
தமிழகத்தில் புதிதாக ரயில்கள் இயக்க தடையாக இருந்தகாக வந்த தகவலின் பேரில் சில முக்கிய பொறுப்பு வகிக்கும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் எம்.பி, எம்எல்ஏக்கள் தகவலுக்கு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது .
தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்களைத் தடுத்து வந்த கேரளா மாநில அதிகாரிகள், மற்றும் சில வெளிமாநில தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஒரே நாளில் மாற்றப்பட்டுள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எக்மோர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு அடுத்ததாக, அதிகளவில் வருவாய் தரும் ரயில்வே ஸ்டேஷனாக, கோவை சந்திப்பு,மதுரை சந்திப்பு , திருநெல்வேலி சந்திப்பு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில், 45 சதவீத வருவாயை கோவை சந்திப்பு இந்த ஸ்டேஷன்தான் கொடுக்கிறது.
சென்னையிலிருந்து புறப்படும் ரயில்களில், அதிக பயணிகள் எண்ணிக்கையிலும், அதிக வருவாய் தருவதிலும் கோவை,மதுரை, திருநெல்வேலி முதலிடத்தில் உள்ளது. ஆனால் இங்கு சந்திப்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, சென்னை, பெங்களூரு மற்றும் தென் மாவட்ட நகரங்களுக்குக் கூடுதல் ரயில்களை இயக்குவது, மீட்டர் கேஜ் பாதை இருந்தபோது, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பழைய ரயில்களை மீண்டும் இயக்குவது போன்ற கோரிக்கைகள், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை-செங்கோட்டை-கொல்லம், மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி, திருநெல்வேலி -கொல்லம், கொல்லம் -மதுரை,கோவை-ராமேஸ்வரம் ரயில் இயக்க பயணிகள் பெரிதும் வலியுறுத்தி வந்தனர்.
கோவை ரயில்கள், கேரளாவுக்கு நீட்டிக்கப்படும் நிலையில், கேரளா ரயில்களை கோவைக்குத் திருப்ப வேண்டுமென்ற கோரிக்கையும் நீண்ட காலமாக ஏற்கப்படவில்லை.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தொழில் அமைப்பினர் என பல தரப்பினரும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவை கண்டு கொள்ளப்படுவதேயில்லை.
இந்த புறக்கணிப்புக்கு, தெற்கு ரயில்வேயில் உயர் பொறுப்பிலுள்ள கேரள அதிகாரிகள்தான் முக்கியக் காரணமாக இருப்பதாக, நீண்ட காலமாக புகார் உள்ளது.
கோட்ட மேலாளர் போன்ற பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுவர். ஆனால், கேரள அதிகாரிகள் சிலர், தெற்கு ரயில்வே தலைமையிடத்தில், முக்கியப் பொறுப்புகளில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருவதாகவும், அவர்களே பல திட்டங்களை தமிழகத்துக்கு வர விடாமல் தடுப்பதாகவும், தமிழக அதிகாரிகள் குமுறுகின்றனர்.
அதன் எதிரொலியாக, தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் (சி.பி.டி.எம்.,) சிவகுமார், முதன்மை தலைமை இயக்க மேலாளர் (பி.சி.டி.எம்.,) நீனு இட்டாரியா இருவரும் நேற்றே மாற்றப்பட்டுள்ளனர்.