தமிழக ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் முன்பே படித்துக் காட்டி ஆளுநரை அவையில் அவமானம் செய்தது திமுக. அப்போது தன் உதவியாளரிடம் நடந்தது குறித்த விளக்கம் கேட்டு உடனடியாக அவையை விட்டு ஆளுநர் வெளியேறிய போது, அவரை பார்த்து ஆபாசமாக கை அசைத்து போடா மயிறு என்று கத்திய பொன்முடி, இப்போது ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இனி சட்டசபைக்குள்ளேயே நுழைய முடியாது என்ற சூழ்நிலை!
இன்று சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அமைச்சர் பொன்முடிக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஐம்பது லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்முடி இதுவரை பேசிய பேச்சுக்கள் குறித்த பல்வேறு காணொளிகள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பொன்முடி தற்போது தனது கர்மாவை அனுபவிக்கிறார் என்ற ரீதியில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அண்மைக்காலத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய தகாத வார்த்தைகள் சர்ச்சைக்கு உள்ளான பேச்சுக்கள் இவையும் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.
“ஓசி பஸ்” முதல் “நீ வாய மூடு வரை”
சென்னை அம்பத்தூரில் கடந்த மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, அரசு பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக சில கருத்துக்களை பேசினார். `இப்போ பஸ்சில் எப்படி போறீங்க..இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் இங்கிருந்து எங்கே போக வேண்டுமானாலும் எல்லாம் ஓசி பஸ்சில் போறீங்க’ என்று பெண்களை பார்த்து பேசி இருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது, “பெண்களுக்கு திராவிட மாடல் முக்கியத்துவம் கொடுக்கிறது” என்று கூறிய பொன்முடி, ஒன்றியக் குழு தலைவரைப் பார்த்து, “ஏம்மா…நீ எஸ்.சி தானே…” என்று மேடையிலே சாதியை குறித்து பேசினார்.
அமைச்சர் பொன்முடி. திருக்கோவிலூரில் கடந்த வாரம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அதில் பேசிய பொன்முடி, “நாங்கள் ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகின்றன. நகரங்களிலும் கிராமங்களிலும் பல பணிகள் நடைபெற்றுவருகின்றன. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மூலமாக நகர்ப்புற வளர்ச்சிக்காக பல பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். அது சென்னையாக இருந்தாலும்… விழுப்புரமாக இருந்தாலும்… திருக்கோவிலூராக இருந்தாலும்…” என்று பொன்முடி பேசினார்.
பொன்முடி பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண் நிறைய குறைகள் இருப்பதாகக் கூறினார். அதனால் எரிச்சலடைந்த அமைச்சர் பொன்முடி, “என்னது குறையா… கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரு” என்று கோபப்பட்டார். பிறகு, “உன் வூட்டுக்காரர் வந்திருக்காரா?” என்று பொன்முடி கேட்டார். அதற்கு, “அவர் போயிட்டார் (இறந்துவிட்டார்)” என்று அந்தப் பெண் பதில் சொல்ல… “போயிட்டாரா… பாவம்… நல்லவேளை…” என்று சிரித்தார் பொன்முடி.
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய வீடியோ காட்சி, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக வலம் வந்தது. அதில், ‘மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பெடுத்து அடித்த காலம் மாறி, மாணவர்கள் பிரம்பெடுத்து ஆசிரியர்களை அடிக்க வரும் காலமாகி விட்டது. எல்லாம் கால மாற்றம். இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்து தான் கல்வி கற்பிக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.இதற்கு, பேராசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சித்தலிங்கமடம் ஊராட்சி. உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொகுதியில் இந்த ஊராட்சி அடங்கியிருக்கிறது. இந்த ஊராட்சியை இரண்டாகப் பிரித்து டி.எடப்பாளையம் பெயரில் தனி வருவாய் கிராமமாக உருவாக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். வருவாய் துறையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணிப்பு செய்தனர். மேலும் கடையடைப்பு நடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. தகவல் அறிந்து போராட்டம் செய்யும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பொன்முடி அப்பகுதிக்கு வந்தார்.
அப்போது அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்ட மக்கள், அவரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சலசலப்புக்கு மத்தியில் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, ஒருவரை ஒருமையில் திட்டினார். மேலும், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். உங்களை யாரோ தூண்டிவிடுகிறார்கள் என்றார் பொன்முடி. அமைச்சரின் கடுமையான வார்த்தைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ட்ரெண்ட் ஆன போடாமயிரே_பொன்முடி
இன்று காலை நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் சமூக தளமான எக்ஸ் தளத்தில் போடாமயிரே_பொன்முடி என்ற ஹாஷ்டேக் பிரபலமானது. இதில் பொன்முடிக்கு எதிரான பல்வேறு விமர்சன கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆளுநரை அவமரியாதையுடன் ஆபாசமான செய்கையுடன் பேசிய பொன்மொழிக்கு கர்மபலன் கொடுத்த தண்டனை, இனி அவரால் அவைக்கு வர முடியாத படி செய்திருக்கிறது என்று கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஊழல் வழக்கு – சட்டம் சொல்வது என்ன?
தீர்ப்பு விவரம்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அதிரடி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் உடனடியாக பொன்முடி, எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழக்கிறார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
தற்போது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால், தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை உடனடியாக பொன்முடி இழந்து விட்டார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மக்கள் பிரதிநிதி குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே, தகுதியை இழக்கிறார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடை பெற்றால் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக தொடரமுடியும்.