மாலை சூரியன் மறையும் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்க சூடான ஒரு கடி சூடாக ஆவி எழும்பி வர கூடவே வரும் தேயிலை வாசனையோடு ஒரு கப் சாயா குடிக்கும் போது கிடைக்கும் ஒரு புத்துணர்வு சொல்லி மேடியாது.அந்த மாலை நேரமும் தொடர்ந்து வரும் இரவு பொழுதும் ரம்மியமாக இருக்கும் .
இப்போது விதவிதமான கலர் கலர் பொதிகளில் தேயிலை விற்பனை க்கு வந்தாலும் பழமையான முறையில் தயாரான தேயிலையை கொதிக்கும் பாலில் போட்டு சர்க்கரை கலந்தோ கலக்காமலோ தேயிலையின் வாசனை அதன் லேசான துவர்ப்பு சுவை உதடுகளில் வைத்து உரிஞ்சி உள்ளே இழுத்து விழுங்கும் போது அந்த சுவை நாவை சுன்டி இழுக்கும்.
அந்த அளவுக்கு டீ பலரின் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக போய்விட்டது.கேரளத்தில் இன்னும் மண்பானை யில் சுடும் தண்ணீரை குவளையில் இட்டு தேயிலை கலந்து வெண்கல பாய்லரில் கொதிக்க வைத்து கொதிக்கும் பாலில் இந்த தேயிலை கசாயத்தை தேவைக்கு ஊற்றி சர்க்கரை கலந்து கை உயரமாக செல்லும் அளவுக்கு டீ யை இரு குவளையில் இட்டு சூடாற்றி நுரையுடன் கண்ணாடி கிளாசில் ஊற்றி தரும் சாயாவை குடிக்க குடிக்க சுவையான சூடான பாணமாக இருக்கும். தனிமையில் தனியாக இருப்பவர்கள் கவிஞர்கள் பலருக்கு துணையாக இருப்பதாகவே கருதப்படுகிறது இந்த சாயா.
சாயா பிரியர்களை குஷிப்படுத்த ஆண்டுதோறும் மே 21ஆம் தேதி உலக தேநீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 2005ஆம் ஆண்டுவரை தேயிலை உற்பத்தி நாடுகளான இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேஷியா, வங்கதேசம் கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா மற்றும் தன்சானியா போன்ற நாடுகளால் டிசம்பர் 15ஆம் தேதிதான் சர்வதேச தேநீர் தினமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மே 21ஆம் தேதியை உலக தேநீர் தினமாக அறிவித்தது.
தேநீரை உற்சாகத்திற்காக மட்டும் குடிப்பதில்லை. இதில் பல மருத்துவகுணங்களும் அடங்கியுள்ளது. உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்போது அது நல்ல மனநிலை, சீரான உடல் இயக்கம் மற்றும் நல்ல தூக்கத்துக்கு இந்த சாய வழிவகுக்கிறதாகவே பலரும் கூறுகின்றனர். இப்போது நம் ஊர்களில் இந்தோனேசியா டீ தளை,உள்நாட்டு டீ தளைகள் பல பெயர்களில் விதவிதமா விற்பனை க்கு வந்து இஞ்சி டீ,துளசி டீ,மூலிகை டீ,கிரின் டீ,அதிமதுரடீ என தேனீர் பல விதமாக வந்தாலும் பழமையான கண்ணன் தேவன் டீ கிளாசிக்,ஏவிடி கிளாசிக் தேயிலை தூள்களை முறைப்படி கொதிக்க வைத்து பாலில் கலந்தோ பிளாக் டீ கட்ஞ்சாயாவாக குடிக்கும் சுவையே தனி என்கிறார்கள் தேனீர் சுவை விரும்பிகள்.தேயிலை எதுவாக இருந்தாலும் சரியான அளவில் கலவையில் தயாரிக்கும் போதே தேனீர் சுவை மனம் திடம் அருமையானதாக தேனினும் சுவையானதாக இருக்கும்.