ராஜீவ் நேருவுடன் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பற்றி எந்தவொரு செய்தியும், தகவலும் வெளியே வராமல் தடுப்பது யார்..? அந்த உணர்வுபூர்வமான அம்சத்தை முற்றாக ஓரங்கட்டி அந்தக் கொலைகாரர்களை விடுதலை செய்யத் துடிப்பது யார்? ராஜீவைக் கொல்லவேண்டுமென்றால் ஒரு துப்பாக்கியால் அருகில் நின்று நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொன்றிருக்கலாமே. பொதுக்கூட்ட மைதானத்தில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டே அவருக்கு அருகில் நெருங்க வழி செய்துதந்தவர்கள் துப்பாக்கியுடன் நெருங்க வழி செய்து தந்திருக்கமாட்டார்களா என்ன? எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொன்றாலும் தமிழினப் போராளிகளாக முன்னிறுத்தப்படுவோம் என்ற தைரியம் கொலைகாரர்களுக்கு எப்படி அப்போதே வந்தது?
ராஜீவ் நேருவின் கொலையாளிகளை தியாகத் திரு உருவம் சோனியா ராஜீவ் மன்னிப்பது எதிர்பார்க்க முடிந்த விஷயம்தான்.
திராவிட (அ)சக்திகள் புலிகளைத் தண்டிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருப்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ் பிரிவினைவாதக் கூட்டத்தைப் பொறுத்தவரை கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களைவிட தமது கூட்டாளிகளின் உயிரே முக்கியம். நாளைய தலைவர்கள் அல்லவா..!
முழுநேர நடிகர்களாக மாற விரும்பும் கும்பல் குச்சியை வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்பவே ஆடும் மந்திகளே.
மைய நீரோட்ட ஊடகங்கள் சர்வதேச நிதி முதலாளிகளின் இசைக்கு ஏற்ப ஆடும் பொம்மைகளே.
ஆனால், இந்திய தேசியம், இந்து தேசியம் என்றெல்லாம் சொல்பவர்கள், வலதுசாரி ஊடகத்தினர், நடூ நிலையாளர்கள் எல்லாரும் என்ன செய்கிறார்கள்? அந்த பதினெட்டு குடும்பத்தினரில் ஒருவருடைய புகைப்படமோ ஒரே ஒரு பேட்டியோகூட எடுத்து வெளியிட அவர்களும் ஏன் முயற்சி எடுப்பதில்லை? கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களை விடுதலை செய்ய எங்களுக்கு சம்மதமில்லை என்ற அந்த நலிந்தவர்களின் குரலை நெரிப்பது யார்?
செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவோ உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டவோ செய்யாத இவர்களை விடுவிப்பது எந்தவகையில் நியாயம்?
*
தமிழகத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த அரசியல் வெற்றிடத்தில் சல்லிக்கட்டுப் போராட்டத்துக்கான தடையை நீக்கி பன்னீர் செல்வத்தை ஒரு தலைவராக நட்டு அதன் மூலம் தமிழகத்தில் வேர் ஊன்றலாம் என்று நினைத்ததுபோல் இப்போதும் பெரும் திட்டம் தீட்டுகிறார்களா பாசகவினர்? பதினெட்டு அப்பாவிகளையும் அவ்வளவு அப்பாவி இல்லாத ராஜீவையும் படுகொலை செய்ய உடந்தையாக இருந்த ஏழு குற்றவாளிகளை விடுதலை செய்து தமிழர் மனங்களில் இடம் பிடித்து அப்படியே ஆச்சியையும் பிடித்துவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்களா..? சல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற பாஜக அத்தனை உதவிகள் செய்தும் தமிழகத்தில் பிரிவினை இயக்கங்களும் மனோபாவமுமே வளர்ந்து வந்திருக்கிறது. ஏழு கொலைகாரர்களை விடுவித்து அந்த எதிர்ப்பை முனை மழுக்கச் செய்ய முடியுமா?
ஒரே ஒரு தமிழ் பிரிவினைவாதத் தலைவனாவது ஒரே ஒரு திராவிடத் தலைவராவது ஒரே ஒரு நடுநிலைக் குரலாவது பாஜகவை அதற்காக ஒரு வரி பாராட்டும்படிச் செய்ய முடியுமா?
தர்மத்தின்படி என்றால் கொல்லப்பட்ட 18 பேரின் குடும்பத்தினரின் சம்மதத்தைப் பெறாமல் விடுதலை செய்யக்கூடாது.
அரசியல் என்றால் தேச விரோத பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படமாட்டோம் என்ற உத்தரவாதம் பெற்று விடுதலை செய்யலாம். தமிழகத்தில் பெருகிவரத் தொடங்கியிருக்கும் பிரிவினைவாதக் குரல்களை அடக்கிக் காட்ட இவர்களைப் பயன்படுத்தலாம், மதம் பிடித்த யானைகளை கும்கியானைகொண்டு அடக்குவதுபோல்.
தர்மத்தை எதிர்பார்க்க முடியாது… ஒழுங்கான அரசியலாவது செய்யப்படுமா?
கேவலம௠கொலைகாரனையà¯à®®à¯ கொளà¯à®³à¯ˆà®•à¯à®•ாரனையà¯à®®à¯ அரசே விடà¯à®¤à®²à¯ˆà®•à¯à®•௠பரிநà¯à®¤à¯à®°à¯ˆà®ªà¯à®ªà®¤à¯. நலà¯à®² ஜனநாயகமà¯!!