

வந்தே பாரத் தெரியாததை தெரிந்து கொள்வோம்!
தற்போது தமிழகத்தில் கேரளத்தில் ஏன் இந்தியா முழுவதும் வந்தேபாரத் அலை ஓய்ந்தபாடில்லை.
வந்தே பாரத் ரயில் பற்றிய தெரியாத தகவல்கள்! மற்ற ரயில் களுக்குள் இதற்கும்
என்ன வித்தியாசம்?நிறையவே உள்ளன.
வழக்கமாக விரைவு வண்டிகள் டபிள்யு.ஏ.பி4மற்றும் 7 வகை என்ஜின் கொண்டு இயங்குகிறது. இவற்றில் எல்ஹெச்பி பெட்டிகள் கொண்ட வண்டிகளில் டபிள்யு.ஏ.பி 7பயன்படுத்தப்படும். அதுவே பெட்டிகளின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும். இதனால் நிறைய டீசல் மிச்சம் ஆகும். என்ஜின் வண்டியை இழுக்கும். அந்த சக்தி கப்ளிங் மூலம் கடைசி பெட்டி இழுக்க சிறிது நேரம் ஆகும். பிரேக்கும் அப்படியே. எலக்ட்ரிக் பிரேக் போடும் போது LHB பெட்டியில் இடிப்பதும், கிருகிருவென அதிர்வும் உணரப்படும். என்ஜினில் 6 மோட்டார் இருக்கும்.
வந்தேபாரத் புதிய தொழில்நுட்பம். இதில் 8 பெட்டியில் 16 மோட்டாரும் 16 பெட்டியில் 32 மோட்டாரும் இருக்கும். அதனால் இதன் பிக் அப் அபாரம். அதாவது 1 நிமிடத்தில் 90 முதல் 100 கிமீ வேகம் அடைந்து விடலாம். பிரேக்கும் அப்படியே. வெகுதொலைவில் இருந்து போடுவதற்கு பதில் குறுகிய தொலைவில் போட்டால் போதும்.
கப்ளிங் இணைந்தே இருப்பதால் ஜெர்க் இருக்காது. இதனால் உச்ச வேகம் நீண்ட நேரத்தில் பராமரிக்க படுவதால் நிலையங்களுக்கு இடையே நேரம் குறையும். இதன் காரணமாக ஒரே எம்பிஎஸ் உள்ள போதும் பிற வண்டிகளை விட முன்பாக சென்று விடும்.
நிறைய நிறுத்தம் கொடுப்பதால் அதிவிரைவு ரயில் தகுதி இழந்து விடுமா?
நேரத்தை செலவு செய்தால் தான் மிச்சம் செய்ய முடியும் என்பார்கள். அதுபோல நிறுத்தம் இருந்தால் மற்ற வண்டிகளையும் விட விரைவாக செல்லும். நிறைய பயணிகளும் பயனடைவர்.

சாமானிய மக்களுக்கு அதிகம் என்றாலும் அதுவும் இலாபமே. ஒரு நாளைக்கு 540 பயணிகள் பயணம் செய்வார்கள். அதனால் அவர்களின் போட்டி இதர வண்டிகளில் கூட்டம், முன்பதிவு, தட்கல் போட்டி குறையும். கடைசி நேர பயணத்திற்கு வசதி. ஆம்னி பேருந்து கட்டணம் அளவில் இருப்பதால் பேருந்துடன் ஒப்பிடுகையில் சற்று காலாற நடக்கலாம் கழிவறை செல்லலாம், இருக்கையை திருப்பி அகன்ற கண்ணாடிகள் வழியாக வேடிக்கை பார்க்கலாம். மானியம், சலுகை கட்டணம், பாஸ் ஓசி பயணம் இல்லாததால் இரயில்வே நஷ்டம் குறையும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… இந்த பெயரை கேட்டதும் அதிவிரைவு சொகுசு ரயில் பயணம் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் ஒருமுறையாவது இந்த ரயிலில் போய் பார்த்துவிட வேண்டும் என்று யோசிக்காதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு நவீன மற்றும் சொகுசு வசதிகள் உடன் கூடிய ரயிலை இந்திய ரயில்வே உள்நாட்டிலேயே தயாரித்து வழங்கி வருகிறது. இவை சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படுவது தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை
2019ல் தொடங்கி தற்போது வரை 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில் தமிழகத்திற்கு மட்டும் 4 ரயில்கள் கிடைத்திருக்கின்றன. அவை, சென்னை சென்ட்ரல் டூ மைசூரு, சென்னை சென்ட்ரல் டூ கோவை, சென்னை எழும்பூர் டூ திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் டூ விஜயவாடா ஆகியவை ஆகும். அடுத்தகட்டமாக 60க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் பரிந்துரை பட்டியலில் இருக்கின்றன.
குருவாயூர் டூ ராமேஸ்வரம் வழித்தடத்தில் வந்தே பாரத் சேவை..

அதில் ராமேஸ்வரத்திற்கு ஒரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் மத்திய அரசின் ஆன்மீக சுற்றுலா திட்டத்தின் கீழ் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தேர்வு செய்யப்பட்டுள்ள வழித்தடம் அப்படி. குருவாயூர் டூ ராமேஸ்வரம் வழித்தடத்தில் தான் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விட இந்திய ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஆன்மீக சுற்றுலா திட்டமாக குருவாயூர் என்றாலே குருவாயூரப்பன் கோயில் தான் நினைவில் தோன்றும். ராமேஸ்வரம் என்றால் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயில் வந்துவிடும். இதற்கு இடைப்பட்ட வழித்தடத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. எனவே குருவாயூரில் தொடங்கி பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விட்டால் பக்தர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
இரண்டு விதமான வழித்தடங்கள்இதை அறிந்தே ஆன்மீக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தற்போது பாலக்காடு – பொள்ளாச்சி வழித்தடத்தில் அதிவேகமாக ரயிலை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான தொழில்நுட்ப வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். குருவாயூர் டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இரண்டு விதமான வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இரவு நேர பயணமாக பாலக்காடு வழியாக சென்றால் 796 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். கொல்லம் – செங்கோட்டை வழியாக சென்றால் 674 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இரண்டு வழித்தடங்களுமே நீண்ட தூரம் கொண்டவை. எனவே இரவு நேரப் பயணத்தை தவிர்க்க முடியாது எனத் தெரிகிறது. ஆனால் இதுவரை அறிமுகம் செய்து வைக்கப்பட்ட அனைத்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
படுக்கை வசதிகள் கிடையாதுஎனவே தான் இருக்கை வசதிகள் மட்டும் கொண்டிருக்கின்றன. படுக்கை வசதிகள் எதுவும் கிடையாது. ஒருவேளை இரவு நேரத்தில் இயக்கப்பட்டால் படுக்கை வசதிகள் கட்டாயம் தேவைப்படும். இதை எப்படி சமாளிக்கப் போகிறது இந்திய ரயில்வே என்ற கேள்வி எழுகிறது.
தமிழக பக்தர்கள் ஹேப்பர்.எனவே கூடுதல் பயண வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள் உடன் புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே அதிகாரிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். குருவாயூர் டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, பக்தர்களும் பெரிதும் மகிழ்ச்சியடைவர்.