
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை மாலுமி தற்கொலை சம்பவம் குறித்து போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலை வழக்காகத் தெரிகிறது. சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்..
ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலில் இன்று அதிகாலை 19 வயதுடைய இந்திய கடற்படை மாலுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலை வழக்காகத் தெரிகிறது. சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.