
வெளிமாநில தொழிலாளர்கள் தக்கப்பட்டதாக வதந்தி பரவிய விவகாரம்-உண்மை தன்மையை கண்டறிய பீகார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தள ஊடக பொறுப்பாளர் சிவகாசியில் இன்று வெளிமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக வதந்தி பரவியதை தொடர்ந்து அதன் உண்மை தன்மையை கண்டறிவதற்காக பீகார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தள ஊடக பொறுப்பாளர் ரித்து ஜெய்ஸ்வால் சிவகாசியில் உள்ள அச்சக்கங்களில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுடன் விசாரணை நடத்தினார்.
ஒவ்வொரு வெளி மாநில தொழிலாளர்களிடமும் பணி புரியும் இடங்கள், வசிப்பிடங்களில் துன்புறுத்தல் அல்லது குறைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரித்தார். மேலும் வட மாநில தொழிலார்களின் தற்போதைய நிலையை பீகார் மக்கள் நேரடியாக அறியும் வகையில் தொழிலாளர்களின் நிலையையும் அவர்களின் கருத்துக்களையும் தனது முகநூல் பக்கத்தில் நேரலையாக பதிவு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரித்து ஜெய்ஸ்வால் தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகாரில் அரசியல் காரணங்களுக்காக பாஜக வதந்தி பரப்பி வருவதாக தெரிவித்த அவர் தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பான முறையில் பணியாற்றி வருவது தனது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்தார்.