- Ads -
Home Reporters Diary தமிழக அரசியலை புட்டுப் புட்டு வைத்து விளாசிய பிரதமர் மோடியின் நேர்காணல்… முழுமையாக!

தமிழக அரசியலை புட்டுப் புட்டு வைத்து விளாசிய பிரதமர் மோடியின் நேர்காணல்… முழுமையாக!

நீங்க 5, 6ன்னு என்ன வேணாலும் தாராளமா எண்ணிக்குங்க.  என்னோட நோக்கு 2047 மேல, அசையாம பதிஞ்சிருக்கு.  2047 வளர்ச்சியடைந்த பாரதம். 

#image_title
pm modi speech in chandrayaan success

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சியான தந்தி டிவி.,க்கு அளித்த பேட்டி, பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதில், அவர் தமிழகத்தின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழக அரசியலை புட்டுப் புட்டு வைத்திருக்கிறார். இன்றைய அரசியல் களத்தை விளாசித் தள்ளியிருக்கிறார். தனது அரசியல் பயணத்தில் தமிழகத்தைப் பற்றிய புரிந்துணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் எதிர்காலம் பாஜக., குறிப்பாக அண்ணாமலை கையில் என கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அந்த நேர்காணல் இங்கே நன்றியுடன் தமிழாக்கி எடுத்தாளப் படுகிறது.

தமிழாக்கம்: ராமஸ்வாமி சுதர்ஸன்

Question on the visit of PM to TN during olden times….

பார்க்கப்போனா 5 தசாப்தங்களாகவே நான், தமிழ்நாட்டுக்கு வந்து போயிட்டு இருக்கேன்.   பல்வேறு சூழ்நிலைகள்ல நான் வர வேண்டியிருந்தது.  தெரிஞ்சுக்கற ஆர்வத்தில தேசம் முழுக்க நான், சுத்திப் பார்த்த காலத்திலயும் நான் வந்தேன்.   ஆனா ஒரு வேளை நான், தெளிவா சொல்லணும்னு எதோட எல்லாம், எனக்கு ஈர்ப்பு இருந்துதுன்னா, அது வந்து, கன்னியாகுமரியில அப்ப, விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்ப உருவாகிட்டு இருந்திச்சு..

அந்த வேளையில, அந்தக் காலகட்டத்தில நான் வந்திருந்தேன், அப்பத் தான் கட்டிக்கிட்டு இருந்தாங்க.  அதன் பிறகு… 1975இல… திருமதி இந்திரா காந்தி அவசரநிலையை பிறப்பிச்ச வேளையில, அப்ப அவசரநிலை காலத்தில நான் தலைமறைவாயிருந்தேன்.   அப்ப ஒருங்கிணைப்பு பணிகளுக்காக நான், நாடு முழுக்க பயணப்பட்டிருந்தப்ப தமிழ்நாட்டுக்கும் வந்தேன். 

 அவசரநிலைக்காலம் முடிவுக்கு வந்த பிறகு, நாங்க எல்லாம், நாங்க ஒரு சில பேரு என்ன முடிவு செஞ்சோம்னா அதாவது நம்ம, தேசம் முழுவதிலும், அவசரநிலைக்கு எதிரா நடந்த போராட்டம், மேலும் பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டம், அவற்றோட அனைத்து, தரவுகளும் தொகுக்கப்படணும்னு நாங்க தீர்மானம் செஞ்சோம்.  இது தொடர்பா நான் நாடு முழுக்கவும், மாநிலத் தலைநகரங்களுக்குப் போனேன் சில வேளை சிறைகளுக்குப் போனேன்.  அப்ப மும்முரமா போராட்டத்தில ஈடுபட்டிருந்தவங்களை சந்திச்சேன்.  எப்படி ஈடுபட்டாங்கங்க என்ன நடந்திச்சுங்கற விபரங்களை எல்லாம் சேகரிச்சோம். 

இந்தப் பணிக்காக அவசரநிலைக்காலத்துக்குப் பிறகு கணிசமான நேரம் அங்க வந்து…. நான் இருக்க வேண்டியிருந்திச்சு.  அப்புறமா… கட்சிப்பணிகளுக்காக நான் அடிக்கடி வந்து போயிட்டிருந்தேன்.   அதன் பிறகு….. ஏக்தா யாத்திரை ரொம்ப மகத்துவம் வாய்ந்த ஒரு விஷயம்.  கன்னியாகுமாரியிலிருந்து நாங்க அதைத் தொடக்கினோம்.  நாங்க ஸ்ரீநகரை நோக்கிப் போயிட்டிருந்தோம்.   நாங்க ஒரு கனவைத் தாங்கிப் பயணிச்சோம் அப்ப எல்லாம் லால்சவுக்குல மூவண்ணக் கொடி எரிக்கப்பட்ட காலகட்டம் ஸ்ரீநகர்ல. 

முழுமையான வகையில…. ஜம்மு கஷ்மீரத்தை இணைக்கவல்ல ஒரு, வாய்ப்பு அது.    மேலும் இதில என்ன சந்தோஷம்னா, நான் மூவண்ணக் கொடியை ஏந்திட்டுப் போனது.  அப்ப அந்த நாட்கள்ல, பகத்சிங் சுக்தேவ் அப்புறம் ராஜ்குரு, மூவரோட குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தாங்க.  அவங்க எல்லாம், மூவண்ணக் கொடியை எங்களுக்கு அளிச்சாங்க, இதைத் தான் நாங்க ஸ்ரீநகரோட லால்சவுக்குல ஏத்தினோம்.  கன்னியாகுமாரியில.  கன்னியாகுமாரில.  கிட்டத்தட்ட. 

Question on the most memorable experience in TN

என்னோட எல்லா அனுபவங்களும் ஒண்ணை விட ஒண்ணு சிறப்பாவே இருந்திச்சு.  ஏதோ ஒண்ணை மட்டும் என்னால குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, ஆனா ஒரு விஷயத்தை நான் சொறேன்.  என் இதயத்தைத் தொட்ட விஷயம்.  நாங்க… கன்னியாகுமாரிலேர்ந்து புறப்பட்ட போது, கேரளத்துக்குப் போயிட்டு, மறுபடி தமிழ்நாட்டுக்குள்ள, ஈரோடு போன்ற இடங்களுக்குப் போனோம். 

சுதந்திரப் போராட்டத்தில ஈடுபட்ட ஒரு மாபெரும் உயிர்த்தியாகி.  ரொம்ப சின்ன வயசிலேயே அவர் உயிர்த்தியாகி ஆயிட்டாரு.  அவரோட குடும்பத்தைச் சேர்ந்த யாரோ…. ஒரு 90 வயது இருக்கும், ஒரு அம்மா.  அவங்க எனக்கு ஆசீர்வாதம் செய்ய வந்தாங்க, அப்ப நான் அங்க போயி, அந்தத் தியாகியோட சமாதி அங்க ஈரோடுல, அங்க நான் மலரஞ்சலி செலுத்தினேன்.   

ஆனா அந்த அம்மாவோட உணர்வு….. அவங்க, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த உயிர்த்தியாகி யாருங்கறது எனக்கு இப்ப சரியா நினைவு இல்லை.  ஆமா ஆமா நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க.  என் மனசுல அது ஆழமா பதிஞ்சிருச்சு.  அவங்க அளிச்ச அந்த ஆசிகள் அவங்களோட உணர்வு,  மேலும் நம்ம…. குமரனோட, விடுதலைக்காக உயிரையே அர்ப்பணிச்ச அந்த சம்பவம் பத்தி, அவங்க பெருமைப்பட்டாங்க.  

நாங்க எந்தப் பணிக்காக போனோமோ அதுக்கு இது உத்வேகமா அமைஞ்சுது.  ரெண்டாவதா.  எங்களோட ஏகதா யாத்திரை பயணிச்ச வேளையில, வயல்வெளியில ஒரு மனிதர்…. பலமா கத்திக்கிட்டு இருந்தாரு.  அரையில கோவணம் தான் கட்டியிருந்தாரு வயக்காட்டுல வேலை செஞ்சிட்டு இருந்தாரு.  ஐயா…. நில்லுங்க நில்லுங்க நில்லுங்கன்னாரு.   என்ன ஆச்சோ தெரியலையேன்னு நாங்க, உடனே எங்க பயணத்தை நிறுத்தினோம்.  அவரு வந்தாரு, அவருக்கு நாங்க பேசறது பெரிசா…. புரியலை.   ஆனா அவரு என் கையில, 11 ரூபாய் குடுத்தாரு.  அப்ப நான், தமிழ் பேசக்கூடிய தொண்டர்களை அழைச்சு அவரு என்ன சொல்றாருன்னு கேட்டேன்.  அந்த மனிதருக்கு ஏதும் தெரியாது இது சமய யாத்திரையா என்னென்னு. 

அவரு நீங்க கஷ்மீர் போறீங்களான்னு கேட்டாரு.  என் காணிக்கையா 11 ரூபாயை போடுங்கன்னாரு.  கஷ்மீருக்கு நீங்க போறீங்க.  யாத்திரை கஷ்மீரம் போகுதுங்கறது வரை அவருக்குத் தெரியும்.   ஆகையினால தான் அவரு, என் காணிக்கையா 11 ரூபாயை சேர்த்திருங்கன்னாரு.  அதாவது அவரு மனசுல இத்தனை உணர்வுகள் இருந்திச்சு இடுப்புல கோவணம் தான்.  அந்த ஏழை விவசாயி, வயல்ல வேலை பார்க்கற கூலித் தொழிலாளின்னு எனக்கு தோணுது.  இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான பல சம்பவங்கள் நடந்திச்சு இதை மறக்க முடியாது. 

Question on the most favourite thing of TN.  Language, culture or food.

அதாவது நாம, தமிழ்நாடுன்னு சொல்லும் போது அதை தனித்தனி பாகங்களா பார்க்க கூடாது.  ஒரு முழுமையான வடிவத்தில பார்க்கணும்.  சரி மொழிலேர்ந்து தொடங்கறது இயல்பு தான்.  ஆனா ஒண்ணு, என் மனசுல ரொம்ப கோவம் இருக்கு ரொம்ப.  கோவம் எதுனாலனா, அதாவது நம்மோட மனிதர்களே, இத்தனை மகத்தான பாரம்பரியத்துக்கு எதிரா அநியாயம் செஞ்சிருக்கோம்.  ஏதோ இடத்தில, டைனோசரோட முட்டை கிடைச்சா, தேசம் முழுக்க கொண்டாடுது. 

பாரதம் கிட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, உலகத்திலேயே வளமான மொழி இருக்கு, ஆனா நாம நெஞ்சை நிமிர்த்தி இதை உலகம் முழுக்க பறை சாற்றலை.  நாம சொல்றதில்லையே!!  நாம இதை ஏன், இந்த மாதிரி குறுக்கி வச்சிருக்கோம்? என் மனசுல இது, ஒரு முள்ளா தைக்குது.  ஆகையினால தான், நான்… ரெண்டொரு வரிகளை அப்பப்ப பேசறேன்.   கேட்க முயற்சி செய்யறேன் புரிஞ்சுக்க முயற்சி செய்யறேன். 

