05/07/2020 2:02 AM
29 C
Chennai

காஷ்மீர் விவகாரம் – விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

காஷ்மீர் விவகாரம் - விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

சற்றுமுன்...

ஆய்வக முடிவுகளை நேரில் பெறலாம்: மதுரை மருத்துவமனை டீன் தகவல்!

ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட வலைதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்

‘ஜியோமீட்’ செயலி! ஜூம்-க்கு மாற்றாக அறிமுகம்! ஒரே மாதிரி இருப்பதாக சர்ச்சை!

ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கும் மேலான கருத்தரங்கம் என்னும்போது மாதாமாதம் 15 டாலர்கள் (ஆண்டுக்கு 180 டாலர்கள்) செலுத்த வேண்டியிருக்கும்.

மதுரையில் கோவிட் கேர் சென்டரில் அமைச்சர் ஆய்வு!

வருமுன் காப்போம் என்கின்ற முன்னெச்சரிகையின் அடிப்படையிலே இந்த நோயிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கின்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: 4,280; டிஸ்ஜார்ஜ் ஆனவர்கள் 2,214 பேர்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07, 001 ஆக உயர்வு கண்டுள்ளது.

போபோஸ் சந்திரனை படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்!

செவ்வாய் கோளுக்கு அருகில் மிக அருகில், மிகப் பெரியதாக இருக்கும் போபோஸ் சந்திரனின் படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.

M. teraer காஷ்மீர் விவகாரம் - விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையடுத்து, விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அதிரடியாக நீக்கியது.

இதன் மூலம் காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படும் மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் காஷ்மீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியா தனது நாட்டில் செய்துள்ள இந்த நிர்வாக சீர்திருத்தத்துக்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரை தங்களுடன் சேர்த்து கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்த பாகிஸ்தானின் ஆசையில் மண் விழுந்துள்ளது.

hafies 1 காஷ்மீர் விவகாரம் - விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆத்திரத்தில் உள்ளார்.

இந்தியா மீது தீவிரவாதிகள் மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடத்துவார்கள் என்று இம்ரான்கான் பூச்சாண்டி காட்டினார்.

அவரது உளறலை இந்தியா கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்தியா மீது இம்ரான்கான் தனது ஆத்திரத்தை காட்ட தொடங்கியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல இம்ரான்கான் ஆலோசித்து வருகிறார்.

அது மட்டுமின்றி பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

imrankan காஷ்மீர் விவகாரம் - விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக தொடர்புகளை துண்டிக்கப் போவதாகவும் இம்ரான்கான் கூறியுள்ளார்.

அவரது இந்த நடவடிக்கைகள் இந்தியாவை விட பாகிஸ்தானுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

என்றாலும் இந்தியாவுக்கு எதிராக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்று இம்ரான்கான் துடிதுடித்தப்படி உள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் உளவுத்துறை மூத்த அதிகாரிகள், தீவிரவாதிகளை தொடர்பு கொண்டு, இந்தியாவுக்குள் தற்கொலை தாக்குதல்களை நடத்துமாறு பேசியதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.

காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள சுமார் 300 தீவிரவாதிகளில் சிலரை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் முயற்சிகளை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டதையும் உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே இந்தியாவுக்குள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி செய்வதாக சர்வதேச உளவு அமைப்புகள் தகவல் கொடுத்துள்ளன.

குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் டெல்லி மற்றும் மும்பை நகரில் தற்கொலை தாக்குதல்களை நடத்த இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதிக்கு முன்பு இந்த தாக்குதல்களை அரங்கேற்ற தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதும் அம்பலமாகி உள்ளது.

இதற்கிடையே சில விமான நிலையங்களையும் தீவிரவாதிகள் குறி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, நாக்பூர், சண்டிகர் ஆகிய 7 விமான நிலையங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் அல்லது விமானத்தை கடத்த முயற்சி செய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

RPF காஷ்மீர் விவகாரம் - விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

தீவிரவாதிகள் கைவரிசை காட்ட முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி விமான போக்குவரத்து துறையின் பாதுகாப்பு பிரிவு அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் 2 தடவை இந்த உஷார் எச்சரிக்கை அறிவிப்பை விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சர்வதேச விமான நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு வரும் ஒவ்வொருவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விமான பயணிகள் அனைவரையும் முழுமையாக சோதித்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 15-ந்தேதி வரை இந்த சோதனை தீவிரமாக நடைபெறும்.

எனவே பயணிகள் விமான நிலையத்துக்கு முன் கூட்டியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -
Dhinasari Jothidam ad காஷ்மீர் விவகாரம் - விமான நிலையம் மற்றும் இரயில் நிலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்.

பின் தொடர்க

17,872FansLike
78FollowersFollow
70FollowersFollow
901FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

செய்திகள்... மேலும் ...