரு கத்தோலிக்கர் மட்டுமே கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில்  முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்பது சி.எம்.ஈ.எஸ். பாலிஸி எனத் தெரிவித்து, அவரை பணி நீக்கம் செய்துள்ளார் ஆர்.சி. பள்ளிகளின் சூப்பரண்டன்ட் பாதிரி பாலுசாமி. இது மதவெறி பிடித்த செயல் இல்லையா?
இதுமட்டுமல்ல, திருவண்ணாமலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர்  மாவட்ட கலெக்டர் மிஸ்ரா நேரிடையாக மவுண்ட் செயிண்ட் ஜோசப் மேனிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது அங்கு மாஸ் காப்பிங் செய்வது தெரியவந்தது. தேர்வில் விடைகளை கொடுத்து எழுத அனுமதித்த தேர்வு கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அதற்கு துணையாக அலுவலகத்தை திறந்து, புத்தகத்தில் பதில்களை பிரதி எடுத்துக் கொடுத்து செயல்பட்ட கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகத்தை ஏன் தண்டிக்கவில்லை?
சேலம் மாவட்டம், ஓமலூர் பாத்திமா பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்ற சுகன்யா என்ற மாணவி முதல் பல பெண் குழந்தைகள் பாலியில் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்ட வழக்குகளில் பல ஆண்டுகள் ஆகியும் எந்த நீதியும் கிடைக்கவில்லை. காரணம் அவையெல்லாம் கிறிஸ்தவ மிஷனரிகள் எனும் அரக்கப் பிடியில் இருக்கிறது. இதனைக் கண்டு ஊடகங்களும், நீதித்துறையும், அரசுத் துறையும் வாய் மூடி நிற்பது வேதனையானது.
இதுபோல் பல விஷயங்களில் முரண்பாடான செயல்பாடுகளையும், முறையற்ற நிர்வாகத்தையும் கிறிஸ்தவ மிஷனரிகள் செய்து வருகின்றன. உண்மையில் கல்வி சேவை என்ற பெயரில் அரசின் சலுகைகளை கொள்ளையடித்து மதமாற்றம் செய்து வருகின்றன கிறிஸ்தவ, முஸ்லீம் நிறுவனங்கள். மாணவர்களுக்கு எந்தவித வசதிகளும் இல்லாமல், அரசின் நடைமுறை விதிகளுக்கு புறம்பாகப் பல பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கிவருகின்றன. இவற்றை எந்த அதிகாரிகளும் தட்டிக்கேட்க முடியாது, காரணம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக இந்து முன்னணி மக்கள் முன் வைக்கிறது.
மக்களை திசைத்திருப்ப மத்திய அரசுக்கு எதிராக வேண்டுமென்றே குற்றச்சாட்டை கிளம்பி போராட்டம் நடத்தி உள்ளதை இந்து முன்னணி கண்டிக்கிறது. மத்திய அரசின் வரைவு அறிக்கையில் என்ன குறைபாடு என்பதை விவாதிக்கலாம், கருத்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பலாம். ஆனால் போராட்டத்தின்போதும் கூட இவர்களின் ஆட்சேபம் என்ன என்பதை தெளிவாகத் தெரிவித்ததாக ஊடகங்களில் வரவில்லை.
திமுக, அதிமுக இரண்டு கட்சினரும் சாவு வீட்டில் கூட ஒன்று சேரதா அதிசய பிறவிகள். ஆனால், நெல்லையில் நடைபெற்ற சிறுபான்மையினர் போராட்டத்திற்கு சேர்ந்து போயிருப்பது வியப்பாக இருக்கிறது. அதில் பேசிய எம்.பி. கனிமொழி, பிரஞ்சு, ஜெர்மன் படித்தால் வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும் என வெளிநாட்டு மொழிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். இவரது தந்தை திமுக தலைவர் கருணாநிதி, இவரை ராஜ்சய சபா உறுப்பினராக்கிய போது, எனது மகளுக்கு இந்தி தெரியும் என பெருமிதப்பட்டார். ஆனால் தமிழக மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏன் மறுக்கிறார்கள்?
சம்ஸ்க்ருதமோ வேறு மொழிகளோ, எதுவானாலும் படிக்கும் மாணவரது விருப்பமாக இருக்க வேண்டும். மாணவரின் விருப்பத்திற்கு வழி செய்து தர வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. எல்லாவற்றிலும் அரசியல் பேசி மக்களை குழப்புவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுக்கு எதிராக மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது, கருத்துருவை திணிப்பு போன்ற செயல்களில் ஈடுபடும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை எச்சரிக்க வேண்டும். மீறி செயல்படும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்வதுடன், அந்த பள்ளிகளை அறக்கட்டளையாக மாற்றி, தகுந்த நபர்களைக் கொண்டு அரசே ஏற்று நடத்த முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.