ஆனா என் மனசுல ரொம்ப உறுதியோட இருதேன் நான், ஐநாவுல கண்டிப்பா, தமிழ் பத்திப் பேசுவேன்னு.  அதாவது என்னென்னா உலகத்திலேயே மிகவும் தொன்மையான மொழின்னு உலகமறிய பேசினேன்.  இது உலகத்துக்குத் தெரியணும்.  மேலும் எத்தனை வளமான பாரம்பரியம்!!  எல்லா இடத்திலயும் இதுக்கு பரணி பாட வேண்டாமா?   ஆகையான நான்… இப்ப… இப்ப நீங்களே பாருங்க.  மொழி அரசியலாக்கப்பட்டிடுச்சு. 

நல்ல காலம், இட்லி தோசை இன்னும் அரசியலாக்கப்படலை.  இல்லைன்னா அதுவும் தமிழ்நாட்டுக்குள்ளயே குறுகிப் போயிருக்கும்.  இன்னைக்கு… ஸ்ரீநகருக்குப் போங்க இட்லி தோலை கிடைக்கும் கௌஹாத்திக்குப் போங்க இட்லி தோசை கிடைக்கும்.  கட்ச் குஜராத்தின் கட்சுக்குப் போங்க அங்க கிடைக்கும்.  எனக்கு என்ன தோணுதுன்னா, எப்படி இட்லி தோசை உலகம் முழுக்க பரவியிருக்கோ, நம்மோட தமிழ் மொழியும் கூட பரவியிருந்திருக்கணும்.  ஆனா… அரசியல் காரணங்களுக்காக அதை குறுக்கி வைக்கப்பட்டிருக்கு, இதன் காரணமா, தமிழ் மொழிக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கு, இந்தியாவுக்குமே கூட பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கு. 

Question on favourite food

பொதுவா நான் நான்….. உப்புமாவை விரும்பி சாப்பிடுவேன்.   (சிரிப்பு) அதே போல எனக்கு…. உங்க… கிச்சடி மாதிரி இருக்குமே,  கிச்சடி பொங்கல்.  அது ரொம்ப லைட்டா இருக்கும். 

Question on Modi Idly in Salem

ஹாங்.. (சிரிப்பு)  அது எனக்கு இன்னைக்குத் தான் தெரியும் நான் கூட, இப்ப சேலம் போயிட்டு வந்தேன் அவங்க கிட்ட சொல்லியிருக்கலாம்.  அப்படியா?  (சிரிப்பு) 

Question on various initiatives regarding Tamil and Tamil tradition.  What lead you to this?

அதாவது பார்த்தீங்கன்னா, காசி தமிழ் சங்கமம்னு சொன்னா, நான் காசியோட நாடாளுமன்ற உறுப்பினராகறதுக்கு முன்னாடி கூட காசிக்கு போயிட்டு வர்றதுண்டு.  ஆனா எம்பி ஆன பிறகு, அங்க, என்னோட பார்வை கொஞ்சம் மாறியிருச்சு என்னோட கவனம் மாறியிருச்சு.  நான் ஒரு விஷயத்தை கவனிச்சேன், அங்க இருக்கற படகோட்டிகள், அங்க, குஜராத்திகளும் கூடத் தானே காசிக்கு வர்றாங்க? 

வங்காளிகள் வர்றாங்க.  மராட்டியர்களும் வர்றாங்க.  ஆனா வெகுசில படகோட்டிகள் மட்டுமே, இந்த மொழிகள்ல பேசறாங்க இல்லை… உரையாடறாங்க.  ஆனா ஆச்சரியகரமா, அங்க பல படகோட்டிகள், அங்க இருக்கறவங்க அந்த ஊர்க்காரங்க, அவங்க தமிழ்நாட்டுக்காரங்க இல்லை, தமிழ்ல பேசறாங்க.  ஏன்?  அதிகபட்ச யாத்ரீகர்கள் தமிழ்நாட்டிலேர்ந்து தான் வர்றாங்க.  இந்தக் காரணத்தால தான் ரொம்ப இயல்பாவே தமிழ் வருது, அவங்களால இந்தில பேச முடியாது.  மிகப்பெரிய பிணைப்பை இது ஏற்படுதறதை நான் உணர்ந்தேன். 

மேலும், நம்ம பாரதி அவர்களோட குடும்பத்தார் இன்னைக்கு அங்க வசிக்கறாங்க.  நம்ம, சுப்பிரமணிய பாரதியார்.  அவரு குடும்பத்தார் இப்பவும் அங்க வசிக்கறாங்க.  பிறகு நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில, பாரதியார் பெயரில, ஒரு இருக்கையை அமைச்சோம்.  பிறகு என் மனசுல தோணிச்சு காசி, தமிழ் சங்கம நிகழ்ச்சியை செய்யணும்னு.  அங்க மக்கள் ரொம்பவே ஒருங்கிணைக்கப்பட்ட முறையில வர்றாங்க.   அங்க காசியில மக்களுக்கு தமிழ் கலாச்சாரம், பத்தின உணர்வு உண்டாகணும்.  அங்க தமிழ் கலாச்சார, நிகழ்ச்சிகள் நடக்குது.  தமிழ் நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்குது.  தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்குது.   உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம், அதிக அளவுல புத்தகங்கள், தமிழ் இலக்கியம் பத்தின நிகழ்ச்சிகள்ல, தமிழ் புத்தகங்கள் விற்பனை ஆச்சு.  

அப்ப எனக்கு தேசத்தின் ஒருமைப்பாடு பத்தின மிகப் பெரிய பலத்தை நான் உணர்ந்தேன்.  அதே போல, செங்கோல்னு சொன்னா, பாருங்க இது, ரொம்ப குறைவானவங்களுக்கே தெரியும், நம்ம பாரதத்தோட சுதந்திரத்தின், முதன்மையான கணம்னு சொன்னா… சுதந்திரத்தோட முதல் கணம், அதாவது நாம சுந்திரம் அடைஞ்சாச்சுங்கற கணம், அந்தக் கணம், இந்தச் செங்கோலோட தொடர்புடையது. 

ALSO READ:  மேற்குலகை பதறச் செய்யும் பிரிக்ஸ் மாநாடு!

அந்தக் கணம், நம்மோட, தமிழ்நாட்டின், புனிதர்கள் இருக்காங்களே, ஆதீனம் ஆதீனங்கள் ஆமா, அவங்க தான் இந்தச் செங்கோலை குடுத்தாங்க.  பண்டித நேருவுக்கு… ஆட்சி மாற்றத்தைக் குறிக்கற வகையில ஒரு ராஜதண்டம் அவரு கிட்ட கொடுக்கப்பட்டிச்சு.  ஆனா… அவருக்கு அதில சிரத்தை இல்லையோ வேற என்ன காரணமோ அது இலாபாதில அவரோட, நினைவகத்தில கைத்தடிங்கற பெயரில வைக்கப்பட்டிருந்திச்சு.  இத்தனை பவித்திரமான பொருளுக்கு கீழ கைத்தடின்னு எழுதிட்டாங்க.   என் கவனத்துக்கு இதெல்லாம் கொண்டு வரப்பட்டிச்சு. 

அதுக்கு என்ன ஆச்சுன்னு நான் தேடிப் பார்க்கச் சொன்னேன்.  அங்க எனக்குக் கிடைச்சுது.  நானும் ஆதீனங்கள் கிட்ட இது பத்தி எல்லாம் தீர விசாரிச்சேன்.    தமிழ்நாட்டுல இதைச் செய்த பொற்கொல்லர் கிட்டயும் விசாரிச்சேன்.  முழுக்க ஆய்வு செய்து பார்த்தேன், ஓராண்டுக்கு ஆய்வு செய்தேன்.  நான் அப்பவே தீர்மானிச்சேன் இது நான், பாரதத்தின் விடுதலையோட, முதன்மையான சாட்சின்னு. 

இது நம்மோட கருத்தூக்கம்.  புதிய நாடாளுமன்றம் உருவாகும் போது, அங்க இதை நாம நிர்மாணம் செய்யலாம்னு.  பிறகு இதை ஒரு மூலையில வச்சிருவோங்கற மாதிரி இல்லை.  நாம இதை, உயிர்ப்புடையதா ஆக்கினோம் இப்ப குடியரசுத் தலைவர், போன போது முதல்ல செங்கோல் போச்சு.  பிறகு குடியரசுத் தலைவர் போனாங்க.  அதன் பிறகு, குடியரசுத் தலைவருக்கு முன்பாவே செங்கோல் நிறுவப்பட்டு அதன் பிறகு அவங்க உரை தொடங்கிச்சு.   இப்படி ஒரு பெரிய வழிமுறையை, நாங்க மேம்படுத்தியிருக்கோம். 

தேசத்தின் சுதந்திரத்தின் முதல் கணம், நினைவுல நிலைநிறுத்தப்படணும்.   செங்கோல்ங்கறது, பாரதத்தின், தமிழ்நாட்டில மிக ஆழமா வேரூன்றிப் போன ஒரு மகத்தான பாரம்பரியம்.  நாம பெருமைப் படணும்.  தேசத்தோட துரதிர்ஷ்டத்தைப் பாருங்க, அதாவது தமிழ்நாட்டின் தலைவர்களே கூட, தமிழ்நாட்டின் தலைவர்களே கூட, இதைப் புறக்கணிச்சாங்க.  இதை விட பெரிய அவலம் வேற ஏதாவது உண்டா?  இப்ப தமிழ்நாட்டின் தலைவர்களே தமிழ் கலாச்சாரம், தமிழின் வரலாறு, இது பத்தி பெருமைப்படலைன்னா, அப்புறம் எத்தனை, தீங்கு ஏற்படும்னு இவங்களுக்கு கொஞ்சமும் விளங்கலை. 

Question on the political motives of Modiji that it is done to garner votes of Tamils.

இதனால வாக்குகள் கிடைக்கும்னா, இவங்க இதை விட பத்து மடங்கு இல்லை செஞ்சிருக்கணும்!!  அவங்க கிட்ட எல்லா அதிகாரமும் இருக்கே!!  அவங்களுக்குத் தெரியும், இதனால தேசம் பலமுடையதாக ஆகும், அவங்களுக்குத் தெரியும், இதனால வாக்கு அரசியல் குறைவாக ஆகும்.   அவங்களுக்கு நல்லா தெரியும், இப்படி செய்யறதால குடும்ப அரசியல் முடிவுக்கு வந்துடும்னு.  அவங்களுக்கு இது பத்தின பயம் இருக்கு.  இதனால வாக்குகள் கிடைக்கும்னா எனக்கு முன்னால அவங்க ஓடிப் போயிருப்பாங்க.   

Question on speculation of PM contesting from Kashi and Rameshwaram.  Has it been ever considered?  Any possibility in the future?

நான் வாழ்க்கையில தேர்தல்ல போட்டிடறதைப் பத்தி யோசிச்சதே இல்லை.    இந்தப் பாதையில திடீர்னு நான் வர வேண்டியிருந்திச்சு.  நான் வேற பணியில, என்னை ஈடுபடுத்திக்கிட்டு இருந்தேன்.  என்னைக்குமே நான் என்னைப் பத்தி நினைச்சதேயில்லை.   நான் தேர்தல்ல போட்டியிடணும்னு, நானும் சிந்திச்சதில்லை தீர்மானமும் செஞ்சதில்லை.  நான் ஒரு தொண்டன் ஒழுங்குமுறைப்படி நடக்கும் ஒரு தொண்டன். 

