பாம்பு கடித்த தொழிலாளிக்கு உதவிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சிகிச்சைக்கு பின் தொழிலாளியின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கரூர் பரமத்தி தெற்கு ஒன்றியம் எலவனூர் பகுதியை சேர்ந்த .மு.துரைசாமி என்பவர் அருகில் இராணிப்பேட்டை எனும் ஊருக்கு வேலைக்கு சென்ற இடத்தில் பாம்பு கடித்துவிட்டது. உடனே அருகில் உள்ள சின்னதாராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்த பொழுது விஷம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்தது.
உடனே கரூர் பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் தில் D.செந்தில் தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் M.R.விஜயபாஸ்கரை தொடர்பு கொண்டு செய்தியை தெரியப்படுத்தினார். இதை அடுத்து விஜயபாஸ்கர், உடனடியாக பாம்பு கடியால் பாதித்த தொழிலாளியை கரூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு ICU வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பரிந்துரை செய்தார்.
பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய தொழிலாளி மு.துரைசாமியை இன்று அவரது வீட்டிற்கே சென்று நலம் விசாரித்தார். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொழிலாளியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்