October 15, 2024, 9:49 AM
24.9 C
Chennai

‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’: பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பேச்சு!

‘பாரதியைப் படித்தால் உயர்வு நிச்சயம்’ பரணி பார்க் சாரணர் மாவட்ட ‘பாரதி-140’ விழாவில் பாரதிக்கு புகழாரம்!

‘பாரதியைப் பின்பற்றினால் மாணவர்களுக்கு உயர்வு வரும்’ என்றார் ஓய்வு பெற்ற இந்திய இராணுவ மேஜர் ஜெனரல் என்.ஆர்.கே.பாபு. பாரதியாரின் 140வது பிறந்தநாளையொட்டி ‘இளைய பாரதத்தினாய் வா வா வா’ என்ற தலைப்பில் மாணவ, மாணவியருக்கான சுய முன்னேற்ற தன்னம்பிக்கைப் பயிலரங்கம் இன்று பரணி பார்க் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பரணி பார்க் சாரணர் மாவட்டத் தலைவர் s.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். பரணி பார்க் சாரணர் மாவட்டத் துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரெங்கன், M.சுபாஷினி முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் இந்திய இராணுவ மேஜர் ஜெனரல்(ஓய்வு) என்.ஆர்.கே.பாபு சிறப்புரையாற்றுகையில், “பாரதியின் வரிகள் தன்னம்பிக்கை, தேசப்பக்தியூட்டக்கூடியவை. சோர்ந்து கிடக்கும் எவரையும் உற்சாகப்படுத்தி உயர்வு தரும். மேலும் கடின உழைப்பு, உண்மை, விசுவாசம், நேர்மை, வாழ்க்கைத்திறன்கள் ஆகியவற்றை மாணவப்பருவத்தில் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நற்பண்புகளும் நற்சிந்தனைகளும் கூடிய பாரதி கண்ட இளைய பாரதத்தினராய் ஒவ்வொருவரும் திகழ்ந்து தன்னையும் தாய் நாட்டையும் தரணியில் உயர்த்த வேண்டும். இராணுவத்தில் உயர் பதவியில் சேர விரும்பும் தமிழக மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலும் பயிற்சியும் வழங்கப்படும்” என்று கூறினார்.

தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் பேசுகையில், “பாரதியாரின் தேசப்பற்று குறித்தும், அவருடைய எழுச்சிமிக்க தமிழ்ப் பாடல்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும் எழுச்சிமிகு பாரதியை போல தாய்த்திருநாட்டை நேசிப்பவராகவும், போற்றுபவராகவும் அவரவர்க்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து அத்துறையில் தாய்நாடு பெருமை கொள்ளும் வகையில் நன்கு படித்து சிறப்புற வேண்டும்” என்று கூறினார்.

ALSO READ:  பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் போகத் தகுதி நீக்கம்!

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பாரதியின் முகமூடி வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் பாரதியைப் போன்று நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும் என்று பரணி பார்க் முதல்வர் K.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் s.சுதாதேவி, பரணி பார்க் சாரணர் மாவட்டச் செயலர் R.பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் மாணவ, மாணவிகளிடையே பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி, கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

புகைப்படம்: பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் விழா சுய முன்னேற்ற தன்னம்பிக்கைப் பயிலரங்கில் சிறப்புரையாற்றி பாரதியார் முகமூடி வழங்குகிறார் ஓய்வு பெற்ற இந்திய .இராணுவ மேஜர் ஜெனரல் என்.ஆர்.கே.பாபு அருகில் பரணி பார்க் சாரணர் மாவட்டத் தலைவர் s.மோகனரெங்கன், பரணி பார்க் சாரணர் மாவட்டத் துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரெங்கன், M.சுபாஷினி, தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், பரணி பார்க் முதல்வர் K.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் s.சுதாதேவி, பரணி பார்க் சாரணர் மாவட்டச் செயலர் R.பிரியா.

ALSO READ:  கரூர் முதல் மெரினா வரை... பள்ளி மாணவர்களின் ஆச்சரிய விமான பயணம்!
author avatar
ஆனந்தகுமார்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் அக்.15- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தில்… வெளுத்து வாங்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்!

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்யும் என்பதால்,

தபால் துறையில் 344 பணியிடங்கள்; வேலைவாய்ப்பு தவறவிட்டுடாதீங்க!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 344 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 31.