கட்சி தான் தீர்மானிச்சுது.  சட்டப்பேரவைத் தேர்தல்ல போட்டியிடுனு கட்சி தீர்மானிச்சுது.  முதல்ல ராஜ்கோட்ல போட்டியிடுன்னாங்க போட்டியிட்டேன் பிறகு மணிநகர்னாங்க அங்க நின்னேன்.  பிறகு பரோடாவுல போட்டி போடுன்னாங்க பிறகு காசின்னாங்க.  என் கட்சி என்னை எங்க அனுப்பிச்சோ அங்க போய் போட்டியிடறேன்.  நான் இதில எல்லாம் என் கவனத்தை செலுத்தறதில்லை.  15.41

Are you open to the idea?

விஷயம் என்னென்னா, நான், என்னோட பயணத்தோட , அடிப்படைக் காரணம்னு சொன்னா, அதாவது நான், திறந்த மனசோட தான் எதையுமே செய்யறேன்.  இப்ப நான் உங்களுக்கு நேர்முகம் அளிக்கறேன் உங்களை சந்திக்கறேன்னா, நான் திறந்த மனசோட தான் சந்திச்சிருக்கேன்.   திறந்த மனது தான் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான, வாயில்களைத் திறக்குது. 

Question on Viksit Bharat and plans for TN in it?

முத விஷயம் என்னென்னா, விக்சித் பாரதம், தில்லியின் வளர்ச்சின்னு மட்டும் கிடையாது.  (சிரிப்பு).  பாரதத்தோட ஒவ்வொரு இடமும் பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனும், அவங்க விக்சித் பாரதத்தோட சொந்தக்காரர்களா ஆகணும்.   அடுத்ததா, பாரதம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உடையது.  நான் குஜராத்தில இருந்தப்பகூட இதை சொல்லிக்கிட்டே இருப்பேன்.   பாரதத்தோட வளர்ச்சிக்காக குஜராத்தோட வளர்ச்சி. 

இந்தக் கோட்பாட்டோட தான் நான் அங்க பணியாற்றினேன்.   நம்ம எல்லாரோட எண்ணமும் என்னவா இருக்கணும்னா, இந்த வளர்ச்சியடைந்த பாரதத்தை ஏற்படுத்த நாம வளர்ச்சியடைந்த மாநிலத்தை உருவாக்கணும்.  ஆகையினால முதல்…. விஷயம் என்னென்னா, வளர்ச்சியடைந்த பாரதத்துக்காக வளர்ச்சியடைந்த தமிழ்நாடுங்கற உறுதிப்பாட்டை,  தமிழ்நாட்டின் அனைத்துக் குடிமக்களும் மேற்கொள்ளணும்.  தமிழ்நாட்டின் அனைத்துக் குடிமக்களும் தேசத்துக்கு இணையா இதில இணையணும்.  என் கருத்து என்னென்னா, தமிழ்நாடு, எத்தனை சக்தியுடையதுன்னா, வளர்ச்சியடைந்த பாரதத்தோட மிகப்பெரிய உந்துசக்தியா, தமிழ்நாடு ஆக முடியும். 

 நீங்களே பாருங்க இப்ப, உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டா… தயாரிப்பு.   உங்களுக்கு திறமையான இளைஞர்கள் கிடைப்பாங்க.  நீங்க அங்க…. மெட்ராஸ் ஐஐடியை எடுத்துக்குங்க.  5ஜியில, மிகப்பெரிய பங்களிப்பை, மெட்ராஸ் ஐஐடி செஞ்சிருக்கு.  மேலும் இன்னைக்கு நம்மோட 6 ஜி இலக்குல, அதில நாம உலகத்திலயே முதன்மையாவும் இருக்கலாம்.  அதிலயும் கூட, ஐஐடி மெட்ராஸ் மிகப்பெரிய பங்காற்றி வருது.  அதாவது தொழில்நுட்பமாகட்டும், அதிலயும் மிகப்பெரிய பங்களிப்பு.  தொழில்துறைன்னு சொன்னா, அதிலயும் பெரிய பங்களிப்பு. 

பார்த்தீங்கன்னா முன்னொரு காலத்தில, தமிழ்நாட்டோட ஒரு மாவட்டம் பேரு மறந்து போச்சு.  200 300 ஆண்டுகள்னு சொல்லுவாங்க.   அங்க விவசாயிகள் பயிர் செய்யற நெல், தலா ஒரு ஏக்கர்ல அவருக்கு கிடைச்ச சாதனை மகசூலை, இன்னை வரை உலகத்தில யாராலயும் அடிச்சுக்க முடியலை இது தமிழ்நாட்டுல ஏற்படுத்தப்பட்டிச்சு.  இது தானே அவங்களோட வல்லமை!!  இந்த வல்லமையை கண்டுக்காம இருக்க முடியாது.  இப்ப வளர்ச்சியடைந்த பாரதம் படைக்கப்படணும்னா, இந்த சக்தி இருக்கே, இந்த சக்தி துணையோட வளர்ச்சியடைந்த பாரதம் உருவாகும்.  இந்த சக்திக்கு மேலும் வல்லமை சேர்க்கறது, இந்த சக்திக்கு மேலும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தறது, ஒட்டுமொத்த தேசத்தோட சக்தியை அந்த சக்தியோட இணைக்கறது, இதைக் கொண்டு தான், அங்க பாதுகாப்பு இடைவழி உருவாக்கப்படுது.  நான் உறுதியா நம்பறேன்.  இது நம்ம பாரதத்தை தற்சார்பு பாரதமா வார்த்தெடுக்கற விஷயம்.  பாதுகாப்புத்துறையில தற்சார்புடையத இருக்கணும்.   இது இந்த பாதுகாப்பு இடைவழியால ஏற்படும்.  என் மனசுல இது தெளிவா இருக்கு.  (சிரிப்பு)

Question on why TN is a tough nut for the PM to crack and whether it is changing in this election?

இந்த வினா… நிறைய ஊடகவியலார்கள் மனசுல ஏன் வருதுன்னா, தவறா நினைக்காதீங்க நான் உங்களையும் விமர்சனம் செய்ய இருக்கேன்.  உங்க தொலைக்காட்சிக்கு முன்னாலயே செய்யறேன்.  என்னை தவறா எடுத்துக்காதீங்க.  துர்பாக்கியம் என்னென்னா, இத்துப் போன கோட்பாடுகளை கெட்டியா பிடிச்சுக்கிட்டு, நாம அதோட அடிப்படையிலேயே வினாக்களையும் எழுப்பிக்கிட்டு இருக்கோம்.   இப்ப பாருங்க… நான் அரசியல்ல இருக்கேன், அதனால எல்லாத்தையுமே அரசியலுக்காவே செய்யணுமா?  வாக்கை சேகரிக்கவே செய்யணுமா?  அதிகாரத்தை அடைய மட்டுமே செய்யணுமா?  

இந்த எண்ணப்பாடு… குறைஞ்சது எனக்கு சரிப்பட்டு வராது.  நான் தேசத்துக்காக செய்யறேன்.  தமிழ்நாட்டுல என் தேசத்தோட மிகப்பெரிய சக்தி இருக்கு.  ஆட்சியதிகாரம் யாருக்குங்கறது என் விஷயமில்லைங்க.  அப்படியே இது தான் என் இலக்குன்னா, நான் வடகிழக்குல எந்த வேலையும் செய்யக் கூடாதுல்லையா?  வடகிழக்கைச் சேர்ந்த…. என்னோட அமைச்சர்கள், 150 முறைக்கும் மேலா… அமைச்சர்கள், வடகிழக்குக்கு போயிருக்காங்க. 

இந்தியாவோட எத்தனை பிரதமர்கள், அவங்க எல்லாருமா சேர்ந்து எத்தனை முறை வடகிழக்கு போயிருப்பாங்களோ, நான் மட்டுமே அவங்களை விட அதிகமா போயிருக்கேன்.  ஆகையினால, எல்லா விஷயங்களையும், தேர்தல்கள் அரசியல் பிஜேபி, இதை வச்சு எடை போடுறது, என்னோட அடிப்படையான முயற்சிகளுக்கு செய்யற அநீதின்னு நினைக்கறேன்.   நான் என்னோட தேசத்தின் பிரகாசமான எதிர்காலத்துக்காக பணியாற்றறேன். 

மேலும் தமிழ்நாட்டின் குடிமக்கள், யாருக்கு வாக்களிக்கறாங்கங்கறது என் பிரச்சனை இல்லை.  அவங்களோட திறன்கள்திறமைகள் மேல, கவனம் இருக்கு.  அவங்களோட எதிர்பார்ப்புகள் மேல என் கவனம் இருக்கு.  அவங்களோட உறுதிப்பாடுகள் மேல என் கவனம் இருக்கு.  ஒரு விஷயம், இன்னைக்கு மக்கள் ஓரிடத்தில….   என்னை அமர வச்சிருக்காங்கன்னா, அவங்களுக்கு என்னால சேவை செய்ய முடிஞ்சா, இது எனக்கு மிகப்பெரிய பேறாக இருக்கும்.  இந்த வேலையை என்னால தில்லியில உட்கார்ந்துக்கிட்டு செய்ய முடியாது.  நான் அங்க போயாகணும் அவங்களை சந்திச்சாகணும்.   இப்படித்தானே இந்தியாவோட எல்லா இடங்களுக்கும் நான் போறேன்?  தமிழ்நாட்டுக்கும் போறேன்.  ஆகையால தயவு கூர்ந்து, நான் ஏதோ ஒரு அரசியல்… நோக்கத்தோட தான் அங்க போயிக்கிட்டு இருகேன், அப்படீன்னு குறைஞ்சது என் விஷயத்திலயாவது நினைக்காதீங்க. 

Question on if TN still does not vote for BJP, what would you feel?

எனக்கு எப்பவுமே தமிழ்நாட்டு மக்கள் மேல, எந்த ஒரு வருத்தமும் கிடையாது.  அப்படி ஒரு வருத்தமும் இருக்க கூடாது.  என்னோட அன்பு இருக்கு, என்னோட பாசம் இருக்கு, அங்க இருக்கற கலாச்சாரம் மேல எனக்கு பாசம் இருக்கு.  அது என்னை அப்படியே ஈர்க்குது.

Question on whether BJP is growing in TN under Annamalai?

இப்ப பாரதீய ஜன் சங்க காலத்திலேர்ந்தே, நாங்க தேசம் நெடுக பணியாற்றி வர்றோம்.  தமிழ்நாட்டிலயும் கூட செய்யறோம்.  ஒரு காலத்தில எங்க கிட்ட, நகராட்சி தேர்தல்ல போட்டியிடக்கூட ஆளுங்க இருக்கலை.  வேட்பாளர்கள் இருக்கலை.  அப்பலேர்ந்து நாங்க பணியாற்றிக்கிட்டு இருக்கோம்.  என்னோட கட்சியோட நான்கு தலைமுறையினர், தமிழ்நாட்டில, பாஜக இல்லை பாரதீய ஜன சங்கத்தோட கோட்பாடுகளை கொண்டு சேர்க்கறதுல ஈடுபட்டுக்கிட்டு இருக்காங்க.  அர்ப்பணிப்பு உணர்வோட செய்திட்டு இருக்காங்க.  அந்தப் பாரம்பரியத்தில, புதிய தலைமுறையினரும் வர்றாங்க.  இதில அண்ணாமலையும் வந்தாரு.   

