
சிவகாசி, ராஜபாளையம் கல்லூரி நிகழ்ச்சிகளில் நாளை ஏப்ரல் 1- ம் தேதி பங்கேற்க வருகைதரும் ஆளுநர் ஆர்.என்.ரவி
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிவகாசி, ராஜபாளையம் தனியார் கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மார்ச் 31- ம் தேதி இரவு ராஜபாளையம் வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏப்ரல்
1-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் 50- வது ஆண்டு பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் கல்லூரியின் 60-வது ஆண்டு தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மார்ச் 31-ம் தேதி ராஜபாளையம் வருகிறார்.
ஏப்ரல் 1- ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன் பின் காலை 11 மணிக்கு ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியிலும், பிற்பகல் 4 மணிக்கு சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 60-வது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொள்கிறார்.ஆளுநர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.