சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்து ஒன்று திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த கும்பகோணம் அரசு போக்குவரத்து பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென பேருந்தில் டீசல் டேங்க் அருகே வெடித்து தீப்பிடித்து மளமளவென தீ பரவி பேருந்தில் எரியத் தொடங்கியது.
பேருந்திலிருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலரி அடித்துக் கொண்டு வெளியேறினர் . பின்னர் நான்கு புறமும் தீ பற்றி எழுந்து பஸ் முழுமையாக எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி முற்றுவதுமாக தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பயணிக்கும் ஆபத்து இல்லை. தீவிபத்துகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