இப்ப இவரு… மக்களோட கவனத்தை இளைஞர்களோட கருத்தை ஈர்க்கறாரு.  தன்னோட பிரகாசமான வேலையை துறந்துட்டு இவரு வந்திருக்காரு.  தனக்கு ஒரு சொகுசான வாழ்க்கையை அமைச்சுக்க விரும்பியிருந்தா, அவரு, டி எம் கேவுல சேர்ந்திருக்கலாம்.  அவரு ஏஐடிஏஎம்கேவுல இணைஞ்சிருக்கலாம்.   மிகப்பெரிய… சாதிப் பின்புலமும் உண்டு.  தெளிவா பேசறாரு.  வயசும் அதிகமாகலை.  ஆனா அவரு தேர்ந்தெடுத்த பாதைன்னா…. அது பாரதீய ஜனதா கட்சி.  இது எதைக் குறிக்குதுன்னா, தனிப்பட்ட பேரார்வங்களை விட அதிகமா, தேசத்தோட…. நலன்.  அந்த விஷயத்தில தமிழ்நாடு பின் தங்கிப் போயிரக் கூடாது, இந்தப் பின்னணியில இன்னைக்கு அண்ணாமலை பணியாற்றிக்கிட்டு இருக்காரு. 

Question whether PM regrets that AIADMK is not part of NDA alliance?

நான் என்ன நினைக்கறேன்னா, இந்த விஷயத்தை நாம வித்தியாசமா அணுகணும்.    நான் அரசியல்ல அதாவது … அதிகார அரசியல்ல எப்பவும் இருந்தது கிடையாது.  ஆனா 95லேர்ந்து, அம்மா ஜெயலலிதாவோட நான் தொடர்புல இருந்தேன்.  மேலும் நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா, இருந்து வந்தோம்.    நான் முதலமைச்சரா ஆன போது, பல மனிதர்கள், குஜராத்தில 2002 தேர்தல்களுக்குப் பிறகு, பலவகையான குற்றச்சாட்டுக்களை என் மேல வச்சாங்க. 

அந்த நேரத்தில அம்மா குஜராத்துக்கு வந்தாங்க, என்னோட பதவியேற்புல கலந்துக்கிட்டாங்க.  யாரோட எந்த விமர்சனத்தையும் அவங்க பொருட்படுத்தலை.  எங்க உறவு இப்படிப்பட்டதா இருந்திச்சு.  ஆகையினாலே, யாருக்காவது வருத்தம்னு இருந்தா, அது ஏஐஏடிஎம்கேக்காரங்களுக்கு இருக்குமே ஒழிய, நாங்க வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை.  இழப்புன்னு இருந்தா அவங்களுக்குத் தான் இழப்பு.  ஜயலலிதா அவங்களோட கனவுகளுக்கு, சமாதி கட்டும் பாவத்தைச் செய்யற, அவங்க தான் வருத்தப்படணும்.  பாரதீய ஜனதா கட்சி வருத்தப்பட எந்தக் காரணமுமே கிடையாது.

Question on why would the anti DMK voter vote for BJP instead of AIADMK?

அதாவது பாரதீய ஜனதா கட்சி மற்றும் என் டி ஏ… எங்களோட கூட்டணிக் கட்சிகள், மிக பலமான கூட்டணி.  மேலும் சமூகத்தோட பல்வேறு இடங்கள்ல, சக்திகளை இணைக்கவல்ல கூட்டணி.  பலவகையான பொருளாதார சமூக அடுக்குகளை, பிரதிநிதித்துவப்படுத்தற, கட்சிகளோட கூட்டணி இது.  அதாவது ஒருவகையான,,,, எப்படிப்பட்ட பூங்கொத்துன்னா, தமிழ்நாட்டில எண்டிஏ எத்தனை பிரமாதமா இருக்குன்னா,  சமூகத்தின் ஒவ்வொரு நபருக்கும், இதில அவரோட, பூ கண்ணுக்குத் தெரியும்.   அவரோட மலர் புலப்படும்.  அவருக்கு இது அவரோடதா தெரியும். 

இது பர்ந்துபட்ட கண்ணோட்டத்தில, எங்களோட மிகப்பெரிய வெற்றியா இருக்கு.  அதே போல…. பிஜேபி எண்டியேவுக்கு கிடைக்கற வாக்குன்னு சொன்னா, அது பாசிட்டிவான வாக்கு.   இவங்களுக்கு வேண்டாம் அவங்களுக்கு போடு அப்படீங்கறது மாதிரி கிடையாது.  என்ன ஆனாலும் சரி, இந்த முறை இவங்களுக்குதான் எங்க வாக்கு.  நான் என்ன சொல்றேன்னா, இது யாருக்கு எதிராவும் இருக்கற வாக்கு கிடையாது, பிஜேபி எண்டியேவுக்கு, பாசிடிவ் வாக்கு கிடைக்க போகுது.  மேலும் பாசிடிவ் வாக்கோட பலம் ரொம்ப அதிகம்.   பத்தாண்டுக்கால எங்க ஆட்சி தான் அதுக்குக் காரணம். 

இளைஞர்களுக்கு இருக்கற எதிர்பார்ப்புக்களை எதிர்கொள்ளக்கூடிய எங்க வல்லமை, பெண்கள் விஷயத்தில எங்களோட முதன்மைகள், விவசாயிகள் கிட்ட எங்களோட அர்ப்பணிப்பு, ஏழைகள் நலன்ல எங்க திட்டங்கள் கடைக்கோடிக்கும் கொண்டு சேர்த்திருக்கும் ஆதாயங்கள், இந்த விஷயங்கள் எல்லாம் இருக்கு.   இவை காரணமா, இன்னைக்கு, தமிழ்நாட்டுல, பிஜேபிக்கு ஆதரவான, என் டி ஏவுக்கு ஆதரவான, மக்கள் மனநிலை ஏற்பட்டிருக்கு. 

Question on Ram Mandir and the first feelings upon entering the sanctum during arthi.

பெரிய ஒரு, உணர்ச்சிகரமான கேள்வியை நீங்க கேட்டிருக்கீங்க.   ஒரு நாள் வந்து, அயோத்தியினுடைய இந்த, அறக்கட்டளையைச் சேர்ந்தவங்க அழைப்பு விடுத்தாங்க.  பிரதமருக்கு பல அழைப்புகள் வர்றது சகஜம்.  ஆனா இந்த அழைப்பு எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்திச்சு.  எப்ப எனக்கு அழைப்பு கொடுத்தாங்களோ அப்பலேர்ந்து நான், ஒருவகையில அந்த, ஆன்மீகச் சூழல்ல மூழ்கத் தொடங்கினேன்.  இதை விவரிக்கற அளவுக்கு என்கிட்ட சொற்கள் கிடையாது.  அதே போல, விஞ்ஞானத்தையும் ஆன்மீகத்தையும் எதிர்துருவங்களா பார்க்கறவங்க, அவங்க என்னோட இந்தச் சொற்களை வச்சு கிண்டலடிக்கறதுக்கு ஒரு, ஆயுதமா கூட பயன்படுத்தலாம். 

ஆனா எனக்கு ஒரு அலாதியான அனுபவம் ஏற்பட்டிச்சு.  ரொம்ப வித்தியாசமான அனுபவம்.  அதன் பிறகு நான் 11 நாட்கள் அனுஷ்டானங்களை கடைப்பிடிக்கணும்னு முடிவு செஞ்சேன்.   அதில கூட நான் என்ன தீர்மானிச்சேன்னா இந்த அனுஷ்டானங்களை, குறிப்பா, தென்னாட்டில, பிரபு ஸ்ரீ இராமனோட தொடர்புடைய இடங்கள்ல எல்லாம் போய் நான் கடைப்பிடிப்பேன்.  கட்சிப் பணியும் செய்வேன் அரசுப் பணியும் செய்வேன் அதே சமயம் மத்த நேரங்கள்ல என்னோட ஆன்மீகச் செயல்பாடுகள்லயும் ஈடுபடுவேன்.   மேலும் அந்த 11 நாள் அனுஷ்டானங்கள்ல, நான் முழுமையான வகையில, உள்நோக்கித் திரும்பினேன்.   என் மனம் முழுக்க இதே உணர்வு. 

ALSO READ:  செங்கோட்டை: காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா!

அதுக்குப் பிறகு நான், அயோத்திக்குப் போன போது, ஒவ்வொரு அடியா முன்னேறின போது, என் மனசுல என்ன கேள்வி ஓடிக்கிட்டு இருந்திச்சுன்னா, நான் பிரதமர்ங்கற வகையில அங்க போறேனா, இல்லை பாரதத்தோட, ஒரு குடிமகன்ங்கற வகையில போறேனா?   எப்பவுமே 140 கோடி நாட்டுமக்களைப் போல நான் அப்படீங்கற உணர்வு, சாமான்யமான, ஒரு பக்தன்ங்கற உணர்வுல போறேனா?  அப்ப எனக்குள்ள … பிஎம்ங்கற எந்தவிதமான உணர்வும் இருக்கலை.  நான் அதைத் தாண்டி இருந்தேன்.  அப்ப என் முன்னால இருந்ததெல்லாம் தேசம்…. 500 ஆண்டுக்கால போராட்டம், இலட்சக்கணக்கானவங்களோட உயிர்த்தியாகம். 

இலட்சக்கணக்கானவங்களோட தவம்.  சித்திரவதைகள்.  அயோத்தி… அது…. 500 ஆண்டுகள் எத்தனையோ தலைமுறைகளோட, ஆசைகள் அபிலாஷைகள் பக்தி.  ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் போது எத்தனை பெரிய சரித்திரம் இதோட தொடர்புடையதுன்னு உணர்ந்தேன்.  அப்படிப்பட்ட உணர்வு நிலையில நான், கோயில்ல பிரவேசிச்சேன்.  முன்ன எல்லாம் என்ன உணர்ந்தேன்னா, 140 கோடி நாட்டுமக்களோட, கனவு இன்னைக்கு நிறைவேறியிருக்குன்னு. 

ஒரு திருப்புமுனை அப்படீன்னு எல்லாம் நினைச்சேன்.  ஆனா எப்ப நான், ராம் லல்லா கிட்ட போன போது, என்னோட முத பார்வை அவரோட திருவடிகள்ல லயிச்சுது.  அடுத்து என் பார்வை அவரோட கண்கள்ல படிஞ்சுது.  நான் அப்படியே சொக்கிப் போனேன்.  சில கணங்கள்…. அங்க இருந்த பட்டர்கள் இதைச் செய்யுங்க அதைச் செய்யுங்கன்னாங்க என் கவனமே போகலை என் கவனம் முழுக்க, கண்கள்லயே ஆழ்ந்திச்சு.  என் மனசுல அப்ப இருந்த கருத்துப் பெருக்கு உணர்ச்சி வெள்ளத்தில என்ன தோணிச்சுன்னா, ராம் லல்லா சொல்றதா பட்டுது, இனி பொற்காலம் தொடங்கியாச்சு.  

