
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியில் முத்துசாமிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ஊராட்சி ஒன்ற துவக்கப்பள்ளி பள்ளி கட்டிடம் சிதலமடைந்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து 32 லட்சம் செலவில் தனியார் பள்ளிக்கு இணையாக வகுப்பறையில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பார் என எதிர்பார்த்து பள்ளி கட்டிடம் திறக்காமல் உள்ளது.

இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கட்டிடம் கட்டி முடிக்கப்படும் நிலையிலும் அங்கு படிக்கக்கூடிய 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடியில் வெயிலிலும் மழையிலும் பயின்று வருகின்றனர் ஆகையால் தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த கட்டிடத்தை திறக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை