
பாலியல் தொல்லை வழக்கில் ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு பத்தாண்டு சிறை தண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் போக்சோநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் கருப்பசாமி வயது 49 ஆடு மேய்க்கும் தொழிலாளி இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர் மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் ஆடு மேய்க்கும் தொழிலாளி கருப்பசாமிக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்