பாரதத்துக்கான நல்ல காலம் வந்தாச்சு.  பாரதம் முன்னேறிக்கிட்டு இருக்கு.  அதோட 140 கோடி நாட்டுமக்களோட கனவுகளை அவரோட கண்கள்ல காண முடிஞ்சுது.  நான் நம்பறேன் என்னைப் பொறுத்த மட்டில இது பெரிய கணம், இந்த மாதிரியான இப்படி ஒரு கணம்… என் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப… அரிதான ஒண்ணு.   ஆனா அந்தக் கணம்…., பிறகு ஆரத்தி மாதிரியான சடங்குகளை, பக்தி உணர்வோட நான் செஞ்சுக்கிட்டு தான் இருந்தேன்.  ஆனா தனிப்பட்ட வகையில அனுபவிச்சுக்கிட்டே இருந்தேன்.  அதை… என்னால சொற்கள்ல வடிக்க இயலாது. 

Question on his visit to Srirangam and Rameshwaram during the 11 day anushtan.

பாருங்க திருவரங்கத்தில, எனக்கு கம்பராமாயணத்தை, கேட்கக்கூடிய பாக்கியம் கிடைச்சுது.  அங்க விபரம் தெரிஞ்சவங்க என்கிட்ட சொன்னாங்க, அதாவது கம்பராமாயணம் முதமுறையா அங்க தான் படிக்கப்பட்டதாம்.  அதே மண்டபத்தில, கம்ப ராமாயணத்தைக் கேட்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைச்சுது.  அங்க எத்தனை பேர் இருந்தாங்களோ, அவங்க எல்லார் கண்கள்லயும் கண்ணீர் கசிஞ்சிட்டு இருந்திச்சு.  அதிக உணர்ச்சிப் பெருக்கு நிறைஞ்ச சூழல் அது.  யாருக்கெல்லாம் கம்ப ராமாயணம் பத்தின, விஷயங்கள் தெரியுமோ, தோற்றம் அப்புறம் அப்ப இருந்த தாக்கம், அது எனக்கு… எனக்கு அது.. சைதன்ய பாவமா இருந்திச்சு.  அதில… புதிய அழகுகளைச் சேர்க்கற வல்லமை, இப்படியா, நான் திருவரங்கத்தில அனுபவிச்சு உணர்ந்தேன். 

Question on accusation that all these were planned close to elections for an impact.

நீங்களே கவனிங்க, உச்சநீதிமன்றத்தோட தீர்ப்பு வெளியாச்சு.  அதன் அடிப்படையில ராமர் கோயில் கட்டப்படுவது தொடங்கப்பட்டிச்சு.  அதைக் கட்டறவங்க வேற நபர்கள், அறக்கட்டளை வேற, ஒரு வேளை இந்த கட்டத்தை, இறைவனே முடிவு செஞ்சிருக்கலாம்.  இல்லைன்னா… அதே நேரத்தில உச்சநீதிமன்றத் தீர்ப்பு வர்றது, அதன் பிறகு கட்டுமானம் தொடங்கப்படுறது, அதன் பிறகு ராம் லல்லாவோட, பிராண பிரதிஷ்டை நடக்கறது.  இதில எங்கயுமே மனிதனோட தலையீடே தெரியலை ஏன்னா, இதெல்லாம் ஒண்ணொண்ணா நடக்குது இதில, தீர்ப்பளிச்சவங்களுக்கும் தெரிஞ்சிருக்காது, 2024 தேர்தலுக்கு முன்னால பிரச்சனை வரும்னு. 

Question that Ram and Ram Mandir will not have traction in TN and only in North.

நல்ல அருமையான கேள்வி கேட்டிருக்கீங்க.  ஒரு வேலை பண்ணுங்க, இந்தியாவுல இருக்கற கிராமங்களோட பட்டியல் இருக்கில்லையா, அதில பாருங்க.  இந்த தேசத்தில, இராமனோட தொடர்புடைய கிராமங்களோட பெயர்கள், இப்ப இராமநாதபுரம்.  ஒட்டுமொத்த தேசத்திலயும், ஒரு மாநிலத்தில எல்லாரையும் விட அதிகமா, கிராமப்பெயர்கள்ல இராமன் இணைஞ்சிருக்கான்னா, அது தமிழ்நாட்டில தான்.  (சிரிப்பு). 

ஏன் அயோத்திக்குப் பக்கத்தில கூட இராமன் பெயரோட, இணைஞ்ச இத்தனை கிராமங்கள் இல்லை.   அதிகமா தமிழ்நாட்டுல தான் இருக்கு.  இப்ப நீங்களே சொல்லுங்க, இப்ப ஒருத்தர்… இப்படி சொன்னார்னா அவருக்கு ஞானம் இல்லைன்னு சொல்லவா வேற என்ன சொல்ல?  இதுக்க் என்ன அர்த்தம்னா அவருக்கு தமிழ்நாடு பத்திக்கூட தெரியலை.  தமிழ்நாட்டோட இந்த மகத்தான பாரம்பரியம் தெரியலை.  (சிரிப்பு) இராமனோட பெருமை ஒருபக்கம் இருக்கட்டும்.  நீங்க தெற்குப்பக்கம் போய் பாருங்க அதிகபட்ச பெயர்கள், இராமனோட இணைஞ்சதா இருக்கும். 

Question on PM’s love for his mother and his dedication to his work.  On the perceived conflict.

இதுக்கான பாராட்டு மோதிக்குக் கிடையாது.  இதுக்கான பாராட்டு மகனுக்கும் கூட கிடையாது.  இதுக்கான எல்லா பாராட்டும் அந்தத் தாய்க்கே தான் சொந்தம்.  அவங்க தான் என்னை உருவாக்கினாங்க.  நான் ஒரு உதாரணம் சொல்றேன்.  அவங்களுக்கு 100 வயசான போது, அப்ப நான்… அம்மாவை பார்க்கப் போனேன்.  அவங்களோட 100ஆவது பிறந்த நாள். 

நான் அம்மாவை சந்திச்ச போது, முத கேள்வி என்ன தெரியுமா?  ஏன்பா, வேலையை விட்டுட்டு வந்துட்டியா?  எப்ப வந்தே?  நீ சீக்கிரமா திரும்பி போயாகணும்.  இதைத் தான் அவங்க… அப்ப பேசினாங்க.  பிறகு, நான் அவங்க கிட்ட, பிரார்த்தனை செஞ்ச பிறகு சொன்னேன், நான் கிளம்பறேன்னு.  எனக்கு ஏதாவது கொஞ்சம்… செய்தி என் அம்மா, பள்ளிக்கூடம் போனதில்லை.  அவங்களுக்கு படிப்பறிவு இல்லை.  அவங்களுக்கு எந்த… புத்தகம் பத்தி ஒண்ணுமே தெரியாது.    வாழ்க்கை முழுக்க வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க.  சொன்னேன் அம்மா… எனக்கு ஏதாவது.      அவங்க அப்ப சொன்ன ரெண்டு வாக்கியங்கள், அது ஒருவேளை, யாரை வேணா, ஆச்சரியப்படுத்தலாம்.   அவங்க சொன்னாங்க மகனே, புத்தியைப் பயன்படுத்தி, வேலையைச் செய்யி.  வாழ்க்கை வாழு, ஒழுக்கத்தை நம்பி.   எவங்க கொஞ்சமும், படிப்பறிவே இல்லாதவங்களோ, 100 வயசு நிறைவடைஞ்சவங்களோ, அவங்களுக்கு இவன் பிரதமரா இல்லையாங்கறது பத்தியெல்லாம் கவலையில்லை.  ஒண்ணுமில்லை…. அவங்க எப்பவுமே ஒரு விஷயம் சொல்லுவாங்க. 

இந்தா பாருய்யா, யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது, ஏழைகளுக்கு நல்லது பண்ணனும்.  நேரத்தைப் பொறுத்தவரை அவங்க நினைப்பு எப்பவுமே நீ, உன் வேலையைப் பாரு.  என்னைப் பத்தி கவலைப்படாதே.   இறைவன் விதிச்ச அளவுக்கு, நான் வாழுவேன்.  எனக்காக உன் நேரத்தை வீணடிக்காதே. 

இது தான் நற்பண்புகள்.  எனக்குப் பட்டிச்சு, அம்மாவுக்கு விடை தருவது கூட, அதே வேளையில இது அரசியலாக்கப்படுவதுல எனக்கு உடன்பாடில்லை.  அம்மா இறந்த செய்தி கிடைச்சவுடனேயே நான் காலையில 6 மணிக்கெல்லாம் புறப்பட்டு வந்துட்டேன்.  உடனடியா தகனக் கிரியைகளைச் செஞ்சோம், எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க தான் இருந்தாங்க, வெளியிலிருந்து யாருமே இல்லை இல்லைன்னா, பிரதம மந்திரியோட அம்மான்னு சொன்னா பெரிய கூட்டம் கூடும். 

நம்ம தேசத்தில அரசியல்னு சொன்னா இது தான் வழக்கம்.  எங்கம்மா ரொம்ப எளிமையான வாழ்க்கை தான் வாழ்ந்தாங்க.  அதே மாதிரியே அவங்க மரணமும்.  நான் என்னோட, வாடிக்கையான நிகழ்ச்சிநிரல் இருந்திச்சு.  நான் உடனடியா வேலைக்கு போயிட்டேன். 

Question on the Foreign Policy Front.  Your top 3 foreign policy achievements?

முத விஷயம் என்னென்னா இந்த டாப் 3 டாப் 5 டாப் 10 எல்லாம், ஒண்ணு அறிவாளிகள் தரணும், இல்லைன்னா நாட்டுமக்கள் தரணும்.  நான் எனக்கு நானே, டாப் 3ன்னு …. தேடிப் பிடிக்க விரும்பலை ஏன்னா, என்னைப் பொறுத்த வரை எல்லா வேலையும் டாப்பாவே இருக்கும்.  ஒரு வேளை மொத்த காட்சியில அது சின்னதா தெரியலாம். 

ஆனா அந்தச் சின்ன வேலையும் கூட பெரிசாவே இருக்கும்.  ஆகையினால நான் எல்லா பணிகளையும், அதிக மகத்துவமானதாவே நினைக்கறேன்.  உலகத்தில ரொம்ப சின்ன தேசத்தையும் கூட, அதே அளவு மகத்துவமானதா நினைக்கறேன்.  உலகத்தில பெரிய நாடுகளுக்குன்னு தனி அளவுகோல் இல்லை.  நீங்க ரொம்ப தெளிவாவே பார்க்கலாம் இன்னைக்கு உலகத்தில, பாரதத்துக்குன்னு ஒரு அடையாளம் ஏற்பட்டிருக்கு.  உலகின் நண்பன்.  விஸ்வபந்து. 

இன்னைக்கு உலகில ஏற்பட்டிருக்கற உணர்வு, பாரதம் அவங்களோட சகோதரன்னு.  உலகின் நண்பன்ங்கற வகையில பாரதம் அறியப்படுது.  கோவிட் பெருந்தொற்று, மருந்து தேவை, நம்ம… பாரதம் அளிக்கும்.  தடுப்பூசி தேவை, நம்ம பாரதம் தரும்.  ஜி20 உச்சிமாநாட்டுல ஆப்பிரிக்காவை இணைக்கறது, ஆப்பிரிக்காவுக்கும் நம்பிக்கை பாரதம் கிட்ட போச்சுன்னா நமக்கு வாய்ப்பு கிடைக்கும்ன்னு. 

இந்தியா மீதான இந்த நம்பிக்கை உலகத்தில, இதை, எப்படி தரவரிசைப்படுத்துவீங்க?  உலக நாடுகள் எல்லாத்துக்கும் நம்பிக்கை.  ஆகையினால இது தான் என்னோட கருத்து.  இரண்டாவதா பாருங்க, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே நெருக்கடி ஏற்படும்.  ஆனா பாரதம் அமெரிக்காவுக்கும் நண்பன் ரஷியாவுக்கும் நண்பன்.  ஒரு தேசத்துக்கு எதிரா இன்னொரு தேசம் இப்ப பாலஸ்தீனம் இஸ்ரேலை எடுத்துக்குங்க.  பாலஸ்தீனயர்களுக்கும் மோதியோட அதே அளவு நெருங்கின பந்தம்.  மேலும்… இஸ்ரேலோடவும் அதே அளவு சொந்தம்.  இப்ப நாம…. ஒரு வகையில, பாரபட்சம் இல்லாம, உலக நன்மைக்காக சிந்திக்கற மனிதர்கள் நாம.  மேலும் பாரதத்தோட நலனுக்கே முதன்மை அளிச்சுப் பயணிக்கறவங்க.  40.47

Question on the accusation of the opposition that the Modi government is pro corporate and anti poor.

பண்டித நேருவோட, ஆட்சிக்காலத்தை நீங்க, பார்த்தீங்கன்னு சொன்னா, அல்லது காங்கிரசோட ஆட்சிக்காலத்தை பார்த்தீங்கன்னா, நம்ம தேசத்தில கூற்று ஒண்ணு பேசப்பட்டு வந்திச்சு.     எதிர்க்கட்சிகள் அதிக அளவுல அந்தக் கூற்றை சொல்லி வருவாங்க.   மேலும், இடதுசாரிகள் பிறகு சமாஜ்வாதி கட்சிக்காரங்க நேரடியாவே சொல்லுவாங்க.  இது ஒரு, டாடா பிர்லாவுக்கான அரசு.  இது டாடா பிர்லாவுக்கான அரசுன்னு.  நாடாளுமன்றத்திலயும் கோஷம் எழுப்புவாங்க…. டாடா பிர்லா அரசு இருக்க முடியாது டாடா பிர்லா அரசு இருக்க முடியாதுன்னு (சிரிப்புடன்). 

இந்த நோய், ரொம்ப காலமா தொடர்கதையா இருக்கு.  இது இவங்களோட, கருத்தியல் ரீதியா, கையாலாகாத நிலை.  மேலும் இந்த இடதுசாரி கூற்று இருக்கே, அதில வாழ்ந்து பழகிட்டாங்க.  ஆனா வசவுகளை வாங்கின காங்கிரஸ் கட்சி, இப்ப வைய்ய ஆரம்பிச்சிருக்காங்க.  இப்ப காங்கிரஸ், எங்கிருந்து எங்க வந்திருக்காங்க,  இதிலேர்ந்து நீங்க, நல்லா புரிஞ்சுக்கலாம்.  இப்ப…. இவங்க சொல்ற இந்த குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை, தர்க்கரீதியா குடுக்கலாமா தரவுகளா குடுக்கலாமா?   தர்க்கரீதியா என்னால குடுக்க முடியும். 

முழுமையான வகையில இப்படிப்பட்ட விஷயங்களை தவிடுபொடியாக்கலாம்.  ஆனா அப்படி செய்ய நான் விரும்பலை.  நான் தரவுகளை மட்டும் அளிக்க விரும்பறேன்.  அது போல நீங்களும், தரவுகள் அடிப்படையிலேயே தீர்மானிங்க, இந்த… அரசு யாரோடதுன்னு.  இந்த தேசத்தில, 80 கோடி மக்களுக்கு, கோவிட் காலத்திலேர்ந்து இப்ப வரை, இலவச ரேஷன் பொருள் கொடுக்கப்பட்டு வருது.  இவங்க எல்லாம் இந்த தேசத்தோட, பணக்காரங்களா?  கார்ப்பரேட்காரங்களா?  இந்த தேசத்தில, 50 சதவீத மக்கள் எப்படி இருந்தாங்கன்னா, அவங்களுக்கு வங்கிக் கணக்கே கிடையாது.    

மோதி அவங்களுக்கு வங்கிக் கணக்கை ஏற்படுத்தினாரு.  இது, கார்ப்பரேட்டுக்கான வங்கிக் கணக்கு இல்லை.  இது பணக்காரங்களோட வங்கிக் கணக்கு இல்லை.  ஏழைகளோட வங்கிக் கணக்கு.     இந்த தேசத்தில, இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் எப்படின்னா, இவங்க வீடுகள்ல மின்சாரம் இருக்கலை.   அவங்க, சீமெண்ணை அதாவது கெரோசீனை பயன்படுத்தி விளக்கேத்தி, வாழ்ந்தாங்க.  2014இல இது தான் நிலைமை.   மோதி இந்த இரண்டரை கோடி குடும்பங்களோட வீடுகள்ல மின்சாரத்தைக் கொண்டு சேர்த்தாரு. 

இவங்க என்ன கார்ப்பரேட்காரங்களா?  இவை பணக்காரங்க வீடுகளா?   என் தேசத்து சகோதரிகள் தாய்மார்கள், கழிப்பறைகள் இல்லாத நிலையில, துன்பத்துக்கு ஆளானாங்க.   ஒண்ணு, சூரியன் உதிக்கும் முன்னால போக வேண்டியிருந்திச்சு, காடுகள்ல, சொம்பை எடுத்துக்கிட்டு, இல்லை சூரியன் மறைஞ்ச பிறகு போக வேண்டியிருந்திச்சு.   பகல் முழுக்க போக முடியாதபடி அவங்க உடம்புல எத்தனை வலிகள் துன்பங்கள் இருந்திருக்கும்!!  தாய்மார்கள் சகோதரிகளோட துன்பத்தை மோதி துடைச்செறிந்திருக்கான்.  மேலும் 11 கோடிக்கும் அதிகமா கழிப்பறைகள் கட்டப்பட்டன.  இதை ஒருவகையில வட பாரதத்தில இதை, கௌரவ வீடுங்கறாங்க.  டாய்லெட்னு சொல்றதில்லை…. ஏன்னா தாய்மார்கள் சகோதரிகளுக்கு மரியாதை தந்திருக்கு. 

இந்தப் பணிகள் எல்லாம், தன்மானம் அளிக்குது.   பெண்கள் சுயவுதவிக் குழு, இது என்ன கார்ப்பரேட் உலகத்துக்கானதா?  பணக்காரங்களுக்கானதா?  பத்துக் கோடி சகோதரிகள் இணைஞ்சிருக்காங்க.  அதில மோதியோட இலக்கு என்ன?  3 கோடி…. பெண்கள் சுயவுதவிக் குழுவோட சகோதரிகளை, நான் லட்சாதிபதி தீதியாக்குவேன்.  இவங்க எல்லாரும், கார்ப்பரேட்காரங்களா?  இவங்க பணக்காரங்களா? 

ஆயுஷ்மான் பாரத் திட்டப்படி இந்த தேசத்தின் 50 கோடி மக்களுக்கு, 5 இலட்சம் ரூபாய் வரை, இலவச சிகிச்சை வசதி.  இவங்க மேல அக்கறை இருந்திச்சு.  50 கோடி நபர்கள் இதோட பயனாளிகள்.  இந்த 50 கோடி நபர்கள் கார்ப்பரேட்காரங்களா?  இல்லை இவங்க பணக்காரங்களா இந்த தேசத்தில?   இந்த தேசத்தில, 80 சதவீத வீடுகள் எப்படி இருக்குன்னா, இவங்க தண்ணி கொண்டுவர ரொம்ப தொலைவு போக வேண்டி இருக்கு.  இன்னைக்கு, குழாய்வழி குடிநீர், கிட்டத்தட்ட 12-15 கோடி வரை, கொண்டு சேர்த்திட்டு இருக்கோம்.  வீட்டில இருக்கற குழாயைத் திறந்த தண்ணி கிடைக்கும்.  எரிவாயுவான அடுப்பு எரியுது.  என்னால இப்படி 100 விஷயங்களை பட்டியலிட முடியும்.  இவை, என்னோட தேசத்தின் ஏழைகளுக்கு சமர்ப்பணம். 

அதோட இவை, சமூகரீதியானது மட்டுமில்லை.  பூகோளரீதியாவும் கூட.   இந்தியாவோட எல்லையோர கிராமங்கள் இருக்கில்லையா, இவற்றை கடைசி கிராமங்கள்னு சொல்லுவாங்க.  மோதி இதை முதல் கிராமங்கள்னு சொல்லுவேன்.  அது கடைசி கிராமம் இல்லை, முதல் கிராமம்.  என்னோட அமைச்சர்களை அங்க இரவு தங்கவும் செஞ்சிருக்கேன்.  என்னோட 15 அமைச்சர்கள், இந்த கிராமங்களுக்குப் போய் இரவை அங்க கழிச்சுட்டு வந்திருக்காங்க. 

ஏன்னா அந்த கிராமங்களை துடிப்பானவையா ஆக்கணும்.  நம்மோட தேசத்தில 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களை எடுத்துக்கிட்டீங்கன்னா, அவை எல்லா அளவீடுகள்லயும் பின் தங்கிப் போயிருக்கு.  நாங்க பேரார்வமுடைய மாவட்டங்களாக்கினோம்.  40 அளவீடுகளை நாங்க தீர்மானிச்சோம், இந்த 100 மாவட்டங்களையும் நாங்க, மாநில சராசரியை விட உயர்வா மாத்துவோம், தேசிய சராசரிக்கு நிகரா ஆக்குவோம்.  இவை, பணக்காரங்களோட மாவட்டங்களா?  இவை சீமான்களுக்கு சொந்தமானவையா? 

என்னோட ஒவ்வொரு திட்டத்தையும் கவனிங்க மேலும் என் வேலையில சிறப்பம்சம் டெலிவரி.   நாங்க தீர்மானிச்சோம்னா, தில்லியில உட்கார்ந்துக்கிட்டு ரிப்பனை வெட்டிட்டு புகைப்படத்துக்கு போஸ் குடுத்துட்டுப் நிக்கறதில்லை.   அவங்க வீட்டில விளக்கு எரியற வரை சளைக்கறதில்லை.   ஆகையினால, அவங்களோட, நினைப்புல குறைபாடு இருந்தா அதுக்கு நான் என்ன செய்ய?  

ALSO READ:  கோகுலாஷ்டமியும் கிருஷ்ண ஜயந்தியும்!

Question on weaponization of CBI, ED and others to target the opposition politically.

