வை.கோ சொன்ன ஜோதிடம் ! 27 ஆண்டுகளுக்கு பின்….காஷ்மீர்..

புதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள்.

vikoம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு மாநாடு நடைபெறும் இடத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது அண்ணாவின் நினைவிடத்துக்கு வெயிலில் காலணி அணியாமல் சென்று கல்லறையை தொட்டு வணங்கினேன். நான் உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டு  வந்திருக்கிறேன்.viko 1நான் காஷ்மீர் பிரச்சினையில் 30 சதவீதம் காங்கிரசையும், 70 சதவீதம் பா.ஜ.க.வையும் தாக்கி பேசி இருக்கிறேன். இந்தியா தனது 100-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது என்று வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உங்களை எட்டப்பன் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, வைகோ பதில் எதுவும் கூறாமல் தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

1 COMMENT

  1. சிறந்த செயதித் தொகுப்பு. செயதிகளை அனுப்பும் வழிமுறையை சொல்லுங்கள். நன்றி.

    பீம. சத்தியநாராயணன்.

Comments are closed.