பாருங்க, ஈடி தொடர்பா நீங்க சொல்றீங்க.  இப்ப இந்த ஈடி நாங்க பொறுப்பேத்த பிறகு ஏற்படுத்தப்பட்டதா?  இல்லை.  பிஎம் எல் ஏ சட்டம் என்ன நாங்க இயற்றின சட்டமா?  இல்லை.  முன்னமே இருந்திச்சு.  இப்ப கேள்வி என்னென்னா, ஈடி என்ன பணியாற்றினாங்க?  இது சுதந்திரமான அமைப்பு, சுதந்திரத்தோட செயல்படுது, நாங்க அவங்களை தடுக்கறதுமில்லை, நாங்க அவங்களை அனுப்பறதுமில்லை.  அவை தன்னிச்சையா செயல்படணும், நீதிமன்றத் தராசுல சரின்னு நிரூபிக்கணும்.  நாங்க… இதில எந்தத் தொடர்பையும், ஏற்படுத்திக்க சுத்தமா விரும்பலை.  இப்ப பாருங்க என்ன ஆச்சுன்னு?  இப்ப ஈடி கிட்ட, கிட்டத்தட்ட 7000 வழக்குகள், இருக்கு.  செவன் தவுசண்ட்.   இதில அரசியல்வாதிகளோட தொடர்புடைய வழக்குகள் வெறும், 3 சதவீதத்துக்கும் குறைவுங்க.  ஏழாயிரம் வழக்குகள்ல, அரசியல்வாதிகளோட தொடர்புடையவை 3 சதவீதத்துக்கும் குறைவு. 

அடுத்ததா, நீங்களே பாருங்க, அவங்க ஆட்சி செஞ்ச காலத்தில, அவங்க கிட்ட 5-10 ஆண்டுகள்ல, அவங்க கைப்பற்றின ரொக்கம், அது கிட்டத்தட்ட வெறும் 35 இலட்சம்.    நாங்க கைப்பத்தின ரொக்கம், அது கிட்டத்தட்ட 2200 கோடி ரூபாய் டூ தவுசண்ட் டூ ஹண்ட்ரட் கோடிகள்.  அப்படீன்னா, இந்த அமைப்புடைய, செயல்பாடுகள் வெளிய கசியறதில்லை.   அப்பத்தான் இதையெல்லாம் பிடிக்க முடியும். 

நீங்களே பாருங்க, கட்டுக்கட்டா ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்படுது.  வாஷிங் மெஷின்ல பணம் வைக்கப்பட்டுக் கூட பிடிக்கப்படுது.  வீடுகள்ல குழாய்கள் தண்ணீர் குழாய்களை, உடைச்சா அதில ரூபாய் கட்டுக்கள்.  படுக்கையில அடுக்கடுக்கா நோட்டுகள்.  காங்கிரசோட ஒரு எம்பி வீட்டில, 300 கோடி ரூபாய் கிடைச்சுது.  வங்காளத்தில, அமைச்சர்களோட வீடுகள்ல, பணக் குவியலே கிடைச்சுது.  இது தெளிவாத் தெரியற போது நாட்டுமக்கள், இந்த விஷயங்களை, சகிச்சுக்கத் தயாரா இருக்காங்களா?  நான் இல்லைன்னு கருதறேன். 

நாட்டுமக்கள் என்ன சொல்றாங்கன்னா இந்த நோய் ஒழிக்கப்படணும்னு.  இவங்க தவறு செஞ்சு சேர்த்த பணம்.  அமைப்புகள் வங்காளத்தில, கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாயை ஜப்தி செஞ்சிருக்காங்க.  அது யாரோட பணம்?   யாரோ ஒருத்தருக்கு…… கிளார்க் வேலை வாங்கித் தர்றேன், இத்தனை பணம் குடு.  யாருக்காவது நான் ஆரம்பநிலை ஆசிரியர் வேலை வாங்கித் தர்றேன் இத்தனை பணம் குடு.  யாருக்காவது ஓட்டுநர் வேலைக்கு இத்தனை பணம் குடு. 

இந்தப் பணமெல்லாம் அப்படித் தான்.  நான் இப்ப சட்ட ஆலோசனை கேட்டிருக்கேன், யாரோட பணம் பறிபோயிருக்கோ எந்த ஏழைகளோட பணம், அதை அவங்களுக்குத் திரும்ப குடுக்க முடியுமான்னு?  நான் இதை ஆய்வு செய்ய சொல்லியிருக்கேன்.  இதுக்கு முன்னால, இந்த மாதிரி கிடைச்சு பறிமுதல் செஞ்ச சுமார் 17,000 கோடி ரூபாயை நாங்க திரும்ப உரியவங்க கிட்ட குடுத்திருக்கோம். 

ஏற்கெனவே.  யாருக்கு உரிமை இருக்கோ அது ஈடிக்குத் தெரியும்.  இவங்களோட பணங்கறதுக்கு தடயம் இருக்கு.   அதைத் திரும்ப குடுத்திருக்கோம்.  ஈடி கிட்ட போன பணம் திரும்ப அவங்களுக்குக் கிடைக்கும் போது, அவங்க ஈடிக்கு வாழ்த்து சொல்றாங்க.

Question on why ED goes after only opposition and not BJP politicians.

அது என்னென்னா இதுவும் அரசியல்வாதியோட வழக்கு தான் வழக்கு நடக்கும்.  இப்ப நீங்களே சொல்லுங்க, இவங்களோட வழக்கை ஈடி மூடிருச்சுன்னு ஒரு வழக்கைச் சொல்லுங்க!!  ஈடியோட வழக்குன்னா, ஈடி தானே ஒரு வழக்கை ஏற்படுத்த முடியாது தெரியுமில்லையா?  தேசத்தின் பல்வேறு அமைப்புகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாத வரை, ஈடியால எதுவுமே செய்ய முடியாது சட்டம் ஈடியைத் தடுக்குது. 

இவங்க எப்படிப்பட்டவங்கன்னா, பத்து ஆண்டுகள் வரை பி எம் எல் ஏ சட்டம் முன்னயே இருந்திச்சு.  அதை இவங்க பயனே படுத்தலை.  150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாச்சு… பி எம் எல் ஏ சட்டத்தை முடிவு கட்டுன்னு,  தடை செய்னு.   யாரோ அதிகாரியோட இடமாற்றத்தைத் தடுக்க,  உச்சநீதிமன்றம்.  யாரோ அதிகாரியை அகற்ற, உச்சநீதிமன்றம். 

அதாவது ஈடி பணியாற்றாம இருக்கணுங்கறதுக்காக, நீதிமன்றங்களை ஒரு மிகப்பெரிய, ஆயுதமா பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  அவங்களுக்கு நல்லா தெரியும், அதாவது ஊழலுக்கு எதிரா மோதி தொடுத்திருக்கற போர், அது நிக்கப் போறது இல்லைன்னு.  அதனால இவங்களுக்கு என்ன தோணுதுன்னா இந்த அமைப்புக்கே சட்டரீதியா முடிவு கட்டிட்டா, மறுபடி, இந்த தேசத்தில ஊழல் விஷயத்தை, யாரும் கிளற முடியாது, யாரும் போராட மாட்டாங்க. 

Question on whether Modi ji talking about decades old corruption charges upon the Congress in the rallies still resonates with the masses?

இப்ப இந்தியாவோட சாதாரண குடிமக்கள் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க, இந்த ஊழல்ங்கற நோய் முன்னமேயே தடுக்கப்பட்டிருந்தா, தேசம் எங்கயோ போயிருக்குமே!!  அப்படியே யாராவது நினைச்சா, ஊழல் அப்பத் தானே நடந்திச்சு அதைப் பத்தி இப்ப பேசி என்ன பயன்னாங்கன்னா, இந்த தேசத்தில…… துர்பாக்கியம் என்னென்னா, சிலர் ஒரு தத்துவத்தையே ஏற்படுத்தியிருக்காங்க, எந்த ஒரு கவலையும் படவேண்டாம் ஊழலுக்காக சிறைக்கும் போயிருக்காங்க.  அப்படிப்பட்டவங்களை மேடையில உட்கார வச்சு, தேசத்துக்கே…. வழிகாட்ட முயற்சி செய்யப் போறாங்களாம் இவங்க.   நீங்க ஆச்சரியப்படுவீங்க இப்ப எல்லாம் ஊழல்வாதிகளைக் காப்பாத்த பேரணிகளே நடத்தப்படுது. 

அந்த வகையில, ஒருபுறம் இருக்கறவங்க, அவங்க மந்திரச் சொற்கள், ஊழல்வாதிகளைக் காப்பாத்து.  இன்னொரு புறம் இருக்கறது மோதி, என்னோட மந்திரச் சொல், ஊழலை அகற்று.  இன்னொண்ணையும் நீங்க கவனிச்சிருக்கலாம், ஈடி மேற்கொண்ட ரெய்டுகள், போதைப் பொருள்காரங்க, மிகப்பெரிய அளவுல அவங்க….. சிறைகள்ல இருக்காங்க.  மிகப்பெரிய சங்கடத்தில தமிழ்நாடு இருக்கு, அது போதைப் பொருளால தான். 

அதோட ஈடியானது, போதைப் பொருளுக்கு எதிராவும் நடவடிக்கை மேற்கொண்டிருக்கு.  மிகப் பெரிய அளவுல, பண மோசடியில, போதைப்பொருள்காரங்க இணைஞ்சிருக்காங்க.  இப்ப சொல்லுங்க குழந்தைகளை, போதைப் பொருள் கிட்டேர்ந்து காப்பாத்தணுமா கூடாதா?   பண மோசடிக்காகத் தானே போதைப் பொருள்?  அந்த பண மோசடிக்கு எதிரா ஈடி செயல்பட்டா, இவங்களுக்கு ஏன் கோவம் வருதுங்க? 

Question on whether electoral bonds have caused an embarrassment to BJP.

எங்களுக்குப் பின்னடைவு ஏற்படுற வகையில நாங்க என்ன செஞ்சோம்னு சொல்ல முடியுமா?   இந்த விஷயத்தில குதூகலிக்கறவங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன்.  கவனமா கேளுங்க.  அவங்க வருத்தப்படப் போறாங்க.  நான் இந்த மேதாவிகள் கிட்ட ஒரு விஷயத்தைக் கேட்க விரும்பறேன். 

இந்த 2014க்கு முன்னால நடந்த தேர்தல்கள்ல, தேர்தல்ல செலவு ஆகும் இல்லையா?  செலவு இல்லாம இல்லையே!!   பணம் எங்கிருந்து வந்திச்சு எப்படி செலவாச்சு எங்க போச்சுன்னு எந்த அமைப்பாலயாவது சொல்ல முடியுமா?  தரவு இருக்கா?  இந்த எலக்டோரல் பாண்டை மோதி உருவாக்கியிருக்கேன்.  இது காரணமாத் தானே தேடிப்பிடிக்க முடியுது, பணம் பாண்டை யாரு வாங்கினாங்க எங்க குடுத்தாங்கன்னு.  இல்லைன்னா முன்ன யாருக்குமே தெரியாதே!! 

தேர்தலுக்கு செலவு ஆச்சே!!  இன்னைக்கு எலக்டொரல் பாண்ட் இருக்கறதால தடயம் கிடைக்குது.  எந்த ஒரு அமைப்பும் முழுமையா இருக்காது குறைகள் இருக்கலாம்.  அந்தக் குறைகளை நிறைவு செய்யலாமே!!   குறைஞ்சபட்சம் எலக்டொரல் பாண்ட் இருக்கறதால பணம் எப்படி வருது என்ன ஆச்சுங்கற தடயமாவது இருக்குமே!! 

Question on whether you are well ahead because of your strengths or the weakness of the opposition?

பாரதத்தினுடைய, நான்கு முக்கியமான பிரிவுகள், இந்த தேசத்தின் ஏழைகள், இந்த தேசத்தின் இளைஞர்கள், இந்த தேசத்தின் பெண்கள், இந்த தேசத்தின் விவசாயிகள்.  என் கருத்தில இவங்க தான் மிகப்பெரிய சாதிகள்.  அவங்களுக்கு என்ன படுதுன்னா கடந்த பத்தாண்டுகள்ல, அவங்களோட பேரார்வங்கள் அக்கறையோட அணுகப்பட்டிருக்குன்னு.  அவங்க பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்குன்னு.  அவங்களுக்கு என்ன தோணுதுன்னா, அவங்களோட பேரார்வங்கள் நிறைவேறணும்னா, இதே வேகத்தில தேசம் முன்னேறியாகணும். 

மேலும் இந்த அரசியல் ஸ்திரத்தன்மை இருந்தா, அதே போல பிஜேபி எண்டியேவுக்கு பலம் கிடைச்சா, அதே போல மோதிக்கு பலம் கிடைச்சா, அப்ப இந்தப் பணி பல மடங்கு அதிக வேகத்தில அதிகரிக்கும்.  ஆகையினால தான், இன்னைக்கு, மொத்த தேசத்திலயும், ஆக்கப்பூர்வமான சூழல், இன்னைக்கு தேசம் முழுவதும் வளர்ச்சியடைந்த பாரதங்கற இலக்கோடு இணைஞ்சிருக்கு.  அதை அவங்க நிறைவேத்த விரும்பறாங்க. 

Question on whether as a successful politician any idea for the Congress can be shared?

அது என்னென்னா, மத்தவங்களுக்கு நான், ஆலோசனையோ…  அறிவுரையோ சொல்ற அளவுக்கு, என்னைப் பத்தி, நானே ரொம்ப உயர்வா எல்லாம் நினைச்சுக்கறது கிடையாது. (சிரிப்புடன்)  ஆனா அரசியல்ல ஒரு மாணவன்ங்கற வகையில என் புரிதலுக்கு உட்பட்டு, காங்கிரசுக்கு உள்ளயும் கூட, ரொம்பவே மூத்தவர்கள் இன்னைக்கும் இருக்காங்க. 

அவங்க அனுபவசாலிகள்.  காங்கிரசோட அடிப்படை சித்தாந்தம் கோட்பாடுகள் மேல, அர்ப்பணிப்பு உடையவங்க.  அவங்க காங்கிரஸை மட்டுமே சேர்ந்தவங்க.  அவங்களோட இந்த, மூத்த தலைவர்கள், இன்னைக்கு ஓரம் கட்டப்பட்டிருக்காங்க.  அவங்க சொல்றதை கேட்டா மட்டும் போதும், புரிஞ்சுக்கிட்டா போதும், அப்பவும் காங்கிரசுக்கு நல்லது நடக்கும்.  என்னோட ஆலோசனை காங்கிரசுக்கு அவசியமே இல்லை.  அவங்க கிட்ட ரொம்ப நல்ல நபர்கள் இருக்காங்க.  அவங்க சொல்றதை காது கொடுத்துக் கேட்டாலே போதும் காங்கிரஸ் நல்லாயிடும். 

Question on dynastic politics and whether the charge against it is being taken seriously by the people?

முத விஷயம் என்னென்னா நம்ம தேசத்தில, காங்கிரஸ் காலத்தில ஃபேஷனா இருந்திச்சு.  பாரதத்தில மோசமா நடந்தா, அடப் போய்யா உலகத்திலயே இப்படி இருக்கு. சரியில்லை.  இந்த வழிமுறை சரியில்லை.  பாரதம் எத்தனை பெரிய ஜனநாயக நாடு!!  எத்தனை மக்கட்தொகை!!  எத்தனை பன்முகத்தன்மை!!  எல்லாருக்கும் பேரார்வம் இருக்கு.  இதை 4-5 குடும்பங்களால இதை சமாளிக்க முடியுமா? 

உண்மையான ஜனநாயக முறையில தேர்ந்தெடுக்கப்படணும், அப்பத்தான் மக்களோட ஆசைஅபிலாஷைகளை நிறைவு செய்ய முடியும்.  இரண்டாவதா, நம்ம தேசத்தில ஒரு மிகப்பெரிய பிரமை என்னென்னா, ஐயா ஏதோ ஒரு குடும்பத்திலேர்ந்து, ஒண்ணுக்கு மேற்பட்டவங்க அரசியல்ல இருந்தாத் தான் என்ன?  நான் எப்பவுமே இப்படி சொல்லலை, அதாவது ஒரு குடும்பத்தில ஒன்றுக்கு மேற்பட்டவங்க அரசியல்ல இருந்தா, அதை நான் குடும்ப அரசியல்னு சொல்றதில்லை.  அதிக அளவுல மக்கள் அரசியலுக்கு வரணும்னு தானே விரும்பறோம்.  அப்படியே ஒரு குடும்பத்தில பத்துப் பேர் வந்தாலும் அது தவறுன்னு நான் என்னைக்கும் சொன்னதில்லை.   

ஆனா, ஒரு அரசியல் கட்சியையே, ஒரு குடும்பம், உருவாக்குது, அந்தக் குடும்பமே, அதை இயக்குது, அதில ஒரு குடும்பமே தீர்மானிங்களை மேற்கொள்ளுது,   கட்சியில…… அடுத்த தலைமுறையில யாராவது வந்தா அவங்களும் அந்தக் குடும்பத்தவங்களா இருப்பாங்க.  அது தான் குடும்ப அரசியல் கட்சி.  இதில ஜனநாயகமே கிடையாது. 

இந்தக் கட்சியில என்ன தான் மேதாவியா புத்திசாலியா இருந்தாலும், முனைப்பான தொண்டன் இருந்தாலும் கூட அவங்களை வளர விட மாட்டாங்க.  இது ஜனநாயகத்துக்கு எதிரானது anti democratic.  ஆகையினாலே, உலகத்தில எங்க என்ன நடந்தாலும் அதன்படி பாரதத்தில தீர்மானிக்க முடியாது.  பாரதத்தோட முடிவுகளை அதன் எதிர்காலமான இளைஞர்கள் தான் தீர்மானிப்பாங்க.  பாரதத்தின் கிராமங்கள் தீர்மானிக்கும்.  பாரதத்தின் விவசாயிகள் தீர்மானிப்பாங்க.  எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள், குடும்ப அரசியல்ல…… கண்டிப்பா கிடைக்காது. 

Question about any message to CM of TN shri. MK Stalin.

நான் எந்த ஒரு செய்தியையும், அவருக்குத் தெரிவிக்கத் தேவையில்லைன்னு நினைக்கறேன் ஏன்னா இந்த முறை மக்களே அவருக்கு கடுமையான செய்தியை அளிக்க இருக்காங்க.  என்னோட செய்தி தேவையிருக்காது. 

Question on whether mission 400 is not too ambitious?

தேசத்தின் மக்களே தீர்மானிச்சாங்க, மோதி ஒண்ணும் தீர்மானிக்கலை.  தேசத்து மக்கள் தீர்மானிச்சாங்க.  தேசத்தின் மக்கள் முழுமையா நம்பறாங்க 30 ஆண்டுகள், ஸ்திரத்தன்மை இல்லாம தேசத்துக்கு பெரிய தீங்கு ஏற்பட்டிருக்குன்னு.  கடந்த பத்தாண்டுகள்ல ஸ்திரத்தன்மை காரணமா தேசத்துக்கு பெரிய நன்மை ஏற்பட்டிருக்கு.  எல்லா குடிமக்களுக்கும் தங்களோட வாக்கோட பலம் புரிய வந்திருக்கு.  என்னோட வாக்கோட பலத்தால என் வீட்டில கழிப்பறை ஏற்பட்டிருக்கு. 

என்னோட வாக்கின் பலத்தால ஏழைகளுக்கு உணவு கிடைக்குது.  என்னோட வாக்கின் பலத்தால, ஏழைகளுக்கு மருந்துகள் கிடைக்குது.  இது தேசத்தின் சாதாரண மக்களின் நம்பிக்கையாகியிருக்கு, மேலும் அவங்க விரும்பறாங்க, இது மகேசர்களான மக்களோட முடிவு.  மோதி ஒரு காரணம் மட்டுமே. 

Question on what is the expection from South India in achieving the goal of 400 plus?

முத விஷயம் என்னென்னா, மொத்த தேசத்திலயும், எங்களுக்கு பெரிய அளவுல மக்கள் ஆதரவு கிடைச்சு வருது.  நாங்க, அவங்களோட ஆசை அபிலாஷைகளை நிறைவேத்தற வகையில அதிக முனைப்போட செயல்படணும்.  என்னோட கவனம் முழுக்க அதுமேல தான் இருக்கு. 

Question on BJP rule in TN?  Is it possible in the near future?

முத விஷயம் என்னென்னா நான், தேர்தல்ங்கற கணக்கு அடிப்படையில அளவுகோல்ல தமிழ்நாட்டை அளவீடு செய்யறதே கிடையாது.   என்னைப் பொறுத்த மட்டில தமிழ்நாடு…… இந்த தேசத்தில அதிக திறமைகள் உடைய வலுவான அலகு.  அங்க இருக்கற மொழியாகட்டும் அங்க இருக்கற கலாச்சாரமாகட்டும் அங்க இருக்கற வாய்ப்புகளாகட்டும், என் பார்வையில வளர்ச்சியடைந்த பாரதக் கனவுல, தமிழ்நாட்டோட வல்லமை மிகவும் அவசியமானது.   அது தான் என்னோட கனவு. 

Question on guarantee for TN if Modiji wins another term.

வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக, வளர்ச்சியடைந்த தமிழ்நாடு.  தற்சார்பு பாரதத்திற்காக, மிகப்பெரிய நம்மோட பாதுகாப்பு, அது நம்ம தமிழ்நாட்டுல ஏற்படும் பாதுகாப்பு இடைவழி.  அது என்னோட மிகப்பெரிய உத்திரவாதம்.  நம்மோட துறைமுகத் துறை.  இப்ப தூத்துக்குடியில நான், ஒரு துறைமுகத்தோட, அடிக்கல் நாட்ட நான் வந்திருந்தேன்.  அது பெரிய திருப்புமுனையா ஆக இருக்கு.  எதிர்காலத்தில உலக, அளவிலான கப்பல் போக்குவரத்தில. அந்த வகையில…. நிறைய வேலைகள்… சுற்றுலா.   நான் பார்க்கறதில பாரதத்தில பெரிய அளவுல பயணிகள், தமிழ்நாட்டுக்கு வந்தாங்க.  மேலும் பாரதத்தில சுற்றுலா வேகமா வளர இருக்குது.  தமிழ்நாட்டுக்கு உத்திரவாதம் என்னால, அளிக்க முடியாத எந்த ஒரு துறையுமே கிடையாதுன்னு சொல்லுவேன். 

Question on whether Modi 4.0 can be expected to happen?

நீங்க 5, 6ன்னு என்ன வேணாலும் தாராளமா எண்ணிக்குங்க.  என்னோட நோக்கு 2047 மேல, அசையாம பதிஞ்சிருக்கு.  2047 வளர்ச்சியடைந்த பாரதம். 

பலப்பல நன்றிகள்.  வணக்கம்.  வணக்கம். 